பட்டா மாறுதல்.. கிராம நத்தம் நிலப்பட்டா வெச்சிருக்கீங்களா? டிஜிட்டல் ஆவணத்தில் தமிழக அரசு அடுத்த நச்
சென்னை: தமிழகத்தில் நிலம் தொடர்பான பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கிராம நத்தம் நில ஆவணங்கள் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கடந்த 2023-24 பட்ஜெட் தாக்கலின்போது, அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நத்தம் நிலங்களுக்கு விரைவில் இணையவழி பட்டா மாறுதல் முறை கொண்டுவரப்படும் என்று அறிவித்திருந்தார்..

நத்தம் பட்டா: பிறகு அந்த அறிவிப்பு அமலுக்கும் வந்துவிட்டது.. கிராம நத்தம் பட்டாக்கள் அரசு புறம்போக்கு நிலங்களாக கருதப்படுவதாலும், பல காலமாகவே, மக்கள் வாழும் பகுதிகளாக இருந்ததாலும், அவற்றை அனுபவ ஸ்வாதீன இடங்களாக கருதி, 1991ல் நத்தம் பட்டாவாக அளவீடு செய்து, அப்போதைய உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
எனவே, இதுவரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாத நிலைமை இருந்துவந்த நிலையில், அவற்றை கணக்கீடு செய்து, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறையும் தற்போது துவங்கப்பட்டுள்ளது.
வழிகாட்டி மதிப்பு: ஆன்லைனிலேயே நத்தம் இணையவழி பட்டா மாறுதல் செய்ய முடியும் என்று முதல்வர் ஸ்டாலினும் அறிவித்துள்ளார்.. நத்தம் நிலம் தொடர்பான விவரம் ஆன்லைன் மயமாகிவிட்டதால், வழிகாட்டி மதிப்பு விரைவில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும், அரசு வழங்கிய பட்டா மற்றும் பத்திர அடிப்படையில், உரிமையாளர் முழுமையான உரிமைகளையும் இனி எளிதாக பெற முடியும் என்று நம்பப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கிட்டத்தட்ட 1.42 கோடி நத்தம் நில ஆவணங்கள், தமிழகத்தில் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக, நில அளவைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, நில அளவைத் துறை இயக்குனர் பி.மதுசூதன் ரெட்டி, அனைத்து கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்..
டிஜிட்டல் ஆவணங்கள்: அந்த கடிதத்தில், "தமிழகத்தில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள், 2014 முதல் நடந்து வருகின்றன. இதில், தற்போதைய நிலவரப்படி, 1.42 கோடி நத்தம் நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.. இந்த டிஜிட்டல் ஆவணங்கள், பல்வேறு கட்ட சரிபார்ப்புக்கு பின், தற்போது தமிழ்நிலம் தகவல் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
இ - சேவை இணையதளம் வாயிலாக, தமிழ்நிலம் தகவல் தொகுப்பில், நத்தம் நில ஆவணங்களை பொதுமக்கள் பார்க்கலாம். இ - சேவை மையங்கள் வாயிலாக, நத்தம் நில பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர் முதல் பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
கடிதம்: இப்புதிய வழிகாட்டுதல்களை அலுவலர்கள் கடைபிடிப்பதை கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும். நத்தம் நில பட்டா மாறுதலுக்கு மக்கள், இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்காக பொதுமக்களை தாலுகா அலுவலகங்களுக்கு வரும்படி அலைக்கழிக்கக் கூடாது" என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications