நீ ஏன் பேசுற உட்காரு! அண்ணாமலைக்கு சப்போர்ட்டாக வந்த நிர்வாகி? கூட்டத்தில் எகிறிய வாய்ஸ்! சலசலப்பு

திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று பாஜக கூட்டத்தில் அதன் தலைவர் அண்ணாமலை பேசிய போது சில பாஜக தலைவர்கள் அதை கலகத்துடன் மறுத்துள்ளனர்.

நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசினார். அதில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

சலாம்

சலாம்

கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை பேச்சு

இந்த நிலையில் அண்ணாமலை பேசிய போது சில பாஜக தலைவர்கள் அதை கலகத்துடன் மறுத்துள்ளனர். கரு நாகராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இதை கலக்கத்துடன் மறுத்துள்ளனர். அதில், நீங்கள் இப்படி பேசக்கூடாது. நீங்கள் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். தொண்டர்கள் சப்போர்ட் உங்களுக்கு இருக்கிறது. அதனால் நீங்கள் கட்சியில் தலைவராக தொடரலாம். நீங்கள் தலைவராகவே இருக்க வேண்டும். மற்ற கட்சிக்காக நீங்கள் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்களாம்.

 ஏன் ராஜினாமா?

ஏன் ராஜினாமா?

தொண்டர்கள் ஆதரவு உங்களுக்குத்தான் இருக்கிறது. நாம் நமது கட்சியை வலுப்படுத்துவோம். நமது கட்சியின் நலன்தான் முக்கியம் என்றும் அண்ணாமலைக்கு ஆதரவாக சில நிர்வாகிகள் பேசி இருக்கிறார்களாம். இதில் அண்ணாமலைக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு நிர்வாகி எழுந்து பேசியதும்.. நீ பேச கூடாது. உன்னால்தான் இவ்வளவு பிரச்சனை. நீ பேசாமல் அமைதியாக இரு. நீ வந்த பின்புதான் இவ்வளவு பிரச்சனை நடக்கிறது. மூத்த தலைவர்களை பேச விடு என்று கூறி இருக்கிறார்களாம்.

அண்ணாமலை ஆதரவு

அண்ணாமலை ஆதரவு

இது கேட்டதும் அந்த அண்ணாமலை ஆதரவு நிர்வாகிக்கு நெருக்கமான மற்ற நிர்வாகிகள் கோபமாக பதிலடி கொடுத்து உள்ளனர். இதனால் அங்கே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்தே வானதி சீனிவாசன் குறுக்கிட்டு, இது பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தானே. கூட்டணி குறித்து ஆலோசனை செய்யும் கூட்டம் இல்லையே. நமது கட்சியில் கூட்டணி முடிவுகளை தேசிய தலைமை தானே முடிவு எடுக்கும். நமது கட்சி தேசிய கட்சி என்பதை மறக்க வேண்டாம், தேசிய தலைமை சொல்வதைத்தான் நாம் செயல்படுத்த வேண்டும். இந்த பிரச்னையை இங்கே பேச வேண்டியதே இல்லையே. அது இப்போது சப்ஜெக்ட் இல்லையே. மாநில கோர் கமிட்டி மையக் குழு கூட்டம் நடக்கும்போது தானே இதை பேச வேண்டும். ஏன் இப்போது பேசுகிறீர்கள் , என்று கூறி இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+