சென்னையின் சரித்திரம் மாறுகிறது.. தமிழகத்தில் வட்டமிட்ட "பருந்து".. வளையத்துள் "பிரபலங்கள்".. சபாஷ்
சென்னை: பிரபலமான ரவுடிகள் முதல் பதுங்கியிருக்கும் குற்றவாளிகள் வரை, மொத்த பேரையும் கண்காணிக்கும் அதிரடியை தமிழக போலீஸ் முன்னெடுத்துள்ளது. இது பொதுமக்களின் வரவேற்பையும் பெற துவங்கிவிட்டது.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக காவல் துறை தொடர் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. ஆனாலும், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து இப்படியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன..

குற்ற வழக்குகள்: இந்த 3 வருடங்களில் மட்டும் தமிழகத்தில் 220 ஆதாயக் கொலைகள், 352 கூட்டுக் கொள்ளைகள் நடைபெற்றுள்ளன. இதேபோல, 2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகளில் 4,872 கொலைகள், 7,017 வழிப்பறிகள் மற்றும் திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கடத்தல், தீ வைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்றுள்ளன...
எனவே, ரவுடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.. அந்தவகையில், தலைநகர் சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகள் இருந்த நிலையில், அவர்களை A, A+, B, B+ என்று பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது... இதைத்தவிர, மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டும் வருகிறார்கள்.
ரவுடிகள்: இதுபோக, ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், ஜாமீனில் வெளியே வந்த கொலைக் குற்றவாளிகளை கண்காணிப்பதற்காகவே, "பருந்து" என்ற புதிய செயலியை தமிழக காவல் துறை அறிமுகம் செய்திருக்கிறது.
அதாவது, குற்றச் செயல்களை முன்னரே கண்டறிந்து தடுக்கும் வகையிலும், ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் தமிழக காவல் துறையில் இந்த "பருந்து" என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது... முதல் கட்டமாக சென்னை பெருநகர காவலில் இந்த செயலி கடந்த ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா வடிவமைத்திருந்தார்.
சிறைச்சாலை: போலீஸ் ஸ்டேஷன்களிலுள்ள ரவுடி லிஸ்ட்டில் இருப்பவர்கள், அவர்களின் இப்போதைய நிலை, அவர்களின் குற்றச் செயல்கள் விவரம், அவர்கள் மீது உள்ள வழக்கு விவரங்கள், அவரது எதிர் தரப்பினர், கூட்டாளிகள், சிறையில் இருக்கிறாரா? வெளியே இருக்கிறாரா, அவரது பகுதியிலேயே வசிக்கிறாரா? வேறு எங்காது இடம் பெயர்ந்து விட்டாரா? உட்பட ரவுடிகளின் அனைத்து விபரங்களும் தினந்தோறும் கண்காணித்து இந்த பருந்து செயலியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது...
ரவுடிகள் மற்றும் கொலைக் குற்றவாளிகள் தலைமறைவாக இருந்தால்கூட, அவர்களுக்கு எதிரான பிடியாணைகளை நிறைவேற்றவும், நிலுவை வழக்குகளை கண்காணிக்கவும் இந்த பருந்து செயலி உதவும்.
செயலி விரிவாக்கம்: அந்தவகையில், "பருந்து" செயலி, சென்னை போலீஸாருக்கு பெரிதும் உதவி கொண்டிருக்கிறது.. அதனால்தான், இந்த செயலியை தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய போலீஸ் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்..
அதாவது, பருந்து செயலியில் ரவுடிகளின் நடவடிக்கைகளை உயர் அதிகாரிகள் கண்காணித்து, அது குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு தகவல் சொல்வார்கள்.. இந்த தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..
ரவுடிகள்: ஆனால், இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான், கடந்த வாரம் கொருக்குப்பேட்டையில் தினேஷ் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டுவிட்டார். இந்த "ஆப்" விஷயத்தில் அலட்சியமாகவும், மெத்தனமாகவும் செயல்பட்டதாக கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் யுவராஜை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.. இனியும் இந்த நடவடிக்கை தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதனால், காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் "பருந்து" ஆப்பில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பந்தம் செயலி: கடந்த ஜனவரி மாதம், சென்னையில் வசிக்கும், 75 வயதிற்கு மேற்பட்டவர்கள், தனியாக வசிப்பவர்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காகவே பந்தம் என்ற ஆப் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது.. அவசர சேவை உதவி தேவைப்பட்டால் காவல் துறையின் கட்டணமில்லா உதவி எண்: 9499957575ஐ பயன்படுத்தி கொள்ளலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications