போட்றா வெடிய.. 20 ஆண்டு கால ஊழியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு.. ஹேப்பி நியூஸ்.. யாருக்கு பாருங்க
சென்னை: 20 ஆண்டு கால ஊழியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.. இந்த முக்கிய அறிவிப்பினால், ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக மின் வாரிய ஊழியர்களுக்கு, 2019 டிசம்பர் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது... எனவே, 2019 டிசம்பர் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை விரைந்து வழங்கக் கோரி, ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையும் 2 மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர்..

ஆனால், இந்த போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது.. இதுதொடர்பாக தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், 5 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க மின் வாரியம் ஒப்புக் கொண்டது.
ஊழியர்கள்: மேலும், ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பொங்கல் பரிசாக ஓய்வூதியர்களுக்கு ரூ.500 வழங்கவும் மின்வாரியம் உத்தரவிட்டது.. இதனிடையே, 5 சதவீத ஊதிய உயர்வு குறித்து மின்வாரியம் வழங்கியுள்ள கருத்துரு தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆலோசனையும் நடந்தது..
இவ்வாறான, பேச்சுவார்த்தைகள், ஆர்ப்பாட்டங்கள் என கடந்த 4 வருடங்களாகவே இந்த விவகாரம் முடிவுக்கு வராமலேயே நீண்டு கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் இறுதியில், மின் வாரியம் சார்பில் வழங்கப்பட்ட கருத்துருவில், "அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவருக்கும் 6 சதவீத ஊதிய உயர்வும், 25 ஆண்டு பணி முடித்தவருக்கு கூடுதலாக 3 சதவீதம் ஊதிய உயர்வும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது..
ஊதிய உயர்வு: மேலும், 2022 அக்டோபர் முதல் ஊதிய உயர்வு நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என்றம் கூறப்பட்டது.. ஆனால், இதை ஏற்காத தொழிற்சங்கங்கள், 10 ஆண்டு பணி முடித்தவருக்கு கூடுதல் ஊதிய உயர்வும், 10 சதவீதத்திற்கும் மேல் ஊதிய உயர்வும் வழங்குமாறு வலியுறுத்தின. இந்நிலையில், ஒரு ஸ்வீட் நியூஸ் தமிழக மின் வாரிய ஊழியர்களுக்கு வந்துள்ளது.. சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், நேற்று 19 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன், ஊதிய உயர்வு தொடர்பாக, உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நிதித் துறை கூடுதல் செயலர் பிரசாந்த் வடநேரே உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, கூட்டத்தில் பிரசாந்த் வடநேரே பேசும்போது, "வாரியம் நிதி நெருக்கடி மற்றும் ஊழியர்களின் பணிச்சுமை கருதி, ஊதிய உயர்வு வழங்கப்படும்" என்றார். அதேபோல, வாரியம் தரப்பில், "2022 ஏப்ரல் முதல் நிலுவைத் தொகையுடன் ஊதிய உயர்வு வழங்கப்படும், 20 ஆண்டு பணி முடித்தவருக்கு கூடுதல் ஊதிய உயர்வு உண்டு" என்று உறுதி கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications