வட சென்னை அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. மின் உற்பத்தி பாதிப்பு
சென்னை: சென்னை மீஞ்சூர் அடுத்து அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஜெனரேட்டர் ட்ரான்ஸ்பார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்ட்டு வருகிறது. இங்கு இரண்டாவது யூனிட்டில் இரண்டாவது அலகில் உள்ள ஜெனரேட்டர் செயல்பட்டு டிரான்ஸ்பார்மருக்கு மின் கடத்தப்பட்டு தேவையான அளவிற்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜெனரேட்டரின் டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அனல் மின் நிலையத்தில் உள்ள தீயணைப்பு படை வீரர்களும் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரண்டாவது யூனிட் இரண்டாவது அலகுகளில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 9 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேரம் போராடி தீயை தீ அணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications