இவர்தான் பிடிஆரின் புதிய நண்பர்.. பிரியாணி வாங்கி தந்தாராமே அமைச்சர்.. செம பூரிப்பு.. யார்னு பாருங்க
நிதியமைச்சர் பிடிஆர் தன்னுடைய புதிய நண்பரை அறிமுகப்படுத்தி உள்ளார்
சென்னை: நிதியமைச்சர் பிடிஆருக்கு ஒரு நண்பன் கிடைத்து விட்டாராம்.. அதை பற்றி ஒரு ட்வீட்டையே போட்டு பூரித்து சொல்லி உள்ளார் பழனிவேல் தியாகராஜன்..!
இப்போது கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்ததையடுத்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. ஒருபக்கம் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் மக்கள் நல அறிவிப்புகளும் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கு மா.சுப்பிரமணியம் உட்பட எல்லா துறை அமைச்சர்களுமே முக்கிய காரணம் என்பதை அழுத்தமாகவே குறிப்பிட்டு சொல்ல வேண்டி உள்ளது..!

சிறப்பான செயல்பாடு
இதில், முக்கியமானவர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்... ஆக்டிவ் அமைச்சர் என்கிறார்கள் இவரை.. தினமும் தன்னுடைய செயல்பாடுகள் குறித்தும், ஆலோசனை கூட்டங்கள், ஆய்வுகள் குறித்தும் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.. அந்த வகையிலும் பலரும் பிடிஆரின் ட்விட்டரை கவனத்துடன் உற்று நோக்க வருவார்கள்.. இந்நிலையில், திடீரென ட்விட்டரில் ஒரு நாய் உள்ளது.. அந்த நாயை பற்றிதான் ட்வீட் போட்டுள்ளார் பிடிஆர்.

நாய்
அதில், "நேற்று கோட்டையை விட்டு வெளியேறி வந்து கொண்டிருந்தேன்.. அப்போது நாய் ஒன்று 3 கால்களுடன் நடந்து வந்ததை கவனித்தேன்.. அப்போது டியூட்டியில் இருந்த பாதுகாப்பு போலீசாருடன் அந்த நாய் மிகவும் நட்பாக நடந்து கொண்டதை பார்த்தேன்.. கார் விபத்தில் அந்த நாய்க்கு பின்னங்காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை
நான் அந்த நாய்க்கு பிரியாணி வாங்கி தந்தேன்.. இன்னைக்கு பிரியாணி, நாளைக்கு அதற்கு சிகிச்சை அளிக்கப்படும்.. இது என்னுடைய புதிய நண்பன்" சொல்லி பிடிஆர் அந்த நண்பனை அறிமுகப்படுத்தி உள்ளார். இதை பார்த்ததும் பலரும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. "வாயில்லா ஜீவன்களுக்கும் அன்பு செலுத்தும் அமைச்சருக்கு நன்றி" என்றும் "முல்லைக்கு தேர் குடுத்தான் பாரி... கால் அடிப்பட்ட நாய்க்கு பிரியாணி தந்தார் எங்கள் நிதி அமைச்சர் PTR" என்றும், பதிவிட்டு வருகின்றனர்.

பிரியாணி
மேலும் சிலர், "தமிழ்நாட்டுல பல மனிதர்கள் பஸ் ஸ்டாண்டுல ரோட்டுல அடி பட்டு சாப்பாடு இல்லாம இருக்காங்க.. இந்த சூழ்நிலையை மாற்றுவீர் என நம்புகிறேன்" என கோரிக்கை விடுத்து வருகின்றனர்... இந்த செல்ல பிராணி ஒன்று, பிரியாணி சாப்பிடும் போட்டோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..!












Click it and Unblock the Notifications