சென்னையில் காஸ் சிலிண்டர் வெடித்து குடியிருப்புகளில் பரவிய தீ.. கடும் போராட்டத்திற்கு பிறகு அணைப்பு
Recommended Video

சென்னை: சென்னை ஒட்டேரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 8க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
சென்னை ஓட்டேரி அடுத்த பட்டாளம் சச்சிதானந்தம் தெருவில் குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அதன் கீழ்பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடிசைகள் உள்ளன. இன்று மதியம் கூமார் 12 மணியளவில் ஒரு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அதை அணைக்க அப்பகுதி மக்கள் முற்பட்டனா்.

ஆனால், காற்றின் வேகத்தால் அருகில் இருந்த குடிசைகளுக்கும் தீ பரவியது. அப்போது ஒரு வீட்டில் இருந்து அதிக சத்தத்துடன் கியாஸ் சிலிண்டா் வெடித்து சிதறியது. தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் 2 வீடுகளில் என மொத்தம் 3 வீடுகளில் அடுத்தடுத்து கியாஸ் சிலிண்டா் வெடித்தது.
இதனால், அடுத்தடுத்து 8 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. வியாசா்பாடி, பெரம்பூா், வேப்பேரி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினா் போராடி தீயை அணைத்தனா். குடிசை மாற்று வாரிய பகுதிகளில் சாலைகள் குறுகிய அளவில் இருந்ததால் தீ அணைப்பு வாகனங்களை உள்ளே இயக்கி வர சிரமம் ஏற்பட்டதால் பக்கத்தில் இருந்த உயரமான இடங்களில் இருந்து தீயை அணைத்தனா்.
நல்வாய்ப்பாக, இதில் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை. 8 குடிசைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தபட்டன. தீ விபத்துக்கான காரணம் குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்!












Click it and Unblock the Notifications