Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூண்டிலில் "பாக்யராஜ்".. மொத்த கட்சியும் திரும்பி பாக்குதே.. பிரம்மாஸ்திரத்தை எடுக்கும் ஓபிஎஸ்.. அடடே

பிரபல டைரக்டர் பாக்யராஜை வேட்பாளராக நிறுத்த ஓபிஎஸ் முயன்று வருகிறதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற குழப்பம் ஓபிஎஸ் டீமில் அதிகரித்து வரும்நிலையில், பாக்யராஜ் பெயரும் அடிபட்டு வருகிறதாம்.. இந்த தகவல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளது.

ஓபிஸ்ஸை பொறுத்தவரை, நடக்க போகும் இடைத்தேர்தலில் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாமலேயே இருந்தார்.. ஆனால், அவரது ஆதரவாளர்கள் ஒருசில நேரடியாகவே சென்று பேசினார்களாம்.

"யுவராஜா போட்டியிட நேர்ந்தால், ஆதரவை மட்டும் தந்துவிட்டு ஒதுங்கிவிடுவோம்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை நிறுத்தினால், அதற்கு மாற்றாக, நாமளும் வேட்பாளரை நிறுத்தியே ஆக வேண்டும், போட்டியிடாமல் போனால், நம்மை பலவீனமாக நினைத்துவிடுவார்கள்" என்று எடுத்து சொல்லி உள்ளனர்.

முதலியார்

முதலியார்

இதற்கு பிறகுதான், ஓபிஎஸ் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தே யோசித்தாராம்.. அதுமட்டுமல்ல, புது ஐடியா ஒன்றையும் ஓபிஎஸ்ஸுக்கு அவரது ஆதரவாளர்கள் தந்துள்ளது.. அதன்படி, கவுண்டர் சமுதாயம் அல்லாத ஒரு வேட்பாளரை அதாவது "முதலியார்" வேட்பாளர் ஒருவரை, இடைத்தேர்தலில் முன்னிறுத்தினால், வாக்கு சதவீதத்தை ஓரளவு பெறலாம் என்று என்று சொன்னார்களாம். காரணம், கொங்கு சமுதாய ஓட்டுக்கள் என்பது எடப்பாடிக்கு கிட்டத்தட்ட 12 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், பிற சமூகத்தினரின் வாக்குகளை பெற்று, வெற்றியை சுபலமாக்கிவிடலாம் என்பதே ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் சொன்ன கணக்கு என்கிறார்கள்..

முடிச்சுகள்

முடிச்சுகள்

இதற்குபிறகுதான், இடைத்தேர்தலில் போட்டி என்பதையே ஓபிஎஸ் அறிவிக்க நேர்ந்துள்ளது.. ஆனால், 95 சதவீதம் கட்சி எங்களிடம் தான் இருக்கிறது என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி தரப்பே தரப்பு இன்னமும் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் குழம்பி கிடக்கும்போது, ஓபிஎஸ்சுக்கும் இதே சிக்கல்தான் நீடிக்கிறது.. இப்போது வரை தகுதியான வலிமையான வேட்பாளர் கிடைக்கவில்லையாம்.. இதனால், ஒவ்வொருவருக்கும், ஃபோன் போட்டு, "போட்டியிடுங்கள்" என சொல்வதை தீவிரப்படுத்தியிருக்கிறாராம்.. ஆனால், யாருமே ஓபிஎஸ்சின் விருப்பத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்கிறார்கள்

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

இந்த நிலையில், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்பட பலரிடமும் ஆலோசித்தார் ஓபிஎஸ். அவர்களிடமிருந்தும் நல்ல பதில் கிடைக்கவில்லை என்றெல்லாம் தகவல்கள் கசிந்து வருகின்றன... இப்படிப்பட்ட சூழலில்தான், பாக்யராஜ் பெயர் அடிபடுகிறது. ஸ்டார் வேட்பாளர் ஒருவர் இருந்தால் அது, இந்த நேரத்தில் சரியாக இருக்கும் என்று யோசிக்கிறாராம்.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.. கொங்கு மண்டலத்தை சேர்ந்த நீங்கள் ஈரோடு கிழக்கில் போட்டியிட்டால் நல்லாருக்கும்... செலவை நாங்களே பார்த்துக்கறோம்.. கவலைப்படாதீங்க... பாஜக சப்போர்ட்டும் நமக்குதான் இருக்கு என்றெல்லாம் ஓபிஎஸ் தரப்பில் பாக்யராஜிடம் பேசினார்களாம்.

