சென்னை எல்ஐசி கட்டடத்தில் திடீர் தீ.. மேல்மாடியில் பற்றி எரிந்த பெயர் பலகை.. பரபரப்பு..என்ன காரணம்?
சென்னை: சென்னை அண்ணா சாலையில் வானளவு உயர்ந்த 15 மாடி கொண்ட எல்ஐசி கட்டடம் உள்ளது. இந்நிலையில் பதான் இன்று மாலை திடீரென்று எல்ஐசி கட்டத்தின் மேல் மாடியில் பெயர் பலகை தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அண்ணாசாலையின் பழம்பெருமை வாய்ந்த எல்ஐசி கட்டடம் உள்ளது. சென்னையின் அடையாளமாக உள்ள கட்டடம் 15 மாடிகளை கொண்டது. இந்த கட்டடம் தான் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தெற்கு தலைமையகமாக செயல்பட்டு வருகிறது.
1959ல் 12 தளங்களுடன் இந்த கட்டம் கட்டப்பட்டது. அப்போது இது தான் இந்தியாவின் மிகப்பெரிய கட்டம் என பெயர் பெற்றது. அதன்பிறகு இந்த கட்டடத்தில் புதிதாக 3 தளங்கள் கட்டப்பட்டன. தற்போது இந்த கட்டடம் மொத்தம் 15 மாடிகளை கொண்டுள்ளது.

மேல்மாடியில் திடீர் தீ
சென்னை நகரில் இன்றும் கூட அண்ணாசாலையின் அடையாளமாக இந்த எல்ஐசி கட்டம் நிமிர்ந்து நிற்கிறது. இந்த கட்டத்தின் மேல்புறம் எல்ஐசி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று மாலை திடெீரென்று மேல்மாடியில் வைக்கப்பட்டு இருந்த எல்ஐசி பெயர் பலகை தீப்பற்றி எரிந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

போராடி அணைக்கப்பட்ட தீ
இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நவீன தீயணைப்பு வாகனங்களுடன் அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அடுத்தடுத்த தளங்களுக்கு தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு போராடி தீயை அணைத்தனர். வால்வோ ஏரியல் பிளாட்பார்ம் வாகனம் மூலம் தீ விரைவாக அணைக்கப்பட்டது.

மின்கசிவு காரணமா?
இருப்பினும் கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள பெயர் பலகை எப்படி தீப்பற்றி எரிந்தது? என்ற தகவல் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை துவங்கி உள்ளது. இதற்கிடையே எல்ஐசி கட்டத்தின் மேல்தளத்தில் பெயர் பலகை தீப்பற்றி எரியும் வீடியோ, போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் சென்னை அண்ணாசாலையின் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

3வது முறையாக தீவிபத்து
முன்னதாக எல்ஐசி கட்டடத்தில் கடந்த 1975 ம் ஆண்டு ஜூலை மாதம் தீவிபத்து ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் தீவிபத்து நடந்தது. இதையடுத்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் எல்ஐசி கட்டத்தில் தீவிபத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications