காஞ்சிபுரத்தில் நிர்மலா சீதாராமன்.. அங்கே கும்பாபிஷேகம்.. இங்கே "கருட புராணம்".. மக்களுடன் லைவ்: செம
சென்னை: அயோத்தியில் இன்று கோலாகலமாக நடக்கவுள்ள, ராமர் கோவில் திறப்பு விழாவை, காஞ்சிபுரத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பார்க்க போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடக்கிறது.. அயோத்தி ராம ஜென்ம பூமியில், ராமர் கோவில் 1800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது.. 3 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில், இன்று குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

ராமர் கோவில்: குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்யும் முக்கிய பூஜை இன்று பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, முறைப்படி கோயிலை திறந்து வைக்கிறார். பிரதமர் தலைமையில் இந்த ராம் மந்தீர் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
கும்பாபிஷேகம்: இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8,000க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2 ஆயிரம் பேர் சாதுக்கள், 5,000 பேர் பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்..
அதேபோல, நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், அனுபம் கேர், அஜய் தேவ்கான், சிரஞ்சீவி, மோகன் லால், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர், நடிகைகள் கங்கனா ரனாவத், மாதுரி தீட்சித், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் கவுதம் அதானி, அம்பானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த பாஜ தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, இஸ்ரோ தலைவர் சோம்நாத் என மொத்தம் 506 விவிஐபிக்களும், இன்றைய தினம் பங்கேற்க உள்ளனர்.
நிர்மலா சீதாராமன்: ஆனால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டும் கும்பாபிஷேக நிகழ்வுக்கு நேரில் செல்லவில்லை.. ராமர் கோவில் திறப்பு விழாவை, காஞ்சிபுரத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பார்க்க போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: "அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இதை முன்னிட்டு, ஜனவரி 22 அன்று மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்துள்ளார்.
கருட புராணம்: அயோத்தியைப் போலவே காஞ்சிபுரமும் ஏழு 'மோட்ச நகரங்களில்' ஒன்றாகக் கருதப்படுகிறது. காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் தசரத மன்னன் 'புத்திரகாமேஷ்டி யாகம்' செய்வதை விளக்கும் சிற்பம் உள்ளது. காஞ்சிபுரத்திற்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பு பிரம்மாண்ட புராணம் மற்றும் கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ராம கீர்த்தன பாராயணம், கலைமாமணி திரு நாகை முகுந்தன் அவர்களின் கம்ப ராமாயண உபந்யாசம், பத்ம பூஷண் திருமதி. சுதா ரகுநாதன் மற்றும் குழுவினரின் 'பஞ்சரத்ன கீர்த்தனைகள், பல்வேறு புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.
காணொலி காட்சி: தியாகராஜர், சதாசிவ பிரம்மேந்திரர், அருணாச்சல கவி, பத்ராசல ராமதாஸர், அன்னமாச்சார்யா, புரந்தர தாசர் உள்ளிட்ட வாக்கேயக்காரர்களின் கீர்த்தனைகளும், சிலப்பதிகாரக் காப்பியம் குறித்த நிகழ்வும் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து, அயோத்தியாவில் பிரதமர் மோடி, கலந்து கொள்ளும் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் இணைந்து காணொலிக் காட்சி மூலம் காண உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எஸ்எம்ஜி சூர்யா மஹால் அருகே அமைந்துள்ள ராஜாராம் கார்டனில் காலை 8.00 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வுகளில் அனைத்து பக்தர்களும் பங்கேற்கலாம். காஞ்சிபுரம் மகாநகர் ஆன்மீக பேரவை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
சாமி தரிசனம்: இதனிடையே, நேற்றிரவு காஞ்சிபுரம் வந்த நிர்மலா சீதாராமன், ஸ்ரீ உபாநிஷாத் மடத்திற்கு சென்றார். பிறகு, புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.
சிறப்பு தரிசனம் செய்த நிதியமைச்சருக்கு, கோயில் சார்பில் மாலை மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு, இரவில் காஞ்சிபுரத்தில் தங்கிய அவர் இன்று காலை அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அதற்காக அமைக்கப்பட்ட எல்இடி திரையில் பொதுமக்களுடன் அமர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, சிறப்பு தரிசனம் மேற்கொள்கிறார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications