"விருதுநகரே விடைபெறுகிறேன்..!" வைரல் ஆகும் கலெக்டர் ஜெயசீலன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்!
சென்னை: சென்னை மாநகராட்சி இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், "விருதுநகரே விடைபெறுகிறேன்!" எனக் குறிப்பிட்டு மக்களுக்கு எழுதிய நெகிழ்ச்சி கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழநாடு முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் என 55 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு அண்மையில் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஆட்சியர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

விருதுநகரே விடைபெறுகிறேன்
தற்போது பணிபுரியும் மாவட்ட மக்கள் ஆட்சியர்களுக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பி வருகின்றனர். அந்தவகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த ஜெயசீலன் ஐஏஎஸ், தற்போது சென்னை மாநகராட்சி இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விருதுநகர் மக்களுக்கு 'விருதுநகரே விடைபெறுகிறேன்' என அவர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயசீலன் ஐஏஎஸ் தனது கைப்பட எழுதியுள்ள கடிதத்தில், "கலெக்டராக வேண்டும் என்ற கனவு பத்தாம் வகுப்பில் வந்தது. கல்வி மற்றும் கடும் உழைப்பின் வழியாக ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த பொறுப்புகளுக்குப்பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றியதை எண்ணி பெருமை கொள்கிறேன்.
ஜெயசீலன் நெகிழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் தொழில், வேளாண்மை, வர்த்தகத் துறைகளில் கடந்த ஓரு நூற்றாண்டில் நிகழ்த்திய வளர்ச்சி இம்மக்களின் உழைப்பின் சிறப்பை விளக்குகிறது. கல்வி, உயர்தொழில்கள் மற்றும் பொருளாதாரத்தில் நம் மாவட்டம் இன்றும் பல மடங்கு உயர்ந்து செழிப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

மாவட்டத்தின் அமைச்சர்கள், சக அலுவலர்கள், சார்நிலைப் பணியாளர்கள் நேர்முக உதவியாளர்கள் என அனைவரும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றியதை மகிழ்வோடு நினைவுகூறுகிறேன்.
விருதுநகர் மாவட்டத்தின் அன்பு மக்களுக்கும், என் பணிக்காலத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் , குடும்பத்தினருக்கும் என் அன்பும் நன்றியும் வணக்கமும். மாணவச் செல்வங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஜெயசீலன்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன். தனது பள்ளி படிப்பை சொந்த ஊரிலேயே முடித்த ஜெயசீலன், மதுரையில் உள்ள வேளாண் கல்லூரியில் இளநிலை பட்டமும், தமிழ் இலக்கியத்தில் முதுநிலை பட்டமும் பெற்றார். மேலும், தமிழ் சிறை இலக்கியம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வந்த ஜெயசீலன் முதல் முயற்சியில் வெற்றியைத் தவற விட்டார். இரண்டாவது முயற்சியில் இந்திய வருவாயத்துறையில் ஆணையராக பணி கிடைத்து. அதில் பணிபுரிந்து கொண்டே ஐஏஎஸ் தேர்வை எழுதிய அவர் மூன்றாவது முறை ஐஏஎஸ் பதவியை எட்டிப் பிடித்தார்.
தமிழ்நாட்டில் முதலிடம்
அகில இந்திய அளவில் 45-ஆவது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்று ஜெயசீலன் தேர்ச்சி பெற்றார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஐஏஎஸ் கேடரை சேர்ந்த ஜெயசீலன் முதலில் விழுப்புரம் மாவட்ட உதவி ஆட்சியராக பணி அமர்த்தப்பட்டார். இதை தொடர்ந்து, செங்கல்பட்டு சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அங்கு பணிபுரிந்து வந்த ஜெயசீலன், வீட்டு வசதித் துறை துணைச் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் செய்தித்துறை இயக்குநர் ஆனார்.
பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும் பணி செய்தார். அதன் பிறகு விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்தார். விருதுநகர் மாவட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளையும், எண்ணற்ற நலத் திட்டங்களையும் செய்துள்ளார். பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவது என்பன உள்ளிட்ட மக்கள் பணிகளை விரைந்து மேற்கொண்டார்.
மாணவர்களுடன் கலந்துரையாட 'காபி வித் கலெக்டர்' என்ற நிகழ்ச்சியை நடத்தினார். 2023ல் கல்விக்கும், 2024ல் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கும் சிறப்பாக பணிபுரிந்ததற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதுகள் பெற்றுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications