Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திர ஆபீஸில் இனி இதுவும் மாறுது.. தமிழகத்தில் ஆவண பதிவில் சிக்கல் வராது! பதிவுத்துறை அடுத்த அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவு துறையில் நாளுக்கு நாள் புதிய வசதிகள் அமல்படுத்தப்பட்டு வரும்நிலையில், இன்னொரு வசதியையும் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சொத்திற்கு பட்டா பெறுவது பெரும்பாடாகிவிடுகிறது.. அதனால்தான், பொதுமக்கள் பட்டா எளிதாக பெறும் வகையிலான பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

Registration Department Deed Registration Tamil Nadu Government Document registration

அந்தவகையில், "ஒரு நிமிட பட்டா திட்டம்" மூலம் பத்திரப்பதிவு செய்தவுடன் தானியங்கி முறையில் தானாக பட்டா மாற்றம் செய்யப்படும். இனி வருவாய்த்துறைக்கு அனுப்பப்படாது.ஆனால் இந்த திட்டம், உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றத்திற்கு மட்டும் பொருந்தும்.

பட்டா: அதாவது சொத்தினை விற்பவர்கள் பெயரில் பட்டா இருந்து, அந்த பட்டாவில் உள்ள சொத்து அளவினை முழுமையாக அப்படியே வாங்குபவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படும்... அதற்கான பணிகள் சுமார் 90 சதவீதம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது..

சில இடங்களில் சோதனை அடிப்படையில் தானியங்கி முறையில் ஒரு நிமிட பட்டாவும் வழங்கப்படுகிறது. விரைவில் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் நடைமுறை முழு அளவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.

இந்நிலையில் இன்னொரு புதிய வசதியை பதிவுத்துறை அறிமுகம் செய்திருக்கிறது.. அந்தவகையில், ஆள்மாறாட்டம் மோசடிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சொத்து பரிமாற்றத்தில் ஆள் மாறாட்டத்தை தடுக்க, விற்பவரின் கைரேகையை முந்தைய பதிவுடன் ஒப்பிட்டு பார்க்கும் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

சொத்து விற்பனை: சமீபகாலமாகவே, சார் -- பதிவாளர் அலுவலகங்களில், சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்வதில் ஆள் மாறாட்டத்தை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. குறிப்பாக, சொத்து விற்பவர், வாங்குபவர் ஆகியோரின் கைரேகை உள்ளிட்ட, பயோமெட்ரிக் விபரங்கள், போட்டோக்கள் பெறப்படுகின்றன. இந்த விபரங்களின் உண்மை தன்மையை, ஆதார் பதிவுடன் ஒப்பிட்டு பார்க்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வளவு வசதிகள் இருந்தும்கூட, பல இடங்களில் ஆள் மாறாட்டம் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. எனவேதான், ஆவணப்பதிவின் போது சொத்தை விற்பவரின் விரல்ரேகைப் பதிவை ஒப்பிடும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

ஆவணங்கள்: இதுகுறித்து பதிவுத்துறை செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதில், "தமிழகத்தில், பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் குறித்த விழிப்புணர்வு செய்தியை முன் ஆவணதாரருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதி மற்றும் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவரது விரல்ரேகை, ஆதார் மற்றும் கருவிழிப்படல தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதன் மூலம் தவறான ஆவணப்பதிவுகள் தடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆள்மாறாட்டத்தை முற்றிலும் தவிர்க்கும் நோக்குடன் ஒரு நபர், சொத்தை விற்கும்போது தனது சொத்து விற்பனையை ஒப்புக் கொள்ளும் முகமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் விரல் ரேகையை பதிவு செய்வார்.

விரல்ரேகை: அப்போது இந்த சொத்து தொடர்பான முந்தைய ஆவணப்பதிவின் போது சொத்து உரிமையாளரிடம், வாங்குபவர் நிலையில் அவரிடம் பெறப்பட்ட விரல்ரேகையுடன் ஒப்பிட்டு, இரண்டு விரல் ரேகைகளும் ஒத்திருக்கும் பட்சத்தில் மட்டுமே பதிவுக்கு ஏற்கும் வண்ணம் ஸ்டார் 2.0 மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு பொருந்தாத நிகழ்வுகளில் சார்பதிவாளர் ஆவணப்பதிவின் உண்மை நிலையை விசாரித்து பதிவினை மேற்கொள்ளும் வண்ணம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட வசதியின் மூலம் ஆவணப் பதிவில் ஆள்மாறாட்ட மோசடி முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன் பொதுமக்களின் சொத்துக்களும் பாதுகாக்கப்படுவதை பதிவுத்துறை உறுதி் செய்கிறது.

தென்சென்னை: இந்நிலையில், இவ்வாறான விரல்ரேகை பதிவு ஒப்பிடும் வசதியை சென்னையில் இன்று அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். குறிப்பாக, தென்சென்னை இணை -1 சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதியானது, கடந்த 2018-ம் ஆண்டு பிப்.13-ம் தேதிக்கு பிந்தைய ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்எல்ஏ ஆ.வெங்கடேசன், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+