வாக்காளர் இறுதிப் பட்டியல்: சென்னையில் புதிதாக 2.51 லட்சம் பேர் சேர்ப்பு.. மொத்தம் எவ்வளவு பேர்?
சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் 28.30 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 2,22,792 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,16,896 வாக்காளர்களும் உள்ளனர்.
தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு (SIR) இறுதி வாக்காளர் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அதேபோல், அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் முன்னிலையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் பட்டியல் வழங்கப்பட்டது.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 5.44 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகளைத் தவிர்க்கும் நோக்கில், சுமார் 97.37 லட்சம் பெயர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 18 வயது பூர்த்தியடைந்த சுமார் 66 லட்சம் புதிய வாக்காளர்கள் இந்தத் திருத்தப் பணியின் போது தங்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பித்திருந்தனர்.
பெண் வாக்காளர்கள்: சுமார் 2.77 கோடி
ஆண் வாக்காளர்கள்: சுமார் 2.66 கோடி
மூன்றாம் பாலினத்தவர்: சுமார் 8,500
வாக்காளர் பட்டியல்
கடந்த காலங்களில் இருந்த 6.41 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 5.44 கோடியாக வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இறப்பு, குடிபெயர்ந்தவர்கள் மற்றும் ஒரே நபர் இரு இடங்களில் பதிவாகி இருப்பது போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வரும் 2026 தேர்தலில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்ய உதவும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக மீண்டும் 'சோழிங்கநல்லூர்' முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 தொகுதிகளில் இறுதி வாக்காளர் எண்ணிக்கை வெளியாகி உள்ளது.
இந்த சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு முன்னதாக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் 40,04,694 வாக்காளர்கள் இருந்த நிலையில், சிறப்புத் தீவிர திருத்தம் செய்யப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 25,79,676 வாக்காளர்கள் பெயர் மட்டுமே இடம்பெற்றது. வரைவு பட்டியல் வெளியிட்ட பிறகு, 2,51,260 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை மொத்த வாக்காளர்கள்
சென்னையில் 28,30, 936 வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆண் வாக்காளர்கள்: 13,65,763
பெண் வாக்காளர்கள் :14,64,344
3ஆம் பாலினத்தவர்: 829
சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 2,22,792 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,16,896 வாக்காளர்களும் உள்ளனர்.
ராதாகிருஷ்ணன் நகர் - 1, 95,856
பெரம்பூர் - 2,22,792,
கொளத்தூர் - 2,07,251
வில்லிவாக்கம் - 1,59,764
திரு வி க நகர் - 1,78,793
எழும்பூர் - 1,34,879
ராயபுரம் - 1,56,931
துறைமுகம் 1,16,896
சேப்பாக்கம் - 1, 63,866
ஆயிரம் விளக்கு - 1,53,908
அண்ணா நகர் - 1,81,402
விருகம்பாக்கம் - 1,96,536
சைதாப்பேட்டை - 2,00,607
தி.நகர் - 1,54,943
மயிலாப்பூர் - 1,94,731
வேளச்சேரி - 2,11,691
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications