நிர்மலா சீதாராமன் வீசிய வெடி.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடி வந்த காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு முரணானதாகக் கருதப்பட்ட இந்த திட்டத்தைமீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்று பாஜக கூறியிருப்பதற்கு காங்கிரஸ் தன்னுடைய வலிய கண்டனத்தை பதிவு செய்து வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு, அரசியல் கட்சிகளுக்கு எளிதாக நிதி அளிப்பதற்காக, தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) திட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்தது... ஆனால், "இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் சட்டத்துக்கு முரணானது, தகவல் அறியும் உரிமை மற்றும் பிரிவு 19 (1) (a)-க்கு எதிரானது" என்றும்கூறி, இந்த சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துவிட்டது.

Finance Minister Nirmala Sitharaman says lets come back to the Election Bond scheme and National congress condemns

அதேசமயம், தேர்தல் பத்திர விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது... இதையடுத்துதான், தேர்தல் பத்திர விவகாரம் விஸ்வரூபமெடுத்தது.

பாஜக : பாஜக அரசு கிட்டத்தட்ட ரூ.6,986.5 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்று, ஊழலில் ஈடுபட்டிருக்கிறது" என்று எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து கொண்டிருக்கின்றன.

நாளைக்கு முன்புகூட, பிரதமர் மோடி ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், "தேர்தல் பத்திரங்கள் ரத்து - பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு... ஆனால், இந்த திட்டத்துக்கு நேர்மையான பிரதிபலிப்பு கிடைக்கும்போது எல்லாருமே இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நிச்சயம் வருத்தப்படுவார்கள்.

கருப்பு பணம்: கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தபோதுதான், தேர்தல் பத்திரம் கொண்டுவரப்பட்டது.. அதுக்காக இதை முழுமையான தீர்வு என்று நான் சொல்லவில்லை. ஆனால், என்னடைய அரசால் தொடங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம், கறுப்புப் பணத்தை எதிர்த்துப் போராடியது... ஆனால் இந்த எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்புகிறார்கள்" என்று கூறியிருந்தார்.

அதிரச்சி: தேர்தல் நெருங்கிவிட்ட சமயத்தில் பிரதமரின் இந்த பேச்சு மிகுந்த அதிர்வலையை தேசம் முழுவதும் ஏற்படுத்தியது.. இப்படிப்பட்ட சூழலில், 3 வது முறையாக பாஜக அரசு அமைந்தால், மறுபடியும் தேர்தல் பத்திரத் திட்டம் கொண்டு வரப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில் "வரும் எம்பி தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டால், தேர்தல் பத்திர திட்டத்தை வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் மறுபடியும் கொண்டு வருவோம்... தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மீண்டும் திட்டம்: தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்தது,.. கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது.. எல்லாரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம்" என்று கூறியிருக்கிறார்.

நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு, காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. மூத்த தலைவர் கபில் சிபல் இதை பற்றி சொல்லும்போது, "தேர்தல் பத்திர நன்கொடை முறையை திரும்பக்கொண்டு வருவதாக நிர்மலா சீதாராமன் சொல்கிறார்.. இவங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை என்றால், இந்த தேர்தலுக்கு அவர்களிடம் பணம் இருக்கிறது... ஆனால் இதில் அவர்கள் தோற்றுவிட்டால் இன்னும் பணம் தேவைப்படும். அதுக்குதான், தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள்" என்று விமர்சித்துள்ளார்.

எதிர்ப்பு: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று சுப்ரீம் கோர்ட்டாடல் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என்று பாஜக சொல்கிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதையே பாஜக இப்போதும் விரும்புகிறது. இவர்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் எத்தனை கோடி கொள்ளையடிப்பார்கள என்பதை இந்த நாட்டு மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, நிர்மலா சீதாராமனின் கணவரான பிரகலா பிரபாகர் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "தேர்தல் பத்திரங்கள் விவகாரம் உலகின் மிகப்பெரிய ஊழல் என்பது மக்கள் அனைவருக்கும் புரிய ஆரம்பித்துவிட்டது. இந்த பிரச்னையால், பாஜக அரசு, வாக்காளர்களால் கடுமையாக தண்டிக்கப்படும்..

தேர்தல் பத்திரங்கள் விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும், தேர்தல் பத்திர விவகாரத்தால் ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்" என்று வெளிப்படையாகவே விமர்சித்திருந்தது, பலரையும் திரும்பி பார்க்க வைத்து.

பரபரப்பு: இன்றைய தினமும் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சும், அதற்கு எதிர்க்கட்சிகளின் பதிலடிகளும் பரபரப்பை தந்து வருகின்றன.. அதிலும், இப்போது நாட்டில், தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், இப்படியான பேச்சுக்கள் அரசியல் களத்தை மேலும் அனலை கக்க துவங்கியிருக்கிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+