சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீனா பதறிட்டாராமே.. "நான் இறந்தபிறகு".. புறா எச்சமும், அஸ்திக்கலசமும்.. அட நம்ம மீனாவா இது.. வாவ்

உடல் உறுப்புகள் தானம் குறித்து நடிகை மீனா பேசியது பலரையும் ஈர்த்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: நம்ம மீனா இப்படியெல்லாம் பேசுவாரா என்று ஆச்சரியப்பட்டு கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.. உடல் உறுப்பு தானம் செய்துள்ளர் நடிகை மீனா. அது குறித்து விரிவாகவும் அவர் விவரித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் மீனா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்... சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணமடைந்தது, ஒட்டுமொத்த திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை அது ஏற்படுத்தியது.

மீனாவை பொறுத்தவரை இது அவருக்கு மிகப்பெரிய இழப்பு... மீனாவின் அப்பா இறந்த பிறகு, அவரது இடத்தில் இருந்து குடும்பத்தையே வழிநடத்தியது வித்யாசாகர் தான் என்கிறார்கள்..

பாசத்தை பதுங்கி காட்டிய கலா மாஸ்டர்.. திகைப்பில் மீனா.. வேற லெவலில் உணர்ச்சி பூர்வமான வார்த்தைகள்பாசத்தை பதுங்கி காட்டிய கலா மாஸ்டர்.. திகைப்பில் மீனா.. வேற லெவலில் உணர்ச்சி பூர்வமான வார்த்தைகள்

செல்லம்

செல்லம்

குழந்தையில் இருந்தே மீனாவை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார் அவரது அம்மா.. இது திரையுலகில் எல்லாருக்குமே தெரிந்த உண்மை. மீனாவை எப்படி வளர்த்தாரோ, அதுபோலவேதான் வித்யாசாகரும் மீனாவை கவனித்து கொண்டு வந்துள்ளார்.. இவரது அஸ்தியை மீனா தன்னுடைய இரு கைகளிலும் ஏந்தியதை கண்டு, குடும்பத்தினர் இதயமே வெடித்து கதறியதை காண முடிந்தது.. கணவரின் அஸ்தியை கைகளில் தாங்கியபடி இருந்த மீனாவின் போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

 புறா எச்சம் + அஸ்தி

புறா எச்சம் + அஸ்தி

ஒருபெண், அஸ்தியை ஏந்தலாமா? இறுதிசடங்கை செய்யலாமா? என்ற அடுத்தடுத்த கேள்விகளும் சோஷியல் மீடியாவில் கிளப்பிவிடப்பட்டது.. மற்றொருபுறம் மீனாவின் கணவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஒரு க்ரூப் கிளப்பிவிட்டது.. எனினும் மீனா எதற்குமே பதிலளிக்காமல் அமைதி காத்து வந்தார்.. திரையுலக தோழிகள் அடிக்கடி மீனாவை சந்தித்து, அவருக்கு ஆறுதல் சொல்லி, இயல்பு நிலைக்கு மீட்டு வந்தனர்.. இந்நிலையில் மீனா ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்..

 மீனா & மீனா

மீனா & மீனா

அந்த பேட்டியில் மீனா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் முதிர்ச்சியும், பக்குவமும் நிறைந்தவையாக இருக்கின்றன.. மீனாவா இப்படி பேசுவது என்ற ஆச்சரியமும் கிளம்பி உள்ளது.. அந்த பேட்டியில் நிறைய விஷயங்களை மீனா பேசியிருந்தாலும் 2 முக்கிய விஷயங்கள் ஈர்க்கப்படுகின்றன.. முதலாவதாக, ஒரு பெண் இறுதி சடங்கை செய்யலாமா என்பது குறித்த மீனா விளக்கம் தந்துள்ளார்.. மற்றொன்று, உடல் உறுப்பு தானங்கள் குறித்தும் விலாவரியாக பேசியுள்ளார்.. அதன் சுருக்கம்தான் இவை:

 பிளட் க்ரூப்

பிளட் க்ரூப்

"நான் கணவரை இழந்தவுடன் அந்த துன்பத்தில் இருந்து மீண்டு வருவேன் என்று நினைக்கவில்லை.. இதுக்கெல்லாம் காரணம் என்னுடைய அம்மா குடும்பம் மற்றும் நண்பர்கள் தான்.. பொதுவாக நான் நண்பர்களின் விஷேசங்களுக்கு போயிருக்கிறேன். ஆனால் என்னோட கஷ்டத்தில நிறைய பேர் இருந்திருக்கிறாங்க... எனக்கு தெரியாதவங்க கூட வந்து ஆறுதல் சொன்னாங்க. நான் இதை எதிர்பார்க்கவேயில்லை.. இது தவிர சில ப்ரண்ட்ஸ் என் கூடவே இருந்து வெளில கூட்டிட்டு போறது, என் கூட டைம் ஸ்பெண்ட் பண்றது என எல்லாமே செய்தாங்க.. அவங்களால தான் நான் இப்போ அந்த துன்பத்தில் இருந்து விடுபட்டிருக்கின்றேன்..

 புறா எச்சம்

புறா எச்சம்

என் கணவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்த இடத்தில் புறாக்கள் அதிகமா இருந்திருக்கு.. அதன் எச்சத்தை சுவாசித்ததால அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்திச்சு... இதற்கான அறிகுறி எதுவும் ஆரம்பத்தில் தெரியல.. கொரோனா எங்க வீட்டில எல்லோருக்கும் வந்தது.. ஆனால் எல்லாருக்கும் குணமாகிடுச்சு.. அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சினை இருந்ததாலதான், இன்னும் பாதிப்பு அதிகமா வந்திச்சு அதனால தான் இப்படி ஆகிவிட்டது.. ஒருவேளை நுரையீரல் கிடைத்திருந்தால், கண்டிப்பாக என் கணவரை காப்பாற்றி இருக்க முடியும்.. ஆனால் அப்படி நுரையீரல் கிடைக்கிறது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்.

 நுரையீரல்கள்

நுரையீரல்கள்

அப்படியே நுரையீரல் கிடைத்தாலும் அது ஆரோக்கியமாக இருக்கணும்.. பிளட் க்ரூப் பொருந்தணும்.. உடல் எடை, உயரம் இவைகள் கூட பொருந்தணும்.. மெடிக்கலா நிறைய விஷயங்கள் இருக்கு.. இதெல்லாம் எனக்கு இதுவரை தெரியவே தெரியாது.. 20 வருடங்களுக்குமுன்பு நான் கண் தானம் செய்திருக்கிறேன்.. எல்லாரும் என் கண்ணு அழகா இருக்குன்னு சொல்லுவாங்களே, அதனால் நான் போனதுக்கப்பறம்கூட, கண்கள் இருக்கட்டுமே என்று நினைத்துதான் கண் தானம்செய்தேன்.. ஆனால், உடல் உறுப்பு தானம் செய்ததில்லை.. நிறைய பேருக்கு இதை பற்றி இன்னும் தெரியவில்லை..

 உறுப்பு தானம்

உறுப்பு தானம்

உயிரை பறி கொடுத்த சமயத்தில், குடும்பத்தினரிடம் சென்று உடல் உறுப்பு தானத்தை பற்றி எடுத்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது.. அதனால்தான், உடல்உறுப்பு தானம் பற்றி நிறைய பேருக்கு இனியாவது நாம் எடுத்து சொல்லணும்.. இதை தெரிந்து கொண்டு, பலரும் உறுப்பு தானங்களை செய்ய முன்வரணும்.. நாம் எது செய்தாலும் மக்கள் அதை கவனிக்கிறாங்க.. நல்ல விஷயமாக இருந்தால் அதை பின்பற்றவும் செய்யறாங்க.. அதனால்தான் நானும் என்னுடைய எல்லா உறுப்புகளையும் தானம் செய்துவிட்டேன்..

 கமல் சார்

கமல் சார்

கமல் சார் ஏற்கனவே உடல்உறுப்பு தானம் செய்திருக்கிறார்.. நான் உறுப்பு தானம் செய்ய போகும்போதுதான் இந்த விஷயமே எனக்கு தெரிந்தது.. நாம் இறந்தபிறகு நமக்கு எதுவும் தெரிய போறது இல்லை என்றாலும், நம் உறுப்புகள், நாம் இறந்த பிறகும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும்.. 4 பேருக்கு உபயோகமாக இருக்கும்.. என் கணவருக்கு இறுதி சடங்கு நான் செய்தது பற்றி பேசுகிறார்கள்.. என் கணவருக்கு நான் சடங்கு செய்தால் மற்றவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை?

 நெயில் கட்டிங்

நெயில் கட்டிங்

என் கணவருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது? எது செட் ஆகும், எது செட் ஆகாது, இதெல்லாம் என்னைவிட வேற யாருக்கு பெரிதாக தெரிந்துவிட போகிறது.. என் கணவர் தொலைநோக்கு பார்வை உள்ள மனிதர்.. என் அப்பா இறந்தபோது, மருமகன் என்ற முறையில் அவரை சடங்கு செய்ய சொன்னாங்க.. ஆனால், அவரோ என்னிடம் வந்து, "நான் வெளியில் இருந்து வந்தவன்.. அவர் உப்பா, உன்னை வளர்த்தவர்.. உனக்குதான் முழு உரிமை இருக்கு.. நீயே சடங்கு செய் என்று பிராக்டிகலாக சிந்தித்து சொன்னார்.. நைட் நேரத்தில் நகம் கட் பண்ணிட்டு இருப்பார்..

ஏம்மா

ஏம்மா

ஏம்மா, ராத்திரி நேரத்தில் நகம் கட் பண்ணக்கூடாதுன்னு சொல்வேன்.. அதுக்கும் ஒரு விளக்கம் தருவார்.. அந்த காலத்தில் கரண்ட் கிடையாது, நகம் வெட்டினால், அது கீழே விழுந்து, குழந்தைகள் கையில் பட்டுவிடும்.. சாப்பாட்டில் தெரியாமல் விழுந்துவிடும்.. அதனால்தான் நைட்டில் நகம் கட் பண்ண வேண்டாம் என்று பெரியவர்கள் சொன்னார்கள்.. இப்போது காலகட்டம் மாறிவிட்டது" என்றார்.. அதனால், இறுதி சடங்கு என்று மட்டுமல்ல, எந்த ஒரு விஷயத்தையும் நம் மனதுக்கு பிடித்தால் தாராளமாக செய்யலாம்.. அடுத்தவர்களுக்கு பாதிப்பு வராமல், நாம் எது செய்தாலும் சரிதான்" என்றார்

 சமத்துவம்

சமத்துவம்

"இன்னொன்றையும் இங்கே நான் குறிப்பிட வேண்டும்.. ஆண் - பெண் பாலின வேறுபாடுகள் இன்னமும் நிறைய இருக்கிறது.. சமத்துவம் இல்லாமல் இருக்கிறது... நாம் அனைவருமே சமம்.. நாம் அனைவருமே கடவுளின் குந்தைகள் என்ற மனப்பான்மை முதலில் வரவேண்டும்.. பாகுபாடு இல்லாமல் இருக்க அனைவரும் என்ன செய்ய வேண்டுமோ அதைதான் முதலில் செய்ய வேண்டும்.. எல்லாரும் சமம் என்று வெறும் வெறும் வாய்வார்த்தையில் மட்டும் சொல்லி கொண்டிருந்தால் போதாது.. அதை செயலில் காட்ட வேண்டும்.. வாழ்ந்து காட்ட வேண்டும். அப்படித்தான் என் கணவர் இருந்தார்.

English summary
Famous Actress Meena says about Husband and explains Organ donations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X