பாக்கியராஜ்

பாக்கியராஜ்

ஆனால், பாக்யராஜ் இன்னும் பிடிகொடுத்து பேசவில்லையாம்.. ஓபிஎஸ் டீமோ அவரை விடாமல் பேசி வருவதாக தெரிகிறது.. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பாக்யராஜ், திடீரென ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்தார்.. அதிமுக விவகாரம் உச்சத்தில் நடந்து கொண்டிருந்தபோது, பாக்யராஜின் இந்த திடீர் ஆதரவு பரபரப்பாக பேசப்பட்டது.. தென்மண்டலத்தில் பெருத்த செல்வாக்குடன் வலம் வரும் ஓபிஎஸ்ஸால், கொங்குவில் அப்படியான ஆதரவை பெற முடியவில்லை.. பாக்யராஜ் போல ஒரு கொங்கு பிரபலம், தன்னுடன் இருக்கும்போது, தன் தரப்பு நியாயங்களை கொங்கு மண்டலத்தில், பிரச்சாரம் செய்யவும், பாக்யராஜை களமிறக்கலாம், அதனால்தான், ஓபிஎஸ் டீமில் பாக்யராஜ் இணைந்திருப்பதாக அப்போது முணுமுணுக்கப்பட்டது.

பாக்யராஜ்

பாக்யராஜ்

எம்ஜிஆரின் கலை உலக வாரிசு என அறிவிக்கப்பட்டவர் பாக்யராஜ்... எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, ஜானகி அணியை ஆதரித்தார்.. ஆனால் அதில் தொடரவில்லை.. பிறகு தனிக்கட்சி தொடங்கிப் பார்த்தார்.. அதையும் வெற்றிகரமாக நடத்த முடியவில்லை.. பிறகு திமுகவில் இணைந்தார்.. அங்கேயும் நீடிக்கவில்லை.. பிறகு, திடீரென மோடிக்கு சப்போர்ட் செய்தார்.. அதிலும் ஒரே நாளில் முடிவை மாற்றிக் கொண்டார்.. கடந்த ஒரு வருடமாக அதிமுக தொடர்பாக கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், இப்போது ஓபிஎஸ் பக்கம் வந்து சேர்ந்திருக்கிறார்.. பாக்யராஜ் ஓபிஎஸ் பக்கம் தாவியது குறித்து, அப்போது சில அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறினார்கள்..

ரிட்டைய டைரக்டர்

ரிட்டைய டைரக்டர்

ரஜினியாலேயே இந்த கால அரசியலில் எதுவும் செய்ய முடியாத நிலையில், பாக்யராஜ் வந்து என்ன செய்ய போகிறார்? பாக்யராஜ் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்ததால், ஓபிஎஸ்ஸுக்கும் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.. பாஜகவுக்கும் எந்த பலனும் கிடைக்க போவதில்லை.. அதிமுகவுக்கும் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை.. மார்க்கெட் இழந்த 'ரிட்டையர் டைரக்டர்' என்பதால், பாக்யராஜ்ஜுக்கு வேண்டுமானால், மீடியா வெளிச்சம் மூலம் பலன் கிடைக்கும்.. அவ்வளவுதான்.. மற்றபடி, அடிக்கடியான அணி தாவல்களும், கட்சி தாவல்களும் ஒருவர் மீதான மொத்த நம்பிக்கையையும் அடியோடு குலைத்துவிடும்.. அந்தவகையில், அதிமுக + திமுக + பாஜக = என பல கலர்கள் பாக்யராஜ் மீதுள்ளதால், ஓட்டுக்களை பெறுவது என்பது கடினம்" என்று கூறியிருந்தனர்.

கிரேஸ் ஸ்டார்

கிரேஸ் ஸ்டார்

ஆனால், இப்போது வேட்பாளராக அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு வரும்நிலையில், ஒருசாரார் இதனை வரவேற்க துவங்கி உள்ளனர்.. "இது நல்ல சாய்ஸ்.. எடப்பாடி எப்படியும் வலுவுள்ள ஒரு வேட்பாளரைதான் களமிறக்குவார்.. அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில், ஓபிஎஸ்ஸும் நிறுத்தியாக வேண்டும். அதுவும், கொங்குவில் ஓபிஎஸ் சார்பில் யார் நிறுத்தப்பட்டாலும், பாக்யராஜ் அளவுக்கு, கிரேஸ் + ஸ்டார் வேட்பாளராக இருக்க வாய்ப்பில்லை.. இலை கிடைக்காத சூழலில் புது சின்னத்தில் நிற்கவேண்டிய பட்சத்தில், வாக்குகளை ஓரளவு அள்ள பாக்யராஜ் போன்றோரால்தான் முடியும்.. நல்ல தேர்வு என்கிறார்கள்.. ஆனாலும், பாக்யராஜ், இன்னும் ஓகே சொல்லவில்லையாம்.. நாட்கள் நெருங்கி வரும்நிலையில், என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்.. ..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+