செஸ் ஒலிம்பியாட் தொடர்: இன்று முதல் போட்டி.. வெற்றி கணக்கை தொடங்குமா இந்தியா! ஜிம்பாப்வேவுடன் மோதல்
சென்னை: பலரும் ஆவலுடன் எதிர்பாத்த செஸ் ஒலிம்பியாட்டில் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் A பிரிவு அணியினர் ஜிம்பாப்வே அணியுடன் மோதுகின்றன.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நேற்று மாலை பிரமாண்டமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
இந்திய பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர். மொத்தம் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.

இன்று தொடக்கம்
தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், போட்டி இன்று மாலை தொடங்குகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் தற்போதே சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது. சரியாக முதல் சுற்று போட்டிகள் இன்று மாலை 3 மணிக்கு ஃபோர் பாயின்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டில் தொடங்குகிறது. மொத்தம் 700 டிஜிட்டல் செஸ் போர்டுகள் இந்த போட்டிக்காக பயன்படுத்தப்பட உள்ளது. ஒரே நேரத்தில் இந்த 700 பலகைகளிலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1400 வீரர்களின் ஆட்டத்தை இணையதளம் வழியாக பார்த்து ரசிக்கலாம்.

இந்திய ஆடவர் அணியினர்
இதில் பலரும் ஆவலோடு எதிர்பார்த்த இந்திய ஆடவர் பிரிவின் A அணியினர் முதற்கட்டமாக ஜிம்பாப்வே அணியுடன் மோதுகின்றனர். இந்திய ஆடவர் அணியியின் A பிரிவில் செஸ் வீரர்கள் ஹரிகிருஷ்ணன், நாராயணன், விதித் குஜராத்தி, சசி கிரண், அர்ஜுன் எரிகியாசி உள்ளிட்டோர் உள்ளனர். இதில் கூடுதல் எதிர்பார்ப்பு என்னவென்றால் இந்த முறை இந்தியா எப்படியாவது தங்கம் வெல்ல வேண்டும் என்பதே. ஆனால் ரஷ்யா மற்றும் சீனா இந்த போட்டியில் கலந்துகொள்ளத காரணத்தால் அமெர்க்கா அணியினர் இதில் சம டப் கொடுப்பார்கள் என பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு வாய்ப்பா?
குறிப்பாக அமெரிக்க அணியில் 5 வீரர்களில் 4 பேர் உலக தரவரிசையில் முதல் 14 இடங்களில் இருப்பதனால், அந்த அணி தங்கத்தை வெல்லை கூடுதல் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. எனினும் சொந்த ஊரில் விளையாடி வரும் இந்திய செஸ் வீரர்களும் எப்படியாவது தங்கத்தை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தமாக அணிகளின் பலத்தை வைத்து பார்ர்கும் போது தீவிர போட்டியானது குறிப்பிட்ட 10 நாடுகளுக்குள்ளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

பெரும் எதிர்பார்ப்பு
இந்தியாவை பொருத்தமட்டில் A அணியில் நம்பிக்கைக்குரியவராக இருப்பது யார் என்றால் பி. ஹரிகிருஷ்ணன் தான். எனவே இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறும் இந்த போட்டியில் அனைவரது எதிர்பார்ப்பும் ஹரிகிருஷ்ணன் மீது இருக்கும். இதேபோல் விதித் குஜராத்தி, இளம் வீரரான அர்ஜுன் எரிகியாசி, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய எஸ்.எல். நாராயணன் மற்றும் பெரிய அனுபவம் வாய்ந்த சசி கிரண் ஆகியோரும் இந்த போட்டியில் தங்கம் வெல்லும் முனைப்பில் ஆடுவர். இன்று நடக்கும் முதல் சுற்று போட்டியில் எந்த எந்த அணிகள் வெற்றி பெறும் என்ற ஆர்வமுள்ள நிலையில், முதல் சுற்று போட்டிக்கான பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்கா மீதே அனைவரது பார்வையும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.












Click it and Unblock the Notifications