தீபாவளியன்று தீபம் ஏற்றினால் இத்தனை நன்மைகளா?.. செம்ம கலெக்ஷன்ஸ் மார்க்கெட்டில் இறக்கியிருக்காங்களே!
தீபாவளி என்றாலே கொண்டாட்டத்துக்கும், குதூகலத்துக்கும் பஞ்சம் இருக்காது. புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், பலகாரங்கள் என வீடே களைகட்டிவிடும். தீப ஒளித் திருநாளில் தீபங்கள் ஏற்றுவது மிகவும் முக்கியத்துமானதாகக் கருதப்படுகிறது. வீட்டை ரம்மியமாக மாற்றுவது மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகள் தீபங்கள் ஏற்றுவதன் மூலமாக கிடைக்கிறது.
இந்த தீபாவளிக்கு ஏகப்பட்ட வெரைட்டிகளில் தீப விளக்குகள் வந்துள்ளன. என்னென்ன புதுமையான விளக்குகள் வந்துள்ளன என்பது குறித்துதெரிந்து கொள்ளலாம் வாங்க...

தீபவளியன்று மாலை நேரத்தில் தீப விளக்குகளால் அலங்கரித்தால் மிகவும் ரம்மியமாக இருப்பதோடு, ஒருவிதமான பாசிட்டிவ் எனெர்ஜியையும் உண்டாக்கும். பாரம்பரியமான மண் விளக்குகள் மூலம் தீபம் விளக்கேற்றலாம். இப்போது சாதாரமான மண் விளக்குகளுடன், ரங்கோலி டிசைன்கள் போடப்பட்ட வண்ணங்கள் நிறைந்த மண் விளக்குகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
வேக்ஸ் தியாஸ்... எனும் மெழுகுவர்த்தி விளக்குகள் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது. இந்த தீப விளக்குகள் கலர் கலராகவும், பல்வேறு டிசைன்களிலும் கிடைக்கின்றன. இந்த வகையான விளக்குகளையும் ஏற்றலாம். இதன் மூலமாக வீடே கலர்ஃபுல்லாக மாறிவிடும்.

3டி எஃபெக்ட் கொண்ட தியாக்கள் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படுகிறது. இது உங்களுடைய வீட்டின் லுக்கையே ஹைடெக்காக மாற்றிவிடும். இது கூடுதல் ஒளியை கொடுப்பதுடன், பல்வேறு டிசைன்களையும் தரையில் மிளிரச் செய்வதால் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும்.
டிரெண்டியாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் டிரெடிஷனலாகவும் இருக்க வேண்டும் என்பவர்களுக்காகவே கமலத்துடன் கூடிய விளக்குகள், ஹேண்டி கிராப்ட் தியா செட், புகையில்லாத தீப விளக்குகள், உரில் தியாஸ் போன்றவைகள் வந்துள்ளன. இவை வீட்டிற்கு ஒரு கிளாசியான லுக்கை கொடுக்கும்.
குழந்தைகள் நிறைய உள்ள வீடுகளில் விளக்கைப் பராமரிப்பது சிரமம் என்றால் பேட்டரி விளக்குகள், எலெக்ட்ரிக் விளக்குகள் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். அதேபோல, தண்ணீரில் ஒளிரும் தீபங்களும் தற்போது சந்தையில் இறங்கியுள்ளன. இதனைக் கூட நீங்கள் முயற்சி செய்யலாம்.

விளக்குகளை பராமரிப்பதற்கு சிரமப்படுபவர்களுக்கு என்றே ஒருமுறை பயன்படுத்தும் காகித தீபங்கள் பல்வேறு வண்ணங்ளில் வந்துள்ளன. அதேபோல, மயில் மற்றும் இலை வடிவிலான தீப விளக்குகள், லட்சுமி விளக்குகள் வந்துள்ளன. தண்ணீரில் மிதக்கும் மெழுகுவர்த்திகள், கண்ணாடி குடுவை தீபங்கள்
Fragrance oils - மணக்கும் தீப எண்ணெய்கள்.. ஆமாங்க வீடே களைகட்டி இருக்கும் சமயத்தில் மன அமைதியைத் தரும் வகையில் நறுமணம் கொடுக்கும் தீப எண்ணெய்கள் பல்வேறு வெரைட்டிகளில் தற்போது சந்தைக்கு வந்துள்ளன. எப்போதும் விளக்கு ஏற்றுவதற்கு தீப எண்ணெய்களைப் பயன்படுத்துவதுதான் வழக்கம். இந்த தீபாவளிக்கு நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்தி பாருங்க.. உங்களுக்கு அலாதியான அனுபம் கிடைக்கும்.

தீபாவளியன்று தீபங்கள் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்? :- வீட்டில் தீபம் ஏற்றுவதன் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் அழிக்கப்படும். தினமும் விளக்கேற்றுவது மூலம் அந்த வீட்டில் என்றென்றும் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
தீபச் சுடரின் வெளிச்சம் ஒளிரும் இடத்தில் மகாலட்சுமின் அருள் நிறைந்திருக்கம் என்பது நம்பிக்கை. மேலும், தீபம் ஏற்றுவதன் மூலம் மன அமைதி கிடைப்பதுடன், எதிர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.
எனவே, தீபாவளி தினத்தன்று வீடு முழுவதும் பல்வேறு விதமான விளக்குகளை ஏற்றிவைப்பது வழக்கம். தீபம் ஏற்றுவதற்குப் பயன்படுத்தும் விளக்குத் திரி, எண்ணெய், திசை, திரி என்பதெல்லாம் பல்வேறு நன்மைகளைத் தரும். நெய்யின் மூலம் தீபம் ஏற்றுவது நல்ல பலன்களைத் தரும். குடும்பத்தில் ஒற்றுமை, நேர்மறை சிந்தனை, நிம்மதி ஆகியவற்றை அதிகரிக்கும்.
நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். பண வரவு நிலையாக இருப்பதுடன், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். பாரம்பரியமாக பயன்படுத்தும் எண்ணெய்கள் தவிர்த்து நமக்கு பிடித்த ஃபிளேவர்களிலான எண்ணெய்களும் சந்தைக்கு வந்துள்ளன. லெமன் கிராஸ், ரோஸ், சாமந்தி, மல்லி, ஸ்டிராபெர்ரி, லைம் என பல்வேறு நறுமணங்களிலும் எண்ணெய்கள் கிடைக்கின்றன.
இந்த தீப விளக்குகளுடன் சேர்த்து கோலங்கள் இட்டும், மஞ்சள் சாமந்தி, வெள்ளை சாமந்தி, ரோஜா பூக்கள் உள்ளிட்ட மலர்களைக் கொண்டு உங்கள் வீட்டை அலங்காரம் செய்யலாம்.












Click it and Unblock the Notifications