திண்டுக்கல் நகரில் சூட்டிங்கிற்கு வந்த தனுஷ் .. திக்குமுக்காட வைத்த ரசிகர்கள்.. ஸ்தம்பித்த பழனி ரோடு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி ரோட்டில் உள்ள (கோமத்து) தனியார் லாட்ஜில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 54-ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவு நடந்தது . இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. மாலை முதலே தனுஷை ஒருமுறை கண்ணால் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஹோட்டலைச் சுற்றி திரண்டனர். அவர்கள் அனைவரும் தனுஷை பார்த்த உடன் உற்சாகத்துடன் சூழந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தே பாதிக்கப்பட்டது.
நடிகர் தனுஷ் தேனி மாவட்டத்தில் இட்லி கடை திரைப்படத்தை எடுத்தார். தனது பெற்றோரின் சொந்த ஊரான தேனி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு ஷுட்டிங் நடத்தினார். தனது சொந்த ஊர் மக்களுக்கு கோவிலில் விருந்தும் வைத்தார். இதை கண்டு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது தனுஷ் இட்லி கடை படத்தை தொடர்ந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தனுஷின் 54வது திரைப்படம் ஆகும். திண்டுக்கல் மாவட்டம், பழனி ரோட்டில் உள்ள (கோமத்து) தனியார் லாட்ஜில் படப்பிடிப்பு நேற்று இரவு நடந்தது. இதை கேள்விப்பட்ட தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாகினர். திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் திரண்டார்கள்.

மாலை முதலே தனுஷை ஒருமுறை கண்ணால் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஹோட்டலைச் சுற்றி திரண்டார்கள். பலர் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும், ஆட்டோகிராஃப் வாங்கவும் காத்திருந்தனர்.
இரவு ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருந்தபோது இடையில் கேரவன் செல்வதற்காக வெளியே வந்த தனுஷைப் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகக் கூச்சலிட்டனர். அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடி கை அசைத்து நன்றி தெரிவித்தார்.
தனுஷ் ரசிகர்கள் பெருமளவு திரண்டு வந்த காரணத்தால், திண்டுக்கல் மாநகரின் பழனி ரோடு பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர்செய்தனர். தனுஷின் அடுத்தடுத்த ஷெட்யூல்களும் திண்டுக்கல் பகுதியிலேயே நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications