Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல் "விதை"யை வீசிய நல்லக்கண்ணு.. உடனே வைகோ.. "அங்கெல்லாம் வாங்கிடுங்க".. அதிரும் ஆளுநர் விவகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல் கையெழுத்தை மூத்த தலைவர் நல்லகண்ணு பதிவிட்டுள்ளார்..!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது... பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றன...
ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாறி வருகிறது என்று, கூட்டணி கட்சிகள் வெளிப்படையாகவே சொல்லி வருகின்றன.. இதன் எதிரொலியாகத்தான், தமிழக ஆளுநருக்காக ஒதுக்கப்பட்ட ராஜ்பவனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அன்றே குரலை எழுப்பியிருந்தது விசிக..

First Signature of Sr Leader Nallakkannu and signature movement of mdmk to remove governor ravi

அதுமட்டுமல்ல, "ஆளுநர் ஆர்என்ரவி, ஆர்எஸ்எஸ்ரவியாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. சனாதனம் பற்றி பேசிய அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தொண்டாற்ற போக வேண்டும்" என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
மாணவர் அணி: தற்போது ஆளுநர் மீதான அதிருப்திகள் வெடித்து வருகின்றன.. கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் கட்சி, திராவிடர் கட்சி உட்பட திமுகவின் அனைத்து தோழமை கட்சிகளும், ஆளுநரை, மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை அதிகமாக வலியுறுத்த துவங்கி உள்ளன.. 2 நாட்களுக்கு முன்புகூட, திமுகவின் மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு மாணவர் சங்கங்கள் போராட்டத்தில் குதித்திருந்தன. இந்த வரிசையில் மதிமுகவும் இணைந்துள்ளது.

மதிமுகவின் 29வது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரும் கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் ஆரம்பமாகி உள்ளது.. சென்னையில் வைகோ இந்த இயக்கத்தை தொடங்கி வைக்க, முதல் கையெழுத்தை பதிவு செய்தார், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு. அத்துடன், கையெழுத்து இயக்கத்தையும் துவக்கி வைத்தார்.

அப்போது நல்லகண்ணு பேசும்போது, "ஆளுநர் பொறுப்பை வைத்துக்கொண்டு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக தன்னிச்சையாக ஆர்என் ரவி செயல்படுகிறார்.. அனைத்து வகையிலும் மக்களுக்கு விரோதமான நடவடிக்கையை எடுக்கிறார்.. தனி ஆதிக்கத்தை வைத்து மாநில அரசுக்கு நெருக்கடியையும் தந்து வருகிறார்.

அவரை பதவியில் இருந்து நீக்குமாறு கையெழுத்து இயக்கத்தை வைகோ தொடங்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முதல் கையெழுத்திடுவதில் பெருமையடைகிறேன்" என்றார் மூத்த தலைவர் நல்லகண்ணு.

அதைத்தொடர்ந்து, 2வது கையெழுத்திட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.. அப்போது வைகோ பேசிய பேச்சுதான், இணையத்தில் இப்போதுவரை டிரெண்டாகி கொண்டிருக்கிறது.

தமிழக நலன்கள்: "தமிழகத்தின் நலனுக்கும் அரசியல் சட்டத்துக்கும் முதல் விரோதி ஆளுநர் ரவி. நாகலாந்து மக்களைப் போல தமிழக மக்களும் கிளர்ந்து எழ வேண்டும் என்பதற்காக கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம். மாநில நலனுக்காக மக்கள் கையெழுத்திட வேண்டும்.. ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரைதான். குடியரசு தலைவர் உரை , இயந்திய அரசு தயாரிக்கும் உரைதான்.

ஆனால், பெரியார், அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல் விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர்கள் எல்லாம் உச்சரிக்க கூடாத பெயர்களா? மார்க்சியம் காலாவதியானது என்று சொல்கிறாரே, அதைப்பற்றி இவருக்கு என்ன தெரியும்? பிறகு, அம்பேத்கர் சொன்ன கருத்து எதிராகவும் பேச ஆரம்பித்துவிட்டார்.. முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்தபோது அவர் செயலை விமர்சிப்பதற்கு இவர் என்ன எதிர்க்கட்சி தலைவரா?

ஜனநாயக விரோதம்: கவர்னர் பதவியை விட்டுவிட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்... இந்தியை திணிக்க சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? ஆளுநர் பதவியே இருக்க கூடாது.. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது.. ஆளுநர் பதவியை உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

தமிழக ஆளுநர் நீக்கப்பட்டால்தான், தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும். தமிழ்நாட்டின் முதல் விதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆர்என் ரவி... இவரை திரும்ப பெற்று, அவரது பொறுப்பில் இருந்தே நீக்க வேண்டும்.. நாகலாந்தில் இதே நாச வேலையைதான் செய்தார்.. உடனே அவர்கள் துரத்திவிட்டார்கள்.. அவரை பொறுப்பில் இருந்து நீக்க, கையெழுத்து எல்லாரிடமும் பெற வேண்டும். அரசியல் காரணத்துக்காக இல்லை.,. தமிழ்நாட்டின் நன்மைக்கே என்று சொல்லுங்கள்.

பாஜக: எங்கெல்லாம் கையெழுத்து வாங்க முடியுமோ அங்கெல்லாம் கையெழுத்து வாங்கிவிடுங்கள்.. வீடுகள், கடைகள் என ஒரு இடத்தையும் விட வேண்டாம்.. அனைத்து இடங்களிலும் கையெழுத்து வாங்குங்கள்... இது வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு இதனை தொடங்குகிறோம். திமுக தோழமை கட்சிகளும் இதனை ஆதரிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். மதிமுகவின் இந்த நிகழ்வுகளை, பாஜக கவனித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+