வங்கிக் கடன் வேணுமா? வந்தது பெரிய அறிவிப்பு.. "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் அதிரடி.. தேதி பாருங்க
சென்னை: சுயதொழில் தொடங்க விரும்புவோர் வங்கிக் கடன் பெற, "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம்களில் பதிவு செய்யலாம் என்ற மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு "மக்களுடன் முதல்வர்" என்ற புதியதிட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.. இந்த திட்டத்தின் மூலம் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மக்களுடன் முதல்வர்: மக்களின் தேவைகளை நுணுக்கமாக கவனித்து, அதற்குரிய தீர்வுகளை வழங்குவதில் ஈடற்ற அரசாகத் திகழும் நம் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பாதையில் மேலும் ஒரு மைல் கல்லாக "மக்களுடன் முதல்வர்" திட்டம் உருவாகி இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலினும் இந்த திட்டம் குறித்து பெருமிதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த திட்டத்தின் ஒருபகுதியாக, "சுயதொழில் தொடங்க விரும்புவோர் வங்கிக் கடன் பெற, சென்னையில் ஜனவரி 27-ம் தேதி வரை நடைபெறும் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம்களில் பதிவு செய்யலாம்" என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை கலெக்டர்: அந்த அறிவிப்பில், "சென்னை மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளையோரும், பொதுமக்களும், புகைப்படம், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகியஆவணங்களுடன் வந்து, மண்டல இணை இயக்குநர் அலுவலர்கள் மூலமாக இணைய தளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
அறிவிப்பு: கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு கடன் பெற்று தொழில் நிறுவனம் தொடங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ஜனவரி 27-ம் தேதி வரை நடைபெறும் "மக்களுடன் முதல்வர்" திட்டமுகாம்களில் பங்கேற்று, தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications