முதல் முதலாக சாலையில் "இறங்கியடித்த" விஜய்.. அம்பேத்கர் சிலைக்கு மாலை.. நொறுங்கிய விமர்சனங்கள்
சென்னை: அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளையொட்டி, சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இது மற்ற கட்சிகளின் கவனத்தையும் பெற்று வருகிறது.
அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அம்பேத்கரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விஜய்யின் திடீர் பதிவு
இதுகுறித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சில சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணலஅம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
தலைவர்களுக்கு மரியாதை
வழக்கமாக தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளுக்கு பனையூரில் உள்ள அலுவலகத்தில் மரியாதை செலுத்தி வந்த விஜய் முதன்முறையாக வெளியில் வந்து மரியாதை செலுத்தியுள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு, அம்பேத்கரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்திய போட்டோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
விமர்சனத்தை உடைத்த விஜய்
இதற்கு காரணம், கேரவனிலேயே அரசியல் கட்சியை நடத்தி கொண்டிருக்கிறார் விஜய் என்று பல்வேறு விமர்சனங்கள் வெளளிவந்தவண்ணம் உள்ளன.. ஒவ்வொரு முறையும் தலைவர்களின் சிலைக்கு மரியாதை செலுத்தும்போது, பனையூர் ஆபீசிலேயே மரியாதை செலுத்திவிடுவார்.. இதுவும் அரசியல் கட்சிகளிடம் விமர்சனத்துக்குள்ளானது.
இதனை உடைக்கும் வகையில், முதல்முதலாக வெளியே வந்து, விஜய்.. தன்னுடைய தொண்டர்கள் அதிகம் பேர் இல்லாமல், ஒரு காரில் தவெக பொது செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட சில நபர்களுடன் திடீரென வந்த விஜய், அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி பின்னர் மாலை அணிவித்து அங்கிருந்து உடனடியாக சென்றார்.
கட்அவுட்கள்
அதுமட்டுமல்ல, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக அம்பேத்கரை அக்கட்சியின் தலைவர் விஜய் அன்றே அறிவித்திருந்தார்.. அதற்கேற்றபடி விஜய் நடத்தியிருந்த மாநாட்டு திடலில் தலைவர்களின் பிரம்மாண்ட கட்-அவுட்கள் இடம்பெற்றிருந்தன.. குறிப்பாக, காமராஜர், தந்தை பெரியார் கட் அவுட்களுக்கு நடுவே, அண்ணல் அம்பேத்கரின் பிரம்மாண்ட கட்-அவுட்களும் இடம்பெற்றிருந்தன.
அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஐந்து கொள்கைத் தலைவர்களில் ஒருவராக அம்பேத்கர் விளங்கி வருகிறார்.. முக்கியமாக, பெரியாரை முன்னிறுத்தும் போதெல்லாம, அம்பேத்கரையும் விஜய் தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார்.
ஸ்விஃப்ட் காரில் வந்த விஜய்
2 நாட்களுக்கு முன்பு, அம்பேத்கரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு விஜய் அறிவித்திருந்தார்.. பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திடலுக்கு சென்ற விஜய் அங்கு பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியிருந்ததால், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டும் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பனையூரில் சாலையோரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சென்றார் விஜய்.. கூட்டணி அரசியல் பரபரத்து வரும் நிலையில், தன் மீதான எதிர்விமர்சனங்களை நொறுக்க தொடங்கியிருக்கிறார் விஜய்.












Click it and Unblock the Notifications