அந்த "கவுன்சிலரம்மா" தெருவில் வந்தாலே "குட்மார்னிங் மிஸ்"னு சொல்றாங்களாம்..புருவம் உயர்த்தும் சென்னை
சென்னை: பெண் கவுன்சிலர் தெருவுக்குள் நுழைந்தாலே, குட் மார்னிங் மிஸ் என்று சொல்கிறார்களாம் மழலைகள்.. பதிலுக்கு குட் மார்னிங் சொல்லி, புன்னகைத்தபடி செல்கிறார் இந்த கவுன்சிலர்.. ஆச்சரியமா இருக்கா? நம்ம சென்னையில்தான்..!!கவுன்சிலர்கள் என்றாலே தனி கெத்து தான்.. தனி மவுசுதான்.. தெருவுக்குள் வந்தாலே, மொத்த பேரும் சல்யூட் வைக்கும் முக்கிய பிரமுகர்கள்.. அந்த ஏரியாவின் பெருத்த நம்பிக்கைகள்.
அதிலும் ஆளும் கட்சி கவுன்சிலர் என்றால் கூடுதல் கெத்து.. கூடுதல் மவுசு.. அவர் எங்கே நடமாடுகிறரோ, அந்த பகுதியே அமர்க்களப்பட்டுவிடும். ஆனால், இந்த நடைமுறைகளையெல்லாம் ஒரு கவுன்சிலர் நொறுக்கி தள்ளிவிட்டார்.. அதிலும் தமிழகத்தின் தலைநகரில்..!!

சென்னை மாநகராட்சி: சென்னை மாநகராட்சி 44-வது வார்டு, திமுக கவுன்சிலராக உள்ளார்.. அவர் பெயர் சர்ப ஜயாதாஸ்... மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவராகவும் இவர்.. இவர் தெருவில் நடக்கும்போதெல்லாம், அங்கிருக்கம் குட்டீஸ்கள், 'குட் மார்னிங் மிஸ்' என்று சொல்கிறார்களாம்.. பதிலுக்கு இந்த கவுன்சிலரும், குட் மார்னிங் சொல்லியபடி, புன்னகைத்து கடந்து செல்கிறாராம்.. என்ன காரணம் தெரியுமா?
இவர் தன்னுடைய வார்டில், இங்கிலீஷ் பாடம் நடத்துகிறாராம்.. அதுவும் வார வாரம், சனிக்கிழமைகளில் வார்டிலுள்ள மாநகராட்சி பள்ளியில், மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்துகிறாராம்.. இவர் இதற்கு முன்பு டீச்சராக வேலை பார்த்து வந்திருக்கிறார்..
காதல் திருமணம்: இவரது பூர்வீகம் மேற்கு வங்காளம். வங்காளிதான் தாய்மொழி. புனே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்.. தமிழ் மொழியுடன், இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஆங்கிலம், வங்காளி ஆகிய 6 மொழிகள் நன்கு தெரியுமாம்.. மேற்கு வங்காளத்தில் கேந்திரிய பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்திருக்கிறார்.. காதலித்து திருமணம் செய்துள