ரூ.1 கூட செலவில்லாமல் 5 லட்சம் ரூபாய்.. ரேஷன் கார்டு இருக்கா? அப்ப கன்பார்ம்டு.. மத்திய அரசு சூப்பர்
சென்னை: ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat - Pradhan Mantri Jan Aarogya Yojana) திட்டம் பற்றி தெரியுமா? மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தின் பலன்கள் என்னென்ன தெரியுமா?
கடந்த 2018 செப்டம்பர் மாதம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். நாட்டிலுள்ள எல்லா குடிமக்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம் இதுவாகும்.

இந்த திட்டத்தின்படி, ஒரு குடும்பத்துக்கு, வருடத்துக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்ட காலத்தில், போதுமான அளவு வசதியும் இல்லாத சூழலில், உரிய சிகிச்சையும் கிடைக்காமல் எத்தனையோ பேர் அவதிக்கு ஆளாகிறார்கள்..
இதனால், கடன் வாங்கி சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்கும் ஆளாகிவிடுகிறார்கள்.. இதுபோன்ற நெருக்கடியில தவிப்போருக்காகவே, அவர்களுக்கு உதவிடும் வகையில் கொண்டுவரப்பட்டதுதன் இந்த மருத்துவ காப்பீடு திட்டம்.
காப்பீடு திட்டம்: ஆயுஷ்மான் பாரத் பிரதார் ஜன் ஆரோக்கியா திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், உலகிலேயே மிகப்பெரிய, அரசால் முழுவதுமாக மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டம் இதுவாகும்.
அதுமட்டுமல்ல, குடும்பத்தின் அளவு, வயது, பாலினம் என எந்த வரம்புகளும் இதற்கு கிடையாது.. ஆனால், மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு (inpatients) மட்டுமே சலுகைகள் கிடைக்கும். குறிப்பாக, புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள் உட்பட 26 பிரிவுகளில் 1669 மருத்துவ முறைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, இந்த திட்டத்தில் சலுகைகள் உண்டு.
5 லட்சம் ரூபாய்: 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்குகிறது இந்த திட்டம்.. இந்த அட்டையைப் பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். செல்போனில் ஆன்லைனிலிருந்தே இந்த ஆயுஷ்மான் கார்டை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இந்த ஆயுஷ்மான் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை வசதியையும் பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து வெளியான அறிக்கையில், ஆயுஷ்மான் பாரத் பிரதார் ஜன் ஆரோக்கியா திட்டத்தில் தகுதி உடைய எல்லாருமே பயனடைவார்கள். ஒருவேளை, இதுவரை இந்த திட்டத்தில் சேராமல் இருந்தால், நீங்கள் சேருவதற்கு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு: நீங்கள் ஆயுஷ்மான் கார்டு பெற வேண்டுமானால், உங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆகும். மேலும் ஆயுஷ்மான் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். அதன் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் உங்களுடைய ரேஷன் கார்டு அல்லது தொழிலாளர் அட்டை கொண்டு பெயரை சேர்க்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications