"நெறஞ்ச மனசு" விஜயகாந்த்.. மாலையும் கழுத்துமாக.. பட்டுவேட்டி + பளிச் விபூதி + அதே கூலிங் கிளாஸ்..ஆஹா
கேப்டன் விஜயகாந்த், தன்னுடைய திருமணநாளை குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்
சென்னை: நெற்றியில் திருநீறு பளிச்சிட, பட்டுவேட்டி, மாலையும் கழுத்துமாக காணப்படும் விஜயகாந்த்தின் போட்டோக்கள் இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
விஜயகாந்த்தின் வெள்ளந்தி பேச்சும், கசியும் ஈர மனசும் தான் இன்றுவரை கேப்டன் என்ற பெயரை அவரது ரசிகர்களிடமும், தொண்டர்களிடமும் உச்சரிக்க வைத்து வருகிறது..
ஆனால், எத்தனையோ சறுக்கல்கள், எத்தனையோ கஷ்டங்கள், எத்தனையோ வலிகள், எத்தனையோ ஏமாற்றங்களை கடந்துதான், கேப்டன் என்ற அடைமொழிக்குள் விஜயகாந்த்தால் உள்ளே வர முடிந்தது..

வாழ்த்தொலி
அரசியலையும் தாண்டி ஒருவர் விரும்பப்படுவது இந்த காலத்தில் அபூர்வம்.. அதில், மிகமிக முக்கியமானவர் விஜயகாந்த்.. கடந்த சில வருடங்களாகவே உடம்பு சரியில்லாமல் போய்விடவும் தளர ஆரம்பித்துவிட்டார்.. ஏராளமான சிகிச்சைகள் எடுத்து கொள்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.. எனினும் முன்புபோல் அவர் வெளியே வருவதில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், விஜயகாந்த் 70வது பிறந்தநாளின்போது, ரசிகர்களை, தொண்டர்களை சந்தித்தார்.. விஜயகாந்தால் யாரிடமும் பேச முடியவில்லை என்றாலும், தொண்டர்களின் வாழ்த்தொலியை கேட்டு பூரித்து போனார்..

விஜயகாந்த்
உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கினார்.. கூட்டத்தினரை பார்த்து "தம்ப்ஸ்அப்" சின்னத்தில் விரல் காட்டினார்.. பிறகு இரு கைகளையும் கூப்பி கூட்டத்தினருக்கு வணக்கம் சொன்னார்.. ஆனால், 10 விரல்களையும் ஒன்றாக சேர்த்து அவரால் வணக்கம் தெரிவிக்க முடியவில்லை.. பிறகு, இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணக்கம் சொல்லி கொண்டே இருந்தார். ஆனாலும், அன்றைய தினமும் தளர்ந்துபோய்தான் விஜயகாந்த் காணப்பட்டார். "மாசத்துக்கு ஒருமுறையாவது, கேப்டனை எங்கள் கண்ணில் காட்டுங்கள், எங்களுக்கு வேற எதுவுமே வேணாம், எங்க தெய்வத்தை நாங்க கண்ணால் பார்த்தாலே போதும்" என்று தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் கண்ணீருடன் உருகி கோரிக்கை வைத்ததை அன்றையதினம் காண முடிந்தது.

சுதீஷ்ஷா
அதனால்தானோ என்னவோ, சமீபகாலமாகவே, விஜயகாந்த் தொண்டர்களை சந்திப்பது அல்லது அவர் சம்பந்தப்ப்பட்ட போட்டோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.. வழக்கமாக புத்தாண்டு தினத்தன்று தொண்டர்களை சந்திப்பது விஜயகாந்த் வழக்கம்.. அப்படித்தான், புத்தாண்டில் விஜயகாந்த்தை தொண்டர்களும், ரசிகர்களும் பார்த்து பூரித்து போனார்கள்.. சமீபத்தில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பிறந்தநாள் போட்டோவும் இணையத்தில் வெளியானது.. அந்த போட்டோவில் சற்று தளர்ந்து போய் காணப்பட்டார் விஜயகாந்த்.. உடல் எடை குறைந்து காணப்பட்டார்..

ஈரமனசு
சிகிச்சை, மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்வதால், தோற்றத்தில் மாறுபாடுகள் ஏற்படலாம் என்றாலும், அந்த போட்டோவில் அளவுக்கு அதிகமாக மெலிந்திருந்தது பலரது கண்களையும் கலங்க வைத்து. இன்று விஜயகாந்த்தின் திருமண நாள்.. 33வது திருமண நாளை, தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார். அந்த போட்டோவும் வெளியாகி உள்ளது.. அந்த போட்டோவில் தேமுதிக துணை பொது செயலாளரும் தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ், அவரது மனைவி பூரண ஜோதி ஆகியோர் கேப்டன் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்..

நெற்றியில் விபூதி
அந்த போட்டோவில் பட்டு வேஷ்டி சட்டையில் விஜயகாந்த் காணப்படுகிறார். கழுத்தில் மாலை உள்ளது.. வழக்கம்போல் நெற்றியில் விபூதி பளிச்சிடுகிறது.. அருகில் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் இருவருமே இருக்கிறார்கள்.. அதே போல் விஜயகாந்த்தின் ஆஸ்தான இயக்குனர்களின் ஒருவரான எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆரம்ப காலத்தில், விஜயகாந்த் எஸ்.ஏ.சி இயக்கத்தில் சுமார் 17 படங்களில் நடித்துள்ளார்...

நெறைஞ்ச மனசு
அந்தவகையில், விஜயகாந்த்தின் வளர்ச்சியில் எஸ்ஏசிக்கு பெரும்பங்கு இருப்பதை மறுக்க முடியாது.. தன்னுடைய திருமண நாளை முன்னிட்டு மனைவி பிரேமலதாவுடன், மாலையும், கழுத்துமாக விஜயகாந்த் உள்ளார்.. அந்த போட்டோவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்ததுமே விஜயகாந்த்துக்கு வாழ்த்துக்களை தொண்டர்களும் ரசிகர்களும் நிறைந்த மனதுடன் தெரிவித்து வரும்நிலையில், "கேப்டன், இப்படி எங்களால் உங்களை பார்க்க முடியவில்லை. அதே கம்பீரத்துடன் சீக்கிரமா வந்துடுங்க கேப்டன்" என்று உரிமையுடன் கோரிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன..!!!
-
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications