சத்தமேயில்லாத சக்சஸ்.. ராணிப்பேட்டை டூ திருப்பத்தூர் ஹைவேஸில் கவனிச்சீங்களா? அதென்ன பளிச்ன்னு.. குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெடுஞ்சாலையில் நீங்கள் பயணம் மேற்கொள்ளும்போது, உங்கள் பயணம் பாதுகாப்பாக அமைய தமிழக அரசு அடுத்தக்கட்ட அதிரடியை கையில் எடுத்துள்ளது.

சாலை விபத்துகளை தடுக்க மத்திய அரசு எத்தனையோ விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது.

Fantastic Arrangement in Ranipet Vellore Titrupattur Highways and Did you now notice LED Lights in the Middle of Road

நம்முடைய தமிழகத்திலும், சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள், விழிப்புணர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு ரூ.900 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன...

சாலை விபத்துகள்: இதில், அதிக விபத்து பகுதியாக கண்டறிந்த 35 இடங்களில் சீரமைப்பு, மேம்படுத்தும் பணிகளை செய்வதுடன், மேம்பாட்டு பணிக்கான டெண்டர் மார்ச் மாதத்துக்கு முன்பே வழங்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் சொன்னபோது, "அதிக விபத்து நடக்கும் இடங்களாக 23 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.. இந்த 23 சாலைகளிலுமே சுமார் ரூ.390 கோடியில் விபத்து தடுப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.. இதன்காரணமாக சாலை விரிவாக்கத்தின் மூலமும், மேம்பாட்டுப் பணிகள் மூலமும், சாலைவிபத்துகள் வெகுவாக குறையும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.

சபாஷ் முயற்சி: இப்படிப்பட்ட சூழலில், ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து முக்கிய தகவல் ஒன்று வந்துள்ளது.. அதாவது, ராணிப்பேட்டை வாலாஜா முதல் திருப்பத்தூர் இடையே சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் ஆபத்தான விபத்துகளை குறிக்கும் கரும்புள்ளிகளில், சிறிய எல்.இ.டி. புரொஜெக்டர்கள் மூலம் தானாகவே இயங்கும் எச்சரிக்கை பலகைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்திருக்கிறார்கள்.

Fantastic Arrangement in Ranipet Vellore Titrupattur Highways and Did you now notice LED Lights in the Middle of Road

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் சொல்லும்போது, சென்னை-பெங்களூரு சாலையில் தினமும் 1.2 லட்சம் வாகனங்கள் சென்றாலும், இரவு நேரங்களில் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன. இவைகளை தடுப்பதற்கு எச்சரிக்கை பலகைகள் சரியாக இல்லை என்பதால், முதன்முறையாக இப்படி ஒரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.


வாகனம் :
இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும்போது தானியங்கி புரொஜெக்டர்கள் மூலம் சாலையின் நடுவில் Go Slow (மெதுவாக செல்லுங்கள்) என்ற ஆங்கில எழுத்துக்கள் வாகன ஓட்டிகளை பளிச்சிட்டு கவனிக்க செய்யும்.. இதன்மூலம் விபத்துக்களை தடுக்க முடியும் என்று நம்புகிறோம்.

இந்த சிறிய தானாகவே இயங்கும் எல்.இ.டி புரொஜெக்டர்கள் சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியனிலுள்ள போஸ்ட் கம்பங்களில் பொருத்தப்பட்டிருக்கின்றன.. குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள், போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிதல் போன்ற வாசகங்களும் ஒளிர்கின்றன.


திருப்பத்தூர்:
வேலூரில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை என இந்த 3 மாவட்டங்களில் மட்டுமே 13 இடங்களில் இப்படி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாம்.. தெரு விளக்குகள் எரியும் நேரமான, சாயங்காலம் மாலை 6 மணிக்கு இந்த விளக்குகளும் டக்கென எரியும்.. தெருவிளக்குகள் அணைக்கும் நேரமான காலை 6 மணி வரை, நெடுஞ்சாலையில், இந்த அலர்ட் லைட் எரிந்து கொண்டேயிருக்கும்" என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+