"1000 ரூபாய்".. இந்த தேதியில்தான் நமக்கு வரப்போகுது.. அதைவிடுங்க.. ரேஷன் கடைக்கு பறந்த ஹேப்பி நியூஸ்
1000 ரூபாய் மகளிருக்கு வழங்குவதற்கான பணிகள் வேகம் எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: திமுக அரசின் முக்கிய வாக்குறுதியான, பெண்களுக்கான 1000 ரூபாய் எப்போது கிடைக்கும்? யாருக்கெல்லாம் இந்த 1000 ரூபாய் கிடைக்கும்? என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.. அதற்கான பணிகளும் இன்று முதல் ஆரம்பமாகி உள்ள நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் ஒரு ஹேப்பி நியூஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் தொகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் சென்றிருந்தார்.. அப்போது அவர் அத்தொகுதி மக்களிடம் பேசும்போது திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.
இதே இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருந்தபோது, திமுக அரசின் குறைகளை எல்லாம் லிஸ்ட் போட்டு பேசினால், முதல்வர் ஸ்டாலின் சாதனைகளை லிஸ்ட் போட்டு சொன்னார். அப்போது, மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்தும் பேசினார்..

கண் கண்ணாடி
"கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் 85 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. இன்னும் 3 ஆண்டு கால ஆட்சி மிச்சம் இருக்கிறது. அதுக்கள்ளே, சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம். இன்னொரு முக்கியமான வாக்குறுதி ஒன்று இருக்கிறது.. அதை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். அதுதான் மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சி காலத்தில் கஜானாவை காலி செய்து விட்டு கடன் வைத்து விட்டு போய் விட்டார்கள். அதை படிப்படியாக சரி நாங்கள் செய்து வருகிறோம்... எப்படியும், வரும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று உறுதியாக சொல்கிறேன்... ஏனென்றால், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நான் சொன்னால் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று கூறியிருந்தார்.

1000 ரூபாய்
பட்ஜெட்டில் இந்த 1000 ரூபாய் குறித்த அறிவிப்பு வெளியானாலும்கூட, ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன்3ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... அதுமட்டுமல்ல, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்கிறார்கள்.. அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

க்ளீன்போல்ட்
மேலும், புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயார்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் மாற்றம் ஏதும் செய்ய தேவையில்லை என்றும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல, 60 வயதுக்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவித்தொகையிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் கூறப்படுகிறது..

ஹேப்பி நியூஸ்
எப்படியும் மார்ச் 2வது வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.. நேற்றைய தினம் இடைத்தேர்தல் ரிசல்ட் வந்துவிட்ட நிலையில், இன்று முதல் பட்ஜெட் பணிகள் வேகம் எடுக்கும் என தெரிகிறது.. இதனிடையே, ரேஷன் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது. கூட்டுறவு துறை நடத்தும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பதவிகளில், 25 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, பல வருடங்களாகவே பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

தகருது தடைகள்
எனவே, ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, காலி பணியிடங்களுக்கு ஏற்ப, சீனியாரிட்டி அடிப்படையில் விற்பனையாளருக்கு இளநிலை உதவியாளர், உரம் விற்பனையாளராகவும், எடையாளருக்கு, விற்பனையாளராகவும் பதவி உயர்வு வழங்கும்படி, இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத் துறை, சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.. ஆனால், அதை, பலவ சங்கங்கள் முறையாக பின்பற்றவில்லை.. எனவே, இது தொடர்பாக, சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், மண்டல இணை பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்..

சந்தோஷம் + பூரிப்பு
அதில், நீதிமன்ற ஆணையில் தகுதியுள்ள விற்பனையாளர், எடையாளருக்கு பதவி உயர்வு வழங்கி, பின்னர் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்றவாறு, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வாயிலாக, ஆட்களை நிரப்ப அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, தங்கள் மண்டலத்தில் பணிபுரியும் தகுதியுள்ள விற்பனையாளர், எடையாளருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட விபரத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரேஷன் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட விபரத்தை அனுப்புமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications