இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.. தமிழக அரசின் பன்னாட்டு மருத்துவ மாநாடு: சென்னையில் இன்று ஆரம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவ துறையின் எதிர்காலம் குறித்த பன்னாட்டு மருத்துவ மாநாடு, இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் நடைபெற உள்ளது. இது தேசிய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

நேற்றைய தினம் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாடு, ஜனவரி 19 துவங்கி 21ம் தேதி வரை 3 நாட்கள் நடக்க போகிறது.. இது நாட்டிலேயே மாநில அரசு நடத்தும் சர்வதேச மாநாடாகும்.. இதில் மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு அதிநவீன அமர்வுகள் நடைபெறும்..

First time in India, TN government conduct karunanidhi centenary international medical conference today in Chennai

தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் தங்கள் மருத்துவ ஆராய்ச்சிகள், மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து இந்த மாநாட்டில் தெரிவிப்பார்கள்.

வல்லுநர்கள்: மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் தொடர்பான 6 அமர்வுகள் இதில் இருக்கும். அமெரிக்கா இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து 23 சர்வதேச வல்லுநர்கள் இதில் பங்கேற்கின்றனர்.. இதைத்தவிர தமிழகத்தில் பணியாற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்களும் பங்கேற்கின்றனர்.. சிறப்பு விருந்தினராக WHO இயக்குநர் டெட்ரோஸுக்கு அழைப்பிதழ் அனுப்பியிருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சர் அறிவித்திருந்தபடியே, பன்னாட்ட மருத்துவ மாநாடு இன்று துவங்குகிறது.. சென்னை கிண்டி வர்த்தக மையத்தில், மருத்துவத்தின் எதிர்காலம் என்ற கருப்பொருளில் கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு இன்று 19ம் தேதி முதல் வருகிற 21ம் தேதி சென்னையில் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

20 குழுக்கள்: தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறது.. இந்த மாநாட்டை திறமையாக நடத்துவதற்காகவே, சுகாதாரத்துறையின் பல்வேறு உயர் அலுவலர்களை கொண்டு 20-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 11,000 பிரதிநிதிகள், 182 மருத்துவ துறையினை சார்ந்த பேச்சாளர்கள் இந்தமாநாட்டில் உரையாற்ற உள்ளனர்

சமூகத்தில் எதிா்காலத்தில் அச்சுறுத்தலாக விளங்கும் நோய்த்தொற்றுகள் குறித்தும், அவற்றை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, மருத்துவ மாணவர்களுக்கு எண்டோ பயிற்சி திட்டமும், பொதுமக்களுக்கு மேமோகிராம் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது..

ஆய்வுகள்: மருத்துவ பேராசிரியர்கள், முநிலை மருத்துவ மாணவர்கள், மருத்துவத்தின் எதிர்காலம் என்ற கருப்பொருளில் 600 அறிவியில் ஆராயய்ச்சி சுருக்கங்களை வெளியிட உள்ளனர்.

முன்னதாக, இந்த மாநாட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மாநாட்டு ஒருங்கிணைப்பு தலைவரும், துணைவேந்தருமான கி.நாராயணசாமி இது தொடர்பான ஆய்வுக்கூட்டங்களை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடத்தி வந்தனர்.. பன்னாட்டு அளவில் நடைபெறும் இந்த மாநாடு குறித்த கையேட்டினையும், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள வலைத்தளத்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்ருந்தார்.

பெருகும் ஆர்வம்: இந்திய வரலாற்றில் வேறு எந்த மாநிலத்திலும் மருத்துவம் தொடர்பான மாநாடு நடத்தப்பட்டதில்லை என்பதால், இந்த பன்னாட்ட மருத்துவ மாநாடு ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+