PF கணக்கில் பணம் எடுக்கணுமா? அவசர தேவைக்கு எடுப்பது எப்படி? பிஎஃப் அட்வான்சுக்கு ஆவணம் தேவைப்படுமா?
சென்னை: பிஎஃப் பணத்தை உடனே நீங்கள் எடுக்க முடியுமா? முதுமை காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக பிஎஃப் முன்பணம் எடுக்கலாமா? எவ்வளவு எடுகக்கலாம்? இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
பிஎஃப் என்பது ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையாகும்.. அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் எல்லா ஊழியர்களுக்குமே பிஎஃப் கணக்குகள் கண்டிப்பாக இருக்கும்..

சம்பள பணம்: அதன்படி 12% வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்கள் பணியில் இருக்கும்வரை இந்த பிஎஃப் கணக்கும் தொடர்ந்து அமலில் இருந்துக்கொண்டேயிருக்கும்.
ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இந்த சமூக நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஓய்வு காலத்தில் பெறும் ஓய்வூதிய நன்மைகள் தவிர பல்வேறு நன்மைகள் பிஃப் மூலம் ஊழியர்களுக்கு கிடைக்கின்றன.
ஊழியர்கள்: மாத மாதம் பிடித்தம் செய்யப்படும் பணத்தை, ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றாலும், இதற்காக ஒருகுறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும். ஒருசில காரணங்களுக்காக குறிப்பிட்ட அளவு தொகையை எடுக்க ஊழியர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக, இந்த பிஃஎப் பணமானது, தொழிலாளர்களின் முதுமை காலத்திலோ அல்லது அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காகவோ வழங்கப்பட்டு வருகிறது.. அவசர மருத்துவச் செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரை வருங்கால வைப்பு நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று 2 மாதங்களுக்கு முன்பு வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்திருந்தது.
வைப்பு நிதி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித்திட்டம் 68-J-யின்படி, தொழிலாளர்கள் அவர்களது மருத்துவ செலவுகளுக்காக, முதுமை காலத்திற்கு முன்பே வருங்கால வைப்பு நிதியிலிருந்து இந்த பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால், முன்பணம் கேட்கப்படும் எல்லாருக்குமே ரூ.1 லட்சம் கிடைத்துவிடாது... ஒருவரின் அடிப்படை சம்பளம் (Basic Pay), 6 மாதங்களுக்கான அகவிலை, வருங்கால வைப்பு நிதிக்கு அந்த நபரிடம் இருந்து செல்லும் பங்குத்தொகை மற்றும் அதற்கான வட்டி, இயந்திரம் அல்லது கருவியின் விலை - இதில் எது குறைந்த தொகையோ, 68-J மற்றும் 68-N கீழ் அந்தத் தொகை சிகிச்சை தொகையாக வழங்கப்படும்.
அதேபோல, ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்த தொகை வழங்கப்படும்.. அறுவை சிகிச்சைகள், காசநோய், தொழுநோய், பக்கவாதம், புற்றுநோய், இதயம் சம்பந்தமான நோய்கள், மனநிலை பாதிப்பு போன்ற சிகிச்சைகளுக்கு 68-J-யின் கீழ், வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இப்படி பணத்தைப் பெற மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்ட எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை.
மாற்றுத்திறனாளிகளும், தங்களுக்கு தேவையான கருவிகள் வாங்க, 68-N கீழ் இந்த தொகையை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், இதற்கு டாக்டர் சர்டிபிகேட் வேண்டும். அல்லது வருங்கால வைப்பு நிதி அதிகாரியின் சான்றிதழை ஒப்படைக்க வேண்டும்.
எப்படி பெறுவது: ஆன்லைன் மூலம் இந்த பணத்தை எப்படி எடுப்பது தெரியுமா? இதற்கு https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற லிங்கை ஓபன் செய்ய வேண்டும். அதிகார்ப்பூர்வமான வெப்சைட்டிற்குள் நுழைந்து, பாஸ்வேர்டு, கேப்ட்சா குறியீட்டை நிரப்பி உள்நுழைய வேண்டும்.
பிறகு உங்களது வங்கி கணக்கு போன்ற விவரங்களை பிழையில்லாமல் நிரப்ப வேண்டும். இதையடுத்து, "விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "online service" என்ற லிங்கை ஓபன் செய்ய வேண்டும். இப்போது, உரிமைகுரல் படிவம் 31 என்பதை ஆப்ஷனுக்குள் நுழைந்து, "proceed for online claim" என்ற லிங்க்கை ஓபன் செய்தால் உங்களது படிவம் ஆன்லைன் மூலம் உரிமையாளர்களிடம் சென்றடையும்.
இருப்பு அறியலாம்: உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை, உங்கள் செல்போனிலிருந்தே 01122901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் மூலமும், உமாங் (UMANG) என்ற ஆப் மூலமும் உங்களது பிஎப் எவ்வளவு உள்ளது? மாதம் மாதம் சரியாக பணம் செலுத்தப்படுகிறதா? பணம் எப்போது கிடைக்கும்? என்ற விவரங்களை எல்லாம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications