தங்க இடம் கொடுத்தாரு.. ஆம்ஸ்ட்ராங் நல்ல மனுஷன்! போலீசின் கையாலாகாத்தனம்.. உடைந்து பேசிய பிரபல ஜோதிடர்.!
சென்னை: பகுஜான் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் 8 பேர் சரணடைந்திருக்கும் நிலையில், பல பிரபலங்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் படிக்கும் காலத்தில் தனது அலுவலகத்தில் தங்க இடம் கொடுத்தவர் ஆம்ஸ்ட்ராங்க் என உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார் பிரபல ஜோதிடரான பாலாஜி ஹாசன்.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங்கில் படுகொலை.

இந்தியா முழுவதும் பிரபலமான ஒரி தேசிய கட்சியின் மாநில தலைவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பல ஆண்டுகளாக இருக்கும் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டருகே நின்று கொண்டு ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த மர்மகும்பல் இருசக்கர வாகனத்தில் அவரை சூழ்ந்து வெட்டி சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்தார். தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அந்த சிசிடிவி காட்சிகள் வெளியானது.
இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ரங்கை அருகில் இருந்த ஒரு மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து திரைப் பிரபலங்களான பா.ரஞ்சித் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். குறிப்பாக பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் உயரிழந்த தகவலை கேட்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. இந்நிலையில் கொடையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணையை துவக்கினார்.
இதற்கிடையே கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொண்ணை பாலு உள்ளிட்ட எட்டு பேர் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்க் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் படிக்கும் காலத்தில் தனது அலுவலகத்தில் தங்க இடம் கொடுத்தவர் ஆம்ஸ்ட்ராங்க் என உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார் பிரபல ஜோதிடரான பாலாஜி ஹாசன்.
இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,"விளிம்பு நிலை மக்களுக்கான பாதையை உருவாக்கிக் கொடுத்தவர். பல தரப்பட்ட மக்களின் செல்வாக்கையும் நன்மதிப்பை பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையாகட்டும் தமிழகம் முழுவதும் தொடரும் கொலைகளாகட்டும் ஒட்டுமொத்த காவல்துறையின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது. இதற்கு மேலும் காவல்துறை அலட்சியமாக இருந்தால் ஆட்சியாளர்களுக்கு பெரும் கெட்ட பெயர் வரும்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். 2010 முதல் 14 வரை பொறியியல் கல்லூரி சேலத்தில் படித்தேன் அப்போது இறுதியாண்டு ப்ராஜெக்ட் செய்ய சென்னை
பெரம்பூர் ICF-ல் 18 நாட்கள் தங்கி Project செய்ய வாய்ப்பு கிடைத்தது. அப்போது சென்னையில் தங்க எனக்கு யாரையும் தெரியாது.
சேலத்தில் எனது மிக வேண்டப்பட்ட நபர் அம்மாபேட்டை சேர்ந்த ரமேஷ்பாபு அவர்கள் அவர் பகுஜன் சமாஜ்வாதியின் கட்சி. அவர் பரிந்துரையின் பேரில் 18 நாட்கள் பெரம்பூரில் இருக்கும் அவரது கட்சி அலுவலகத்தில் எனக்கும் மற்றும் எனது நண்பர்களுக்கும் தங்குவதற்கான வாய்ப்பை அவர் ஏற்படுத்தி கொடுத்தார். எனது திருமணத்திற்கு நேரில் சென்று பத்திரிக்கை கொடுத்தேன். அப்போது வர முடியாமல் ஒரு வாரம் கழித்து எங்கள் வீட்டிற்கு வந்து வாழ்த்தினார். நிஜமாக மனது கஷ்டமாக இருக்கிறது நல்ல மனிதர்" என பதிவிட்டுள்ளார்.

-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications