காட்டேஜ்ஜில் 15 சவரன் நகையுடன் ரூம் போட்ட வியாபாரி.. திகைத்து நின்ற கேரளா போலீஸ்.. யாரந்த கள்ளக்காதலி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்காதல்கள் கொடூரங்கள் அதிகமாகிவிவிட்டதால், குடும்ப உறவுகளும் சிதைந்து வருகின்றன.. அதிலும் தமிழ்நாட்டில் கள்ளக்காதல்கள் அதிகமாகி கொண்டே வருகின்றன.. இந்தியாவிலேயே காஞ்சிபுரம் மாவட்டம்தான் கள்ளக்காதலில் முதலிடம் பிடித்துள்ளதாக செய்திகளும் வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம். அதாவது டெல்லி, மும்பையையும் தமிழ்நாடு பின்னுக்கு தள்ளிவிட்டது. ஆனால் சமீப காலமாக கேரளாவிலும் கள்ளக்காதல்கள் தலைதூக்கி வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வியாபாரி சுரேந்திரன்.. 50 வயதாகிறது. இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர்.. கொச்சி அருகே குன்னத்துநாடு கிராமத்தை அடுத்த வெங்கோலா பகுதியில் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

Cottage Room Kerala Crime

இவரது மகளுக்கு அடுத்த வாரம் திருமணம் வைத்துள்ளார்.. இதற்காக வீட்டில் 15 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் போன்றவற்றை வைத்திருந்தார்..

15 சவரன் தங்க நகைகள்

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சுரேந்திரன் திடீரென காணாமல் போய்விட்டார்..
அவர் எங்கே சென்றார்? என்றே தெரியவில்லை.. பிசினஸ் விஷயமாக சென்றால்கூட, வீட்டில் சொல்லிவிட்டு செல்பவர், இந்த முறை சொல்லாமலேயே சென்றுவிட்டது பலருக்கும் குழப்பத்தை தந்தது.. அவருடைய போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. தொடர்ந்து ஸ்விட்ச் ஆப்பிலேயே போன் இருக்கவும், குடும்பத்தினர் பயந்துபோனார்கள்,.

அப்போதுதான் பீரோவில் சுரேந்திரன் வைத்திருந்த ரூ.5 லட்சம் ரொக்கம், 15 பவுன் நகைகளும் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சமாம்... வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணத்தையும் சுரேந்திரன் எடுத்து சென்றுவிட்டாரா? எதற்காக எடுத்து சென்றிருப்பார்? எங்கே போயிருப்பார்? என்ற குழப்பமும், கலக்கமும் அடைந்தனர்..

செல்போன் ஸ்விட்ச் ஆப்

இதையடுத்து எர்ணாகுளம் புறநகர் போலீசில் குடும்பத்தினர் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் மாயமான சுரேந்திரனை தேடி வந்தனர்.. அவருடைய செல்போனையும் டிரேஸ் செய்யும் முயற்சியில் இறங்கினர்..

இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென சுரேந்திரனின் செல்போன் ஆன் செய்யப்பட்டிருந்தது. உடனே குடும்பத்தினர் பதறிப்போய் சுரேந்திரனுக்கு போன் செய்தனர்.. ஆனால் சுரேந்திரன் எந்த அழைப்புகளையும் எடுத்து பேசவேயில்லையாம்.

பத்திரமாக இருக்கேன்

பிறகு இன்னொரு செல்போன் நம்பரில் இருந்து, தன்னுடைய மகளுக்கு போன் செய்த சுரேந்திரன், "நான் பத்திரமாக இருக்கிறேன்.. எனக்கு எந்த ஆபத்தும், பிரச்சனையும் இல்லை. ஆனால் என்னை யாரும் தேடாதீர்கள்" என்று சொல்லி உள்ளார்.

இதைக்கேட்டு கலங்கிய மகள், "என் கல்யாணத்துக்காவது வாங்க..ப்பா" என்று கதறி அழுது கொண்டே கேட்டார்.. உடனே சுரேந்திரனும், சரி கல்யாணத்துக்கு மட்டும் வந்துவிட்டு போகிறேன் என்று சம்மதம் சொல்லி உள்ளார்.. அதற்குள் சைபர் கிரைம் போலீசார், சுரேந்திரன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டனர்.

லாட்ஜில் கள்ளக்காதலி

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருப்பதை கண்டுபிடித்த போலீசார், நேரடியாகவே அந்த லாட்ஜூக்கு சென்றார்கள்.. அங்கே ரூமில் சுரேந்திரனுடன் ஒரு பெண்ணும் தங்கியிருப்பதை கண்டு அதிர்ந்தனர்..

பிறகுதான், அந்த பெண், சுரேந்திரனின் கள்ளக்காதலி என்பதும், 2 பேருமே வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு, அங்கு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுதது போலீசார் சுரேந்திரனை கைது செய்து 15 பவுன் நகைகள் மற்றும் மிச்சமிருந்த ரூ.2.70 லட்சம் ரொக்கத்தை மீட்டனர்.. அத்துடன், சுரேந்திரனின் கள்ளக்காதலியை எச்சரித்து அங்கிருந்து விரட்டி விட்டனர்..

மகளுக்கு திருமணம் செய்யும் நேரத்தில், அப்பாவே கள்ளக்காதலியுடன் திருமணம் செய்து கொண்டதும், மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்தை கள்ளக்காதலிக்காக அர்ப்பணித்த சம்பவமும கேரளாவில் பரபரப்பை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+