முதல் முறையாக அதிரடி.. கிராம உதவியாளர் வாரிசுகளுக்கும் அரசு வேலை.. திடீர்னு அறிவித்த தமிழக அரசு
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.. குறிப்பாக, இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில், 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க உள்ள விவகாரம் வருவாய்த்துறை தரப்பில் நிம்மதியை தந்துள்ளது.
கிராம நிர்வாக அலுவலர்கள்
தமிழ்நாட்டின் வருவாய் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.. தமிழக அரசு பணியில் சேரும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் என ஒவ்வொரு பணியாளர்களும், சுமார் 43 நாட்கள் அடிப்படை பயிற்சியினை பெற வேண்டும். இதற்காக 1974 ஆம் ஆண்டு அரசு பயிற்சி நிலையம் உருவாக்கப்பட்டது.

வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இருதார மணம்
குறைந்தபட்சம் 5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், அறிவிக்கப்பட்ட பதவிக்கான வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும், வண்டி ஓட்டும் திறன் இருக்க வேண்டும், இருதாரமணம் இருக்கக் கூடாது போன்றவை கிராம உதவியாளர் பதவிக்கான அடிப்படைத் தகுதிகள் ஆகும்..
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது அனைத்து பிரிவினருக்கு 21க்கு மேல் இருக்க வேண்டும் என்பது கிராம உதவியாளர் பதவிக்கான அடிப்படை விஷயமாகும்.
கிராம உதவியாளர்கள்
கிராம உதவியாளர்கள் பணியின்போது மரணம் அடைந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்..
இந்நிலையில், இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில், 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க உள்ளது... கிராம உதவியாளர்கள் பணியின்போது மரணம் அடைந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்..
பணி நியமனம்
சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர், "பணி நியமனம் செய்யும்போதே சிறப்பு காலமுறை ஊதியத்தில்தான் பணி நியமனம் செய்துள்ளனர். வருவாய்த் துறையில் மட்டும் அல்ல, மற்ற துறைகளிலும் இதே நிலைதான். முதல்வரிடம் பேசி காலமுறை ஊதியமாக மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இதுவரை கிராம உதவியாளர்கள் மரணம் அடைந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது இல்லை. 10 நாட்களுக்கு முன்பாக கிராம உதவியாளர்கள் மரணம் அடைந்தால் அவர்கள் வாரிசுகளுக்கு வேலை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கிராம உதவியாளர்கள் பணியின்போது மரணம் அடைந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும்" என்று சட்டப்பேரவையில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில், 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க உள்ள விவகாரம் வருவாய்த்துறை தரப்பில் நிம்மதியை தந்துள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications