Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ட்விஸ்ட்.. தாமரையில் கவிழ்ந்த "உதயசூரியன் சின்னம் எம்.பி".. அண்ணாமலை அறிவாளி..சொல்றது யார் பாருங்க

ஐஜேகே பாரிவேந்தர் பாஜகவுடன் கூட்டணி வைக்க நிறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் எம்பி தேர்தலில் தமிழக பாஜகவுடன், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? என்ற சந்தேகங்கள் நிலவிவரும் நிலையில், இதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளதாகவே நம்பப்படுகிறது.. இன்றைய தினம், அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியானது, திடீர் திருப்பத்தையும் அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

உதயசூரியன் சின்னத்தில் எம்பியாக இருந்துகொண்டே, திமுகவை சரமாரி விமர்சித்து வருபவர் ஐஜேகே பாரிவேந்தர்.. "குடும்ப ஆட்சி, குடும்ப அரசியல் கூடாது.. பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் குடும்ப ஆட்சி அகற்றப்பட்டது போல் தமிழகத்திலும் குடும்ப அரசியல் ஒழிக்கப்படும்" என்றெல்லாம் பேட்டிகளை தந்து வருபவர்.

அந்தவகையில், வரும் எம்பி தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் ஐஜேகே இடம்பெற வாய்ப்பில்லை என்றும், பாஜக அல்லது அதிமுகவுடன் இணைந்து ஐஜேகே தேர்தலை சந்திக்கக்கூடும் என்றும் தகவல்கள் வலம் வருகின்றன.

 ரவி பச்சமுத்து

ரவி பச்சமுத்து

அதற்கேற்றவாறு, கடந்த மாதம் திடீரென, எடப்பாடி பழனிசாமியை ரவி பச்சமுத்து நேரில் சென்று சந்தித்து பேசியிருந்தார்.. இதைவிட இன்னொரு ஹைலைட் என்னவென்றால், ரவி பச்சமுத்துவின் பிறந்தநாள் விழாவிலேயே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.. திமுக எம்பி வீட்டில், அண்ணாமலையா? என்று அப்போதே பலர் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.. அத்துடன் பாஜக - பாரிவேந்தர் கூட்டணியும் ஓரளவு சாத்தியம் என்றே சலசலக்கப்பட்டது.

பச்சமுத்து

பச்சமுத்து

இதனிடையே, ஐஜேகேவுடன் கூட்டணியை பேசி முடித்து, பெரம்பலூர் தொகுதியை பாரிவேந்தருக்கு மறுபடியும் பெற்று தருவதாக பாஜக உறுதி தந்ததாம்.. இதையடுத்து, தேர்தலில் போட்டியிடுமளவுக்கு தனக்கு உடல்நிலை ஒத்துழைக்காது என்பதால், தனக்கு பதிலாக மகன் ரவி பச்சமுத்துவை நிறுத்த, பாரிவேந்தர் முடிவெடுத்திருப்பதாகவும், இதற்காகவே, அப்பாவின் பெரம்பலூர் தொகுதிக்குள் ரவி பச்சமுத்து அடிக்கடி தென்பட துவங்கி உள்ளதாகவும் செய்திகளும் அடிக்கடி அடிபட்டன.

 வறுபட்ட சேனல்

வறுபட்ட சேனல்

இப்படிப்பட்ட சூழலில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, செய்தியாளர்களிடம் கொந்தளித்து பேட்டி தந்திருந்தார் அண்ணாமலை.. இதில் அதிகம் வறுபட்டது பாரிவேந்தரின் புதிய தலைமுறை டிவி சேனல் செய்தியாளர் ஆவார்.. "நீங்கள் எந்த சேனல்" என்று புதிய தலைமுறை செய்தியாளரை கேட்ட அண்ணாமலை, திமுக அமைச்சர் மீது மிக முக்கியமான குற்றச்சாட்டு உள்ளது. வீடியோ ஆதாரத்துடன் உள்ளது, நான் அதை தருகிறேன், நீங்கள் அதை டெலிகாஸ்ட் செய்வீர்களா? என்று கேட்டார்.

 டெலிகாஸ்ட்

டெலிகாஸ்ட்

இதனால் எரிச்சலடைந்த புதியதலைமுறை டிவி செய்தியாளர், "ஒவ்வொருமுறையும் நீங்கள் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள் ஆனால் ஆதாரத்தை தர மறுப்பது ஏன்? என்று கேட்டார். இந்த கேள்வியால், கொந்தளித்துப்போன அண்ணாமலை, பிஜிஆர் எனர்ஜி குறித்த ஆதாரம் உள்ளது, அதை ஒளிபரப்புவீர்களா என்று மறுபடியும் புதிய தலைமுறை செய்தியாளரிடம் கேட்டதுடன், "நான் கொடுக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் அரைமணி நேரம் உங்கள் சேனலில் ஒளிபரப்ப வேண்டும், அரை மணி நேரம் ஒளிபரப்பு செய்துவிட்டு, அதற்கு பிறகு என்கிட்ட வந்து கேள்வியை கேட்க வேண்டும்.

ஜால்ரா

ஜால்ரா

நான் கொடுக்கும் ஆதாரங்களை போடாமல், அந்த கட்சிக்கு ஜால்ரா அடித்து விட்டு இங்கே வந்து கேட்கக்கூடாது... நான் பிஜிஆர் ஆதாரத்தை பிரஸ்மீட்டில் கொடுத்தும் அதை நீங்கள் ஒளிபரப்பு செய்ய வில்லை. சும்மா வந்து கேள்வி கேட்டு கதை விடக்கூடாது. நான் கொடுக்கும் ஆதாரத்தை போடாமல் முதலமைச்சர் டீ குடித்தார், காபி குடித்தார், சைக்கிளில் போகிறார் என்று தானே நியூஸ் போடறீங்க? நீங்க வாங்க நான் ஆதாரம் தருகிறேன், ஆனால், அதை டெலிகாஸ்ட் செய்ய வேண்டும். முதல்ல பிஜிஆர் எனர்ஜி பற்றிய ஆதாரம் தருகிறேன், அப்பறம் ஒவ்வொன்னாக தருகிறேன்" என்று புதிய தலைமுறை டிவி மீது சீறியிருந்தார் அண்ணாமலை...

 கழண்டோடும் சக்கரம்

கழண்டோடும் சக்கரம்

விரைவில், பாஜகவுடன் கூட்டணிக்கு பாரிவேந்தர் தயாராகி வரும்நிலையில், அதுவும் அவர்கள் கேட்ட தொகுதியையே ஒதுக்கி தருவதாக பாஜக மேலிடம் உறுதி தந்துள்ளதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், அவர்களின் சொந்த டிவி நிருபரை வைத்தே அண்ணாமலை இப்படி சீறியிருந்தது பரபரப்பாக பேசப்பட்டது.. ஒருவேளை பாரிவேந்தரை, பாஜக கூட்டணியில் சேர்க்காமல் கழட்டிவிடுவதற்காக இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பினாரா அண்ணாமலை? என்றும் சிலர் கிளப்பி விட்டார்கள்.. இந்த சந்தேகங்களுக்கெல்லாம் பாரிவேந்தரே, இன்றைய தினம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.. அத்துடன், செய்தியாளர்களுக்கும் சில அறிவுரைகளை தந்துள்ளார்.

 லேசுப்பட்டதா

லேசுப்பட்டதா

பாரிவேந்தர் பேசியபோது, "நிருபர்களும் கொஞ்சம் சூழ்நிலையை அனுசரித்து போகணும்.. அண்ணாமலை சின்ன வயசில் பெரிய பதவிக்கு வந்திருக்கிறார்.. அவர் மிகப்பெரிய அறிவாளி.. அவர் இல்லேன்னா, இன்னைக்கு எதிர்க்கட்சியே இல்லாமல் போயிருக்கும்.. கையில் அத்தனை டேட்டாவும் வைத்திருக்கிறார்.. எல்லா வரலாறுகளையும் கையில் வைத்திருக்கிறார்.. ஐபிஎஸ் வரை படிப்பது அவ்வளவு லேசான காரியம் இல்லை.. எந்த கேள்விக்கும் பதில் சொல்கிறார்.. அப்படி அவர் பதில் சொல்லும்போது, நீங்கள் அவரை கேள்வி கேட்கறீங்க?

 கன்பார்ம்டு

கன்பார்ம்டு

அவர் பேட்டி தருகிறார் என்றாலே, இருக்கிற எல்லா சேனல்களும் கிளம்பி வந்துடறாங்க. இப்போது நான் பேட்டி தரும்போது, அமைதியாக இருக்கிறீர்கள்.. ஆனால், அவர் பேட்டி என்றதும் ஜே ஜே என்று சத்தம் போடறாங்க. அவருக்கு சொந்த கட்சியில் சில பிரச்சனைகள் இருக்கிறது.. அந்த பிரச்சனைகள் காரணமாக, அவர் சற்று சிரமத்தில் இருக்கிறார்.. இப்படிப்பட்ட சூழலில், போட்டி போட்டுக் கொண்டு, அவரிடம் சில கேள்விகளை கேட்பது என்பது முறை கிடையாது.. தமிழகத்துக்கு தேவையான சிறந்த தலைவர் பாஜகவில் இப்போது இருக்கிறார்.. அதனால் அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு என்பது நாங்களே எதிர்பாராத ஒன்றுதான்" என்று கூறியுள்ளார் பாரிவேந்தர்.. ஆக, பாஜக கூட்டணியில் ஐஜேவுக்கு, "பெரம்பலூர் கன்பார்ம்டு" போல..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+