"2 மாநில நல்லுறவை சிதைக்க முயற்சி.. போலி வீடியோவை நம்ப வேண்டாம்" பட்டென சொன்ன பீகார் அதிகாரிகள் குழு
தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர், பீகார் அதிகாரிகள் குழு செய்தியாளர் சந்தித்தனர்.
சென்னை: வட மாநில தொழிலாளர் விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர், பீகார் அதிகாரிகள் குழு செய்தியாளர் சந்தித்தனர். இரு மாநிலங்களுக்கும் இடையே நல்லுறவைச் சிதைக்கும் சிலர் முயல்வதாகவும் எந்த பிரச்சினையும் இன்றி தமிழ்நாட்டில் இருப்பதாகப் பீகார் தொழிலாளர்கள் தெரிவித்தனர் என்றும் குறிப்பிட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே வட இந்தியாவில் இருந்து பல்வேறு தொழிலாளர்கள் தமிழ்நாடு வந்து வேலை செய்து வருகிறார்கள். அதிக ஊதியம், வேலை கிடைக்கும் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள்.
பெரும்பாலும், தமிழக இளைஞர்கள் கட்டிட வேலை, ஹோட்டல் வேலை உள்ளிட்ட வேலைகளில் ஆர்வம் காட்டாத நிலையில், அந்த வேலைகளுக்கே வட மாநில இளைஞர்கள் பயன்படுத்தப்படுவதாக வணிகர்கள் கூறுகின்றனர்.

போலி தகவல்
வட மாநில தொழிலாளர்களுக்குத் தமிழ்நாட்டில் பெரியளவில் எந்தவொரு பிரச்சினையும் இருப்பதில்லை. இதற்கிடையே கடந்த சில நாட்களாகத் திட்டமிட்டு சிலர் போலி தகவல்களைப் பரப்பி வந்தனர். அதாவது தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகப் போலி வீடியோக்களை பரப்பினர். எங்கோ நடந்த சம்பவங்கள் பழைய சம்பவங்களை அவர்கள் திட்டமிட்டுப் பரப்பினர். சில வட இந்திய ஊடகங்களும் கூட இதுபோன்ற செய்திகளை வெளியிட்டன. இதனால் இது உண்மை என்ற தோற்றம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இது எந்தவொரு சலசலப்பையும் உண்டாக்கவில்லை என்ற போதிலும், வட இந்தியாவில் சற்று அச்சமடைந்தனர்.

3 நாட்கள் தங்கி ஆலோசனை
இந்தச் சூழலில் தான் பீகாரில் இருந்து தொழிலாளர்கள் குழு இப்போது தமிழ்நாடு வந்துள்ளனர். அவர்கள் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பீகார் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாகப் பீகார் பாட்னாவிலிருந்து பாலமுருகன் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் சென்னை வந்தனர்.. பிகாரில் இருந்து வந்துள்ள இந்த அதிகாரிகள் 3 நாட்கள் தமிழ்நாட்டில் தங்கி ஆலோசனை நடத்துகின்றனர்.

நல்லுறவைச் சிதைக்க முயற்சி
வட மாநிலத்தவர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை என்பதை அனைத்து நிறுவனமும் தொழிலாளர்களிடம் உறுதியளிக்க வேண்டும் என்றும் தொழிலாளர் நலத்துறை, காவல் துறை, வருவாய்த் துறை சேர்ந்த மாவட்டந்தோறும் குழு அமைக்கப்படும் என்றும் பீகார் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில கிராம வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன், "இரு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நல்லுறவைச் சிதைக்கச் சிலர் முயல்கின்றனர்..

பிரச்சினை இல்லை
பீகாரில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்களிடம் பேசினோம்.. பிரச்சினை ஏதுவுமின்றி தமிழ்நாட்டில் இருப்பதாகத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.. சிலர் மட்டும் பொய்யான வீடியோக்களை பார்த்து அஞ்சுகின்றனர். இருப்பினும் போலி வீடியோவை யாரும் நம்பக் கூடாது. அதை நம்பும் எண்ணத்தைப் போக்க வேண்டும். நாளை திருப்பூர், கோவை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.. இந்த விவகாரம் பரவ தொடங்கியது முதலே தமிழக அரசு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது... இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.

போலி வீடியோக்கள்
இது போலி வீடியோக்கள் தான். இதை யாரும் நம்பத் தேவையில்லை,.. இரு மாநிலத்திற்கு இடையே நல்லுறவு வளர்க்கும் முயற்சியாகவே நாங்கள் இப்போது இங்கே வந்துள்ளோம். மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறோம். பீகாரில் இருந்து இங்கு வந்து நீண்ட காலம் பணிபுரிந்து வந்தோரிடம் நேரடியாகவே பேசினோம். அவர்களும் இவை முற்றிலும் போலியான தகவல்கள் என்பதை விளக்கினர். எனவே, இதை நம்பத் தேவையில்லை" என்றனர்.

அச்சம் வேண்டாம்
மேலும், தமிழ்நாட்டிலும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் அதிகாரிகளும் வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து விளக்கமளித்து வருகின்றனர். இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்றும் வட மாநில தொழிலாளர்களின் பயத்தைப் போக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்தார். ஏற்கனவே, போலி வீடியோக்களை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழ்நாடு போலீஸ் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications