Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோதுமை மாவில் மகளின் உருவ பொம்மை செய்து.. காதலனுடன் ஓடிய கவிதாவுக்கு அப்பா தந்த மறக்க முடியாத பரிசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடமாநிலங்களில், காதல் தொடர்புகளை பெரும்பாலும் குடும்பமும் சமூகமும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இங்கு பழமையான நம்பிக்கைகள், குடும்ப மரபுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.. இதற்கெல்லாம் சாதி, மத விதிகளும் அடித்தளமாக உள்ளன.. இதோ ஒரு இளம்பெண் காதலித்துள்ளார். இதனால் அந்த குடும்பம் மேற்கொண்ட சம்பவங்களை பாருங்கள்.

மத்திய பிரதேசத்தின் விதிஷா என்ற பகுதியை சேர்ந்தவர் 23 வயது பெண் கவிதா. சமீபத்தில் இவர் காணாமல் போனார். அவரது குடும்பத்தினரும், சொந்தக்காரர்களும் கவிதாவை காணாமல் எங்கெங்கோ தேடினார்கள்.. ஆனால் எங்குமே அவரை கண்டுபிடிக்க முடியவில்லை..

Father Wheat Flour daughter

கவிதாவின் காதல்

அப்போதுதான் கவிதா, இளைஞர் ஒருவர் காதலித்து வந்த நிலையில், அவரையே ரகசியமாக திருமணம் செய்துள்ளது பெற்றோருக்கு தெரியவந்தது.

இதைக் கேட்ட குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.. மகளின் இந்த முடிவால் குடும்பமே சோகம், குழப்பம், துயரத்தில் ஆழ்ந்து போயின.. மகளின் முடிவை அவர்களால் எக்காரணம் கொண்டும் ஏற்க முடியவில்லை.. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தையும் அவர்களால் சமாளிக்க முடியவில்லை.

கவிதா - கோதுமை மாவு

இறுதியில், கவிதாவை தங்களது மகளாகவே அவர்களால் பாவிக்க முடியவில்லை.. திருமணமாகி சென்ற தங்களுடைய மகள், இறந்ததற்கு சமம் என்று முடிவு செய்தார்கள். எனவே தங்கள் மகள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மேலும், அவருக்கு அடையாளப்பூர்வமாக ஈமச்சடங்குகளை செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக, கவிதாவின் உருவத்தை மாவினால் உருவாக்கினார்கள்.. பாரம்பரிய முறையில் இறுதிசடங்குகள் அனைத்தையும் செய்தனர்.. அந்த உருவ பொம்மையை ஊர்வலத்தில் வைத்து, ஊர் முழுவதும் கொண்டு சென்றனர். ஊர்வலம் முடிந்த பிறகு, உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. இது பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட இறுதிசடங்கின் ஒரு பகுதியாகும்.

உருவ பொம்மை - அப்பா

மகளுக்கு இறுதி சடங்கு செய்தது குறித்து கவிதாவின் அப்பா ராம்பாபு குஷ்வாஹா செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "மகளின் முடிவால் எங்கள் குடும்பம் முற்றிலும் உடைந்துவிட்டது. இது என் வாழ்க்கையின் மிகவும் வேதனையான தருணம். எங்கள் வேதனையை இப்படி இறுதிச்சடங்கு செய்து சிறிதளவு போக்கி கொண்டுள்ளோம்" என்று கண்ணீருடன் சொன்னார்.

இந்த ஈமச்சடங்கு சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. கவிதாவின் உருவ பொம்மையை இறுதி ஊர்வலமாக கொண்டு சென்று தீ மூட்டிய காட்சிகளும் சோஷியல் மீடியாவில் வீடியோவாக பரவி வருகிறது.. இதை பார்த்து நெட்டிசன்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. காதலுக்கு இப்படியொரு எதிர்ப்பா? இவர்கள் எல்லாம் எப்போது மாற போகிறார்கள்? என்று கேட்டு கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+