பிரபல ஹோட்டலில்.. சோலா பூரியில் இருந்து நெளிந்து வந்த புழுக்கள்.. இப்படியா.. அலறிய கோயம்பேடு
ஆர்டர் செய்த சோலா பூரியில் நெளிந்த புழுவால், கோயம்பேட்டில் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை: கோயம்பேடு அருகே ஒரு பிரபல ஹோட்டலில், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த சோலாப்பூரியில் புழுக்கள் நெளிந்து வந்துள்ளது.. இதனால் அதிர்ந்து போன கஸ்டமர் புகார் அளித்ததையடுத்து, அந்த ஹோட்டலில் அதிரடி சோதனையை அதிகாரிகள் நடத்தினர். இது அந்த பகுதி மக்களிடம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராணி... இவர் நேற்று மாலை தன்னுடைய மகனுடன் கோயம்பேடு சென்றுள்ளார்.
பிறகு, திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலில் 3வது தளத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் சைவ உணவகத்துக்கு சாப்பிட சென்றுள்ளார்.

சோலா பூரி
இவரது மகன், சோலாபூரி வேண்டும் என்று கேட்டதால், சோலா பூரி ஒன்று ஆர்டர் செய்துள்ளார்.. சிறிது நேரத்தில் சோலாப்பூரியும் வந்துள்ளது.. அப்போது அதை சாப்பிட முயன்றபோது, அதற்குள்ளிருந்து புழு நெளிந்து வருவதை கண்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. இதனால் கத்தி கூச்சலிட்ட அந்த பெண், உடனடியாக, சாப்பாடு தயாராகும் கிச்சனை பார்க்க வேண்டும் என்று அந்த ஹோட்டல் நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.. பிறகு, அந்த உணவு கூடத்தின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

ஹோட்டல் பூரி
அங்கே, சோலா பூரி தயாரிக்க வைத்திருந்த மாவில் ஐந்திற்கும் மேற்பட்ட புழுக்கள், மேலேயே நெளிந்து கொண்டிருப்பதை கண்டு மேலும் அதிர்ந்துள்ளார். இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, அதற்கு அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லையாம். அதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், கோயம்பேடு போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட பெண் உட்பட ஓட்டல் நிர்வாகத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

கிச்சன் + டெஸ்ட்
பிறகு, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் அநத் பெண் தொடர்பு கொண்டு இது தொடர்பாக புகார் அளித்தார்... இதைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையிலான குழுவினர் விரைந்துவந்தனர். மாவில் புழுக்கள் இருப்பதைக் கண்டு கிச்சனில் இருந்து மாதிரிகளை சேகரித்தனர்... இதையடுத்து அங்கு வைத்திருந்த மற்ற உணவுகளின் மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர்... மேலும் அந்த ஹோட்டல் நிர்வாகிளுக்கு வார்னிங் தந்ததுடன், அபராதமும் விதித்துள்ளனர்.
Recommended Video

கஸ்டமர்கள்
இப்படித்தான் 2 நாளைக்கு முன்பும், இப்படி ஒரு சம்பவம் நடந்தது.. சென்னை அருகே கிழக்கு தாம்பரத்தில் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி அருகே அமைந்துள்ள பிரபலமான சேலம் ஆர்ஆர் பிரியாணி உணவகத்தில், மட்டன் பிரியாணியில் புழு நெளிந்து கிடந்தது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது.. சாலையோர உணவுகள் பெரும்பாலும் சுகாதாரமாக இருக்காது என்று சொல்லி, ஹோட்டலுக்குள் அமர்ந்து சாப்பிடவே கஸ்டமர்கள் விரும்பும் நிலையில், ஹோட்டலுக்குள்ளேயே, அதுவும் பிரபலமான ஹோட்டல்களிலேயே இந்த கதியா? என்று கலங்கி போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications