1000 ரூபாய் மாத மாதம் வரும்.. இந்த கார்டு இருந்தாலே ரூ.5 லட்சம் பெறலாம்.. மத்திய அரசின் செம திட்டம்
சென்னை: தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் கிடைக்கும் மத்திய அரசின் இ-ஷ்ரம் திட்டம் குறித்து தெரியுமா? இந்த திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், இதற்குரிய தகுதிகள் என்னென்ன? இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
மகளிர், குழந்தைகள், ஓய்வூதியதாரர்கள், விவசாயிகள், என அனைத்து தரப்பினருமே பலன்தரக்கூடிய வகையில், மத்திய அரசு புதுபுது திட்டங்களை அறிமுகப்படுத்தி, திறன்பட செயல்படுத்தியும் வருகிறது.

வாழ்வாதாரம்: அதிலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்காகவே, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்தகையை திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இதில் முக்கியமானதுதான் இ-ஷ்ரம் கார்டு திட்டமாகும்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த தொழிலாளர்களுக்கு, மாத மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் திட்டம் இதுவாகும்.. ஆனால், உங்களிடம் இ-ஷ்ரம் கார்டு இருந்தால்தான் இந்த பலனை பெற முடியும். இந்த லேபர் கார்டில் 12 இலக்க எண்கள் இருக்கும்..
தொழிலாளர்கள்: இ-ஷ்ரம் போர்ட்டல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டு பணியாளர்கள் உட்பட பிற தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் அட்டை கார்டு மூலம் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இ-ஷ்ரம் கார்டுக்கான தகுதியான பதிவுகளை 30 பரந்த வணிகத்துறைகள் மற்றும் சுமார் 400 தொழில்களின் கீழ் e-Shram போர்ட்டலில் பதிவு செய்யலாம்.
இந்த இ-ஷ்ரம் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் நிதியுதவி வங்கிக் கணக்கில் வந்து சேரும். குறிப்பாக, ரூ. 2 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு கிடைக்கும்... அதேபோல, இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை விபத்து காப்பீடு வசதி கிடைக்கும். விபத்தில் தொழிலாளி இறந்தால் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். விபத்தில் தொழிலாளி ஊனமுற்றால் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்...
அடல் பென்சன்: அதேபோல, அடல் பென்சன் யோஜனா உள்ளிட்ட அரசின் திட்டங்களை பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மாதம் 3,000 ரூபாய் பென்சன் பெறலாம். வீடு கட்ட நிதியுதவி தரப்படுகிறது.. தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.. அதுமட்டுமல்ல, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் மகள்களின் திருமணம் முதல் மருத்துவ சிகிச்சைகள் வரை அனைத்துமே இதில் உள்ளன.
இந்த இ-ஷ்ரம் கார்டினை நீங்கள் பெற வேண்டுமானால், இதற்கு ஒருசில தகுதிகள் அவசியமாகிறது.. அதன்படி, அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள் இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் தொழிலாளி, இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.
முக்கிய ஆவணங்கள்: இ-ஷ்ரம் கார்டு பெற வேண்டுமானால், முக்கிய ஆவணங்கள் சில தேவை.,.. விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர், வங்கி பாஸ்புக் போன்றவை தேவைப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது: இ-ஷ்ரம் கார்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதி உள்ள தொழிலாளர்கள் இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். E-Shram கார்டுக்கு விண்ணப்பிக்க, eshram.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். பிறகு அந்த வெப்சைட்டிலிருந்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து அருகிலுள்ள தொழிலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை வெப்சைட்டில் பதிவு செய்ய முடியாவிட்டால், அரசு இ-சேவை மையம் அல்லது CSC மையத்திற்குச் சென்று பதிவு செய்யலாம்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications