Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் அந்த நடிகை.. மிட்நைட்டில் ஆபாசம்.. சொக்கி விழுந்த மாப்பிள்ளை.. கடைசியில் பார்த்தால்.. அட கருமமே

திருமண மோசடி செய்து 20 லட்சம் பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் வருங்கால மனைவியிடம், விடிய விடிய ஆபாசமாகவும், நெருக்கமாகவும் பேசியது, மாப்பிள்ளையை போலீஸ் ஸ்டேஷன்வரை கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

சென்னை புழுதிவாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ரகுராம்.. 39 வயதாகிறது.. நுங்கம்பாக்கம் தனியார் நிறுவனம் ஒன்றில் சீனியர் செயல் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.. நீண்டகாலமாகவே பெண் தேடி கொண்டிருக்கிறார்கள்..

இவரது அப்பா பாலசுப்பிரமணியன், திருமண தகவல் மையத்தில் ஜாதகம் மற்றும் போட்டோவை பதிவு செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில், கடந்த மே மாதம், பாலசுப்பிரமணியனுக்கு வாட்ஸ் அப்பில், ஒரு பெண்ணின் போட்டோவும், ஜாதகமும் இருந்துள்ளது..

 மாப்பிள்ளை

மாப்பிள்ளை

அந்த பெண் பார்ப்பதற்கு அழகாக இருந்தார்.. பெண் பிடித்திருந்தால், தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு நம்பரும் அதில் குறிப்பிட்டு இருந்தது... உடனே பாலசுப்பிரமணியன் அந்த நம்பருக்கு போன் செய்தார்.. அதில் பேசிய நபர், "என் பெயர் கல்யாணராமன்.. சேலத்தில் வசித்து வருகிறேன்.. என் அண்ணன் மகள் ஐஸ்வர்யாவுக்கு வரன் பார்த்து வருகிறோம். உங்கள் மகன் ரகுராம் ஜாதகத்தை பார்த்தோம். 10 பொருத்தமும் இருக்கிறது.. மாப்பிள்ளை ரொம்ப அழகாக இருக்கிறார்... உங்கள் மகளை பிடித்துள்ளது. அண்ணன் மகளுக்கும் மாப்பிள்ளையை பிடித்துள்ளது... ஐஸ்வர்யாவை பிடித்து இருந்தால் சொல்லுங்கள். திருமண ஏற்பாடு செய்யலாம்" என்று சொல்லி உள்ளார்.

 மிட்நைட்டில்

மிட்நைட்டில்

அதற்கு பாலசுப்பிரமணியன், ஐஸ்வர்யா போட்டோ மற்றும் ஜாதகத்தை அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்... அதேபோல், கல்யாணராமனும் மாப்பிள்ளை போட்டோ, ஜாதகத்தை நாங்கள் பார்த்திருந்தாலும், முறையாக நீங்களும் அனுப்புங்கள், பார்த்து நாங்களும் பதில் சொல்கிறோம் என்று கூறியுள்ளார். பிறகு இரு தரப்பிலுமே போட்டோக்கள் ஷேர் ஆகின.. ஜாதகங்களும் வாட்ஸ்அப்பில் ஷேர் செய்யப்பட்டன.. பெண்ணை மாப்பிள்ளைக்கு பிடித்துவிட்டது.. மாப்பிள்ளைக்கு பெண்ணை பிடித்துவிட்டது.. பெண்ணும் - மாப்பிள்ளையும் செல்போன் நம்பர்களை வாங்கி கொண்டார்கள்..

 கிறங்கிய நபர்

கிறங்கிய நபர்

மாப்பிள்ளை ரகுராம், வருங்கால மனைவி ஐஸ்வர்யாவிடம் தன் காதலையும், அன்பையும் செல்போனிலேயே கொட்ட ஆரம்பித்தார். இருவரும் விடிய விடிய பேசி வந்துள்ளனர்... ஐஸ்வர்யா அழகில் நிஜமாகவே மயங்கிவிட்டார் ரகுராம்.. வருங்காலத்தில் 2 பேரும் சேர்ந்து எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று கனவுகளுடன் பேச்சை வளர்த்தனர்.. கடந்த மே 22ம் தேதி ஐஸ்வர்யா, ரகுராமுக்கு போன் செய்து பதட்டமாக பேசினார்.. என் அம்மாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. ஆபரேஷனுக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது" என்று அழுதுள்ளார்.. ரகுராம் உடனே, கூகுள்பே மூலம் ரூ.8 ஆயிரம் அனுப்பியுள்ளார்...

 ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

பிறகு, சிறிது சிறிதாக சிகிச்சைக்கு பணம் அனுப்பினார். வருங்கால மனைவிக்காக, 21 லட்சம் அனுப்பியிருக்கிறார்.. ஆனால், இதனை தன்னுடைய வீட்டுக்கு தெரியாமல், ரகுராம் தந்துள்ளார்.. சில நாளில் திருமண ஏற்பாடு என்ன ஆயிற்று என்று ரகுராம் கேட்டுள்ளார்.. தாயின் உடல்நிலையை காட்டி, ஐஸ்வர்யா தவிர்த்தார். எத்தனை நாள் கழித்து கேட்டாலும், தன் அம்மாவின் உடல்நலனையே காரணம் காட்டினார் ஐஸ்வர்யா.. இதனால், சந்தேகமடைந்த ரகுராம், சிகிச்சைக்காக கொடுத்த ரூ.20.90 லட்சம் பணத்தை கேட்டுள்ளார்...

ஆனால், இதற்கு ஐஸ்வர்யா பதில் சொல்லவில்லை. கல்யாணராமன்தான், ரகுராமிடம் பேசினார்.. "நீ என் அண்ணன் மகளிடம் நைட் நேரங்களில் ஆபாசமாக பேசி இருக்கிறாய்.. அந்த ஆபாச பேச்சு பூராவும் ஆடியோவாக என்னிடம் இருக்கிறது. பணத்தை கேட்டால் அந்த ஆடியோவை வெளியிடுவேன் என்று சொல்லி பணம் தர முடியாது என்றார். இதைக்கேட்டு ரகுராமுக்கு குழப்பம் வந்துவிட்டது. இரவு நேரத்தில் சேலத்தில் இருக்கும் ஐஸ்வர்யாவிடம் பேசியது, சென்னையில் இருக்கும் பெரியப்பா கல்யாணராமனுக்கு எப்படி தெரிந்தது? என்று அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தார்.. பிறகு நண்பர்களிடம் இதை பற்றி விவாதித்தார்..

அட்ரஸ்

அட்ரஸ்

நேராக போலீசுக்கு போய் புகார் கொடுக்கும்படி நண்பர்கள் அறிவுறுத்தவும், ரகுராம் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும், ரகுராமிடம் பணம் பறித்த ஐஸ்வர்யா மற்றும் கல்யாணராமன் செல்போன் நம்பர்களை வைத்து விசாரணையை துவக்கினர். கடைசியில் பார்த்தால், அந்த 2 செல்போன் நம்பர்களும் ஒரே அட்ரஸை காட்டியது.. இரண்டு நம்பர்களும் சேலம் சின்ன திருப்பதி அண்ணாமலை நகர் 1வது தெருவை சேர்ந்த தாத்தாதிரி என்பவர் பெயரில் இருப்பது தெரியவந்தது.. இந்த தாத்தாதிரிக்கு 49 வயதாகிறது.. அதனால், தனிப்படை போலீசார் சேலம் விரைந்து சென்று, தாத்தாதிரியை பிடித்து விசாரணை நடத்தினார்கள்..

 வாய்ஸ் ஆப்

வாய்ஸ் ஆப்

அப்போதுதான், அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.. ஐஸ்வர்யா என்று யாருமே கிடையாது.. கல்யாணராமனாகவும், ஐஸ்வர்யாவாகவும், செல்போனில் பேசி மோசடி செய்தது தாத்தாதிரி என்பது தெரியவந்தது.. செல்போனில் நவீன குரல் பதிவு ஆப்பை டவுன்லோடு செய்து, பெண் குரலில் ரகுராமிடம் நைட் நேரங்களில் மணிக்கணக்கில் பேசி நம்பவைத்துள்ளார் தாத்தாதிரி.. அசிங்கமாகவும், ஆபாசமாகவும் ரகுராமிடம் பேச்சை தூண்டி, அந்த ஆடியோக்களை ரெக்கார்டு செய்து வைத்துள்ளார்.. வருங்கால மனைவி என்று நம்பி, எக்கச்சக்கமாக பேசி வைத்திருக்கிறார் இந்த ரகுராமன்.. இந்த சபலத்தை பயன்படுத்தியே, 21 லட்சத்துக்கு மேல் பணம் கறந்துள்ளார் தாத்தாத்ரி..

 ஃபேமஸ் நடிகை

ஃபேமஸ் நடிகை

இதில் இன்னொரு அதிர்ச்சியும் உள்ளது.. மணப்பெண் என்று சொல்லி ஐஸ்வர்யா போட்டோவை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தாரே, அந்த போட்டோவில் இருந்தது பிரபல நடிகையாம்.. பெண் அழகாக இருக்கிறார் என்று சொன்னார்களே தவிர, அது ஒரு நடிகையின் போட்டோ என்பதைகூட ரகுராம் குடும்பத்தினர் கண்டுபிடிக்கவில்லை.. இதில் இன்னொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.. தாத்தாதிரியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளார்கள்.. அப்போது நடந்த விவரங்கள் அத்தனையையும் உண்மை என்று ஒப்புக் கொண்டுள்ளாராம்.. தோத்தாதிரி ஒரு மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பிரபலமான கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்..

வாய்ஸ் நடிகை

வாய்ஸ் நடிகை

கை நிறைய சம்பளமும் வாங்கி உள்ளார்.. ஆனாலும், குறுக்கு வழியில் மோசடி செய்து பணம் சம்பாதித்துள்ளார். இந்த பணம் மொத்தத்தையும் கொண்டுபோய், ஆன்லைன் ரம்மி விளையாடி இழந்துவிட்டாராம்.. குறுகிய நாட்களில் லட்சக்கணக்கில் பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளதும் தெரியவந்தது... ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவை தமிழக அரசு அவசர சட்டமாக இயற்றியது இதற்காகத்தான் என்பதையும் சிலர் புரிந்து கொள்ள வேண்டும்.. எத்தனையோ திருமண மோசடிகளில் இப்படியும் ஒரு திருமண மோசடி நடந்துள்ளது.. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்றாலும், தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனித குலத்தை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+