நெருங்கும் லோக்சபா தேர்தல்! இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தள்ளிவைப்பு.. இதுதான் காரணமாம்!
சென்னை: இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதவாக்கில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும் பெயர்கள் நீக்க மற்றும் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வந்தன.

வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
திருத்தங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் மழை வெள்ள பாதிப்புகளால் விண்ணப்ப பரிசீலனை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தள்ளிப்போகிறது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பீகார், உத்தரகான்ட், ஹரியானா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப், டெல்லி ஆகிய 12 மாநிலங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி ஜனவரி 5-ல் இருந்து ஜனவரி 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications