ராத்திரி திடீர்னு அந்த போன்.. "இலக்கணம் மாறுதோ".. இசை தெய்வம் எம்எஸ்வி.. நெகிழ்ந்த வாணி ஜெயராம்
எம்எஸ் விஸ்வநாதன் குறித்து பிரபல பின்னணி பாடகி நெகிழ்ந்து பேசியுள்ளார்
சென்னை: எப்போதுமே, இசை நினைப்பில் நடந்து கொண்டே இருப்பார் எம்எஸ் விஸ்வநாதன்.. ஒரு இடத்தில் உட்காரவே மாட்டார்.. அவரது இசையில் பாடியதற்காக, என் வாழ்க்கையில் நான் நிறைய புண்ணியம் செய்திருக்கணும்" என்று நெகிழ்ந்து கூறியுள்ளார் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்.
தமிழ் சினிமா இசை வரலாற்றில், பிரம்மாண்டமான அத்தியாயமாக திகழ்ந்தவர் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன்.
நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழ் சினிமா இசையின், ஒவ்வொரு அத்தியாயத்திலும் எம்எஸ்வியின் மியூசிக்கல் டச்சிங் சிலிர்க்க வைத்து கொண்டேயிருக்கும்.

முத்துக்களோ கண்கள்
இவரது பாடல்கள் தனித்துவம் மிக்கது.. மகத்துவம் மிக்கது.. வாத்தியக் கருவிகளை குறைவாக வைத்துக்கொண்டும், "முத்துக்களோ கண்கள்" என்பார்.. ஏகப்பட்ட கருவிகளை குவித்து வைத்துக்கொண்டு ஒரு ராஜா ராணியிடம்வெகுநாளாக ஆசைகொண்டான் என்று பணியவைப்பார்.. எம்ஜிஆர், சிவாஜி முதல், கமல், ரஜினி வரை, எத்தனையோ ஹீரோக்களின் வெற்றியில் எம்எஸ்விக்கும் பங்குண்டு என்பதை மறுக்க முடியாது.. இவர் நான் ஒரு ரசிகன் என்ற நூலை எழுதியுள்ளார்.. இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது..

பாக்கியராஜ்
இந்த விழாவில் திரை பிரபலங்கள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.. இசையமைப்பாளர் தேவா, பாடகிகள் பி.சுசீலா, வாணி ஜெயராம், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்யராஜ், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், எம்எஸ்வியின் மகன் வி.பிரகாஷ், டாக்டர் பத்மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. இந்த விழாவில் வாணிஜெயராம் பேசிய பேச்சு அனைவரையும் ஈர்த்துவிட்டது.. எம்எஸ்வி இசையில் அதிக பாடல்களை பாடிய முக்கியமான பாடகி வாணி ஜெயராம்.. கம்பீரம் மட்டுமல்ல, குழைவு, மென்மை, உட்பட பல உணர்ச்சிகளை உள்ளடக்கிய குரல் இவருடையது.. முக்கியமாக தமிழை படுசுத்தமாக உச்சரித்து பாடக்கூடிய பாடகி இவர்..

மியூசிக்கல் ப்ரெயின்
அதேசமயம், எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியின் வார்த்தைகளை கொஞ்சம் கூட அதன் அர்த்தம் மாறாமல், உச்சரிப்பு மாறாமல் தெளிவாகவும் பாடக்கூடியவர் வாணிஜெயராம். நேற்றைய விழாவில் இவர் பேசியபோது, 'என்னுடைய இசை கடவுள் எம்எஸ் விஸ்வநாதன்.. அவரை நான் பூஜிக்காத நாள் இல்லை.. காலையில் எழுந்தவுடன் அவரை வணங்கிவிட்டு, வேண்டிக்கொண்டு, அதேபோல் இரவு தூங்கப்போகும் போதும் அவரை நமஸ்காரம் செய்துவிட்டுத்தான் தூங்க போறேன்.. அப்படிப்பட்ட ஒரு மாமேதை.. மியூசிக்கல் ப்ரெயின்.,. அபார திறமை, அபார கம்போசிங்.. அதுபோல பார்க்கவே முடியாது..அதேசமயம், எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியின் வார்த்தைகளை கொஞ்சம் கூட அதன் அர்த்தம் மாறாமல், உச்சரிப்பு மாறாமல் தெளிவாகவும் பாடக்கூடியவர் வாணிஜெயராம். நேற்றைய விழாவில் இவர் பேசியபோது, 'என்னுடைய இசை கடவுள் எம்எஸ் விஸ்வநாதன்.. அவரை நான் பூஜிக்காத நாள் இல்லை.. காலையில் எழுந்தவுடன் அவரை வணங்கிவிட்டு, வேண்டிக்கொண்டு, அதேபோல் இரவு தூங்கப்போகும் போதும் அவரை நமஸ்காரம் செய்துவிட்டுத்தான் தூங்க போறேன்.. அப்படிப்பட்ட ஒரு மாமேதை.. மியூசிக்கல் ப்ரெயின்.,. அபார திறமை, அபார கம்போசிங்.. அதுபோல பார்க்கவே முடியாது..

சீனியர் கலைஞர்
அவருடைய இசையில் நிறைய பாடல்களை நான் பாடியது பாக்கியமாக நினைக்கிறேன்.. "ஏழு ஸ்வரங்கள்" ரிக்கார்டிங்கில் பாடி முடித்ததுமே உனக்கு விருது கிடைக்கும்" என்றார்.. அதே போல அந்த பாட்டுக்கு தேசிய விருது கிடைச்சது .. "இலக்கணம் மாறுதோ" ரிக்கார்டிங் முடிச்சிட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன்.. உடனே ராத்திரி 11 மணிக்கு எனக்கு போன் பண்ணி, "அருமையா பாடியிருக்கேம்மா"ன்னு சொன்னார்.. அதெல்லாம் மறக்கவே முடியாது.. அப்படிப்பட்ட மேதையிடம் படிப்பு இருந்ததைவிட, பாராட்டும் குணமும் இருந்தது.. ஒரு சீனியர் கலைஞருக்கு இப்படி குணம் இருப்பது லேசப்பட்ட விஷயம் இல்லை..

வாணி ஜெயராம்
அவர் குடும்பத்தில், அவர் மனைவி முதல் அனைவருமே அன்பாக என்னிடம் பழகுவார்கள்.. எம்எஸ்வி-யின் இசையில் எல்லாருமே மூழ்கிதான் போனார்கள்.. அவரது குடும்பம் மன்னர் குடும்பம்.. அவரது பாடல்களை மேன்மைப்படுத்திக் கொண்டே பல நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்கள்.. நானும் அதில் பல நிகழ்ச்சியில் பங்கேற்றியிருக்கிறேன்.. தான் ஒரு இசையமைப்பாளன், தான் ஒரு மேதை என்றெல்லாம் அவர் நினைத்து கொண்டது இல்லை.. அதனால்தான், நான் ஒரு ரசிகன் என்று அவர் எழுதிய புத்தகத்துக்கு பெயரை வைத்துள்ளனர்.. அவர் குடும்பத்தில், அவர் மனைவி முதல் அனைவருமே அன்பாக என்னிடம் பழகுவார்கள்.. எம்எஸ்வி-யின் இசையில் எல்லாருமே மூழ்கிதான் போனார்கள்.. அவரது குடும்பம் மன்னர் குடும்பம்.. அவரது பாடல்களை மேன்மைப்படுத்திக் கொண்டே பல நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்கள்.. நானும் அதில் பல நிகழ்ச்சியில் பங்கேற்றியிருக்கிறேன்.. தான் ஒரு இசையமைப்பாளன், தான் ஒரு மேதை என்றெல்லாம் அவர் நினைத்து கொண்டது இல்லை.. அதனால்ன், நான் ஒரு ரசிகன் என்று அவர் எழுதிய புத்தகத்துக்கு பெயரை வைத்துள்ளனர்..

ஸ்பீடு
எப்பவுமே என்கிட்ட சொல்வார், உனக்கு உழைக்கதான் தெரியும், பிழைக்க தெரியாது என்பார்.. அவருக்கு எப்போதுமே இசை, இசை, இசை.. அதை தவிர வேறு எதுவுமே தெரியாது.. வெளி உலகமே இசை பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கும்.. எப்போதுமே, இசை நினைப்பில் நடந்து கொண்டே இருப்பார்.. ஒரு இடத்தில் உட்காரவே மாட்டார்.. அவரது இசையில் பாடியதற்காக, என் வாழ்க்கையில் நான் நிறைய புண்ணியம் செய்திருக்கணும்" என்று நெகிழ்ந்து கூறினார் வாணி ஜெயராம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications