மக்கள் நீதி மய்யத்தில் 24 தொகுதிகளுக்கு இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் 24 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தாராபுரம்(தனி) தொகுதியில் சார்லி போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டாமுத்தூர் தொகுதியில் ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஸ்ரீநிதி உடுமலைப்பேட்டை தொகுதிக்கு மாற்றப்பட்டார்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம் பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சமத்துவ மக்கள் கட்சி 3 தொகுதிகளை திருப்பி கொடுத்து விட்டது. மக்கள் நீதி மய்யம் முதல் கட்டமாக 70 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. அடுத்ததாக 43 தொகுதிகளுக்கு 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் 24 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தாராபுரம்(தனி) தொகுதியில் சார்லி போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம்(தனி) - சார்லி, பவானிசாகர் - கார்த்திக்குமார், செய்யூர் - அன்பு தமிழ்சேகரன், வந்தவாசி - சுரேஷ்,
கரூர் -மோகன்ராஜ்,வானூர் - சந்தோஷ்குமார்,பாபநாசம் - சாந்தா, ஓரத்தநாடு - ரங்கசாமி, மன்னார்குடி - அன்பானந்தம், மதுராந்தகம் - தினேஷ், கீழ்பென்னாத்தூர் - சுகானந்தம், சிவகாசி குகுந்தன், பூந்தமல்லி ரேவதி நாகராஜன், ராயபுரம் - குணசேகரன், திட்டக்குடி - பிரபாகரன் வேதாரண்யம் - முகமது அலி, திருவாரூர் - கபில் அரசன் , வேப்பனஹள்ளி - ஜெயபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஸ்ரீநிதிக்கு பதிலாக ஷாஜகான் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநிதி உடுமலைப்பேட்டை தொகுதி வேட்பாளராக மாற்றபட்டுள்ளார் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications