தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குகீழ் வெறும் 2.2% மட்டுமே! நிதி ஆயோக் ரிப்போர்ட்டுடன் பேசிய தங்கம்
சென்னை: தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முதல்வரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் ஆளுநர் ரவி முதல் பத்தியை மட்டும் படித்துவிட்டு அதனுடன் கூடுதலாக சிலவற்றை படித்து, முழு உரையையும் படிக்காமல் புறக்கணித்துவிட்டார்.

இதையடுத்து அந்த உரையை சபாநாயகர் அப்பாவு படித்தார். அவர் படித்து முடித்ததுடன் ஆளுநரை விமர்சனம் செய்யத் தொடங்கினார். இதையடுத்து நாட்டுப் பண் தொடங்குவதற்கு முன்பே ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். அரசு தயாரித்து கொடுத்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெறும் வகையில் சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்று நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் முதல்வர் பதிலுரை ஆகியவை பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பிப்ரவரி 13 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 14 ஆம் தேதியும் விவாதம் தொடர்ந்த நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் மீண்டும் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது 2024- 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தனது முதல் முழு பட்ஜெட்டை 7 அம்சங்களுடன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அவர் தனது உரையில் முதல்வர் ஸ்டாலினால் தமிழகத்திற்கே பெருமை. காலத்தால் நிலைத்து நிற்கும் திட்டங்களால்தான் தமிழகம் வெற்றி நடை போடுகிறது. கருணையும் நிதியும் ஒரு சேர சேரும் போதெல்லாம் தமிழகம் வளம் பெறுகிறது. பட்ஜெட்டை தயாரிக்க அண்ணாவின் சொல்லோவியம் உதவியது.
100 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் தமிழகத்தை தலைநிமிரச் செய்தன. 100 ஆண்டுகளுக்கு முன்பு 1924 ஆம் ஆண்டு நடந்த நிதிநிலை அறிக்கையில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது.
1990 ஆம் ஆண்டு கருணாநிதி அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை அறிவித்திருந்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குடிசைகளே இல்லாத வகையில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முதல்வரின் தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படும். சுமார் 5 லட்சம் பேரை கண்டறிந்து வறுமையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நிதி ஆயோக் புள்ளிவிவரத்தின் படி தமிழகத்தில் 2.2 சதவீதம் பேர் மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications