EXCLUSIVE: நாங்க கொஞ்சம் ஸ்லோதான்.. ஆனா சூப்பரா இருக்கு வேலை.. கலக்கும் "ஸ்விக்கி" ஜெயலஷ்மி
சென்னையின் ஸ்விகி நிறுவனத்தின் பெண் ஊழியர் ஜெயலஷ்மியின் சிறப்பு பேட்டி.
Recommended Video

சென்னை: பெண்கள்தானே என்று எங்களை யாருமே கொஞ்சம்கூட தப்பா நினைக்கறது இல்ல... ஸ்விக்கியால் எங்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரம்தான் கிடைத்துள்ளது என்கிறார் ஜெயலஷ்மி.
யார் இந்த ஜெயலஷ்மி, அது என்ன ஸ்விக்கி? ஆன்லைன் மூலம் உணவை சப்ளை செய்யும் நிறுவனம்தான் ஸ்விக்கி. ஆண்கள் மட்டுமே இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், பெண்களையும் பணியில் அமர்த்த முன்வந்தது இந்த நிறுவனம்.
இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் சேர விரும்பும் பெண்களுக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் தரப்பட்டது. பயிற்சி பெற்ற பெண்களுக்கு நிறைய வேலை வாய்ப்பினை உருவாக்கி வருவதால், ஸ்விக்கி மக்களிடையே பிரபலமாக தொடங்கியது.

பெண்கள் பாதுகாப்பு
கொல்கத்தா, கொச்சி, அகமதாபாத், புனே, நாக்பூர், மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் உணவை டெலிவரி செய்யும் பணியில் கொஞ்ச நாளிலேயே அமர்த்தப்பட்டனர். ஸ்விக்கியின் முக்கிய கொள்கையே தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களின் பாதுகாப்புதான். அதனால் இந்த விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இருந்து வருகிறது ஸ்விக்கி.

சென்னையின் முதல் பெண்
அதனால் தான் இன்றைக்கு நாடு முழுவதும் 45,000 உணவகங்களுடன் இணைந்து மிகப்பெரிய உணவு விநியோக நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் சென்னையில் பணிக்கு அமர்த்தப்பட்ட பெண்தான் ஜெயலஷ்மி.

கேஷூவல் ஜெயலஷ்மி
ஆரஞ்சு கலர் கம்பெனி டி-ஷர்ட்டுடன் கஸ்டமருக்கு சாப்பாடுடன் டூவீலரில் பறந்து கொண்டிருந்த ஜெயலஷ்மியை "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக பிடித்து நிறுத்தி பேசினோம். வேலை எப்படி இருக்கிறது, அங்கீகாரம் கிடைக்கிறதா, வேலை பாதுகாப்பாக உள்ளதா என்ற கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் கேஷூவலாக பதில் சொன்னார் ஜெயலஷ்மி. அப்போது அவர் சொன்னதாவது:

200 ஆர்டர்கள்
"நான் வேலைல சேர்ந்து ஒரு மாசம் ஆக போகுது. இதுவரைக்கும் ஹோம் டெலிவரி செய்து வருவது எனக்கு ஒரு புது அங்கீகாரத்தை தந்துள்ளது. சேர்ந்து ஒரு மாசம்கூட ஆகலை, அதுக்குள்ள கிட்டத்தட்ட 200 ஆர்டர்களை நான் செய்திருக்கிறேன்.

பகலில்தான் வேலை
இதுவரைக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் வந்தது கிடையாது. அப்படி ஒரு பிரச்சனை வரவும் வாய்ப்பே இல்லை. இதே ஸ்விக்கி டீலர்கள் இரவெல்லாம் கூட கண்விழித்து வேலை பார்ப்பார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. இந்த வேலையை நாங்கள் பகலில்தான் செய்கிறோம். எங்களுக்கு வேலை நேரமே காலையில 9 மணியிலிருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும்தான்.

ஹேப்பியா இருக்கோம்
என்ன ஒரே ஒரு பிரச்சனை என்றால், ஆண்களை விட நாங்கள் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கிறோம். அவங்க நல்லா வேகவேமாக வொர்க் பண்றாங்க. மத்தபடி இந்த வேலைல நாங்க ரொம்ப பிசியாகவும், ஹேப்பியாகவும் இருக்கோம்" என்று சொல்லி முடித்த ஜெயலஷ்மிக்கு ஒரு வாழ்த்தை சொல்லி, அவரது டூவீலருக்கு வழி விட்டு ஒதுங்கி நின்றோம்.












Click it and Unblock the Notifications