பிரளயம் வர போகிறதாம்.. 3 மாதத்தில் அந்த பயங்கரம் வருமாம்.. லிப்ஸ்டிக்குடன் ஆருடம் சொன்ன பெண்சாமியார்
உடம்பெல்லாம் நகைகளுடன் அருள் வாக்கு சொன்ன பெண் சாமியார்
சென்னை: தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும் என்று பெண் சாமியார் பவித்ரா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவமழை கொட்டி வருகிறது.. இனியும் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகிறது.
இத்தனை நாள் பெய்த மழையில் தமிழகத்தின் மாவட்டங்களில் ஆறு, ஏரி, அணைகள் நிரம்பியுள்ளன... பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது... அதிலும் சென்னை 3 நாள் மழைக்கே மிதந்து கொண்டிருக்கிறது.

ஆன்மீகவாதிகள்
இப்படி இயற்கை சீற்றங்கள் ஏற்படுல் சமயங்களில், ஆன்மீகவாதிகளும், சாமியார்களும் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும், நடக்கப்போகும் நிகழ்வுகள் குறித்தும் தங்களுக்கு தெரிந்தவற்றை அனுமானமாக சொல்வது உண்டு. அந்த வகையில் இதற்கு முன்பு நிறைய பேர் சொல்லி உள்ளார்கள். அதிலும் சுனாமி வந்து போனதில் இருந்து, இந்த சாமியார்கள் இயற்கை நிகழ்வுகளை வருடாவருடம் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் சாமியாரும் ஆருடம் சொல்லி உள்ளார்.

ஸ்ரீபவித்ரா
இவர் பெயர் ஸ்ரீபவித்ரா காளிமாதா.. சிறுமலை கிராமத்தை சேர்ந்தவர்.. காளிமாதா அகில இந்திய யுவ மோட்சா தர்மசார்யா பட்டம் பெற்றவர்... இவர் கழுத்து நிறைய நகைகளை போட்டுக் கொள்வார்.. ஆளுயுர மாலை அணிந்து கொள்வார்.. இப்படியேதான் ஊருக்குள் நடமாடுவார்.. அடிக்கடி பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.. சில சமயம் நடுராத்திரி மயானத்துக்கு சென்று வழிபட்டு கிலியை தந்துவிடுவார்.. திடீர் திடீர் என அருள் வழங்குவார்.

சிவலிங்கம்
அடிக்கடி இவரது காஸ்ட்யூம் மாறி கொண்டே இருக்கும்.. சில்வர் கலரில் சுடிதார், கழுத்தில் சிவலிங்கத்தை கற்களால் பதித்த டாலர் செயின், காசு மாலைகளுடன் காட்சி தருவார். உதட்டில் லிப்ஸ்ட்டிக், தலைக்கு பிரவுன் கலரில் ஹேர்கலரிங், என கலர் கலராக பவித்ராவின் தோற்றம் மாறி கொண்டே இருக்கும்... இவர் திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்திருந்தார் பவித்ரா.. அதே லிப்ஸ்டிக், தங்க நகையுடன் சொகுசு காரில் வந்திருந்தார்.

குங்குமம்
திருவண்ணாமலை ரமணாஸ்சிரமம் அருகில் உள்ள காளி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றார்.. முன்னதாக அவர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குங்கும திலகமிட்டு ஆசி வழங்கினார். அப்போது அவர் சொல்லும்போது, "உலகில் அதர்மம் தலைதூக்கும்போது சிவன், காளியை அவதாரம் எடுக்க செய்வார். உண்ணாமலை அம்மன் போல் காளியும் சிவனுக்கு மிகவும் விருப்பமானவள்...

கிரிவலம்
அண்ணாமலையார் உத்தரவின்பேரில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்று வந்துள்ளேன்... உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை... தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும்... 3 நாட்கள் முழு கடையடைப்பு நடக்கும்... பிறகு ன்னர் அமைதியான சூழ்நிலை உருவாகும்" என்றார். ஏற்கனவே டிசம்பர் மாதம் வந்தாலே இனம்புரியாத கலக்கம் நம் மக்களுக்கு உள்ள நிலையில், பிரளயம் வரப்போவதாக பவித்ரா சொல்லி உள்ளது, மேலும் புளியை கரைத்து வருகிறது..!
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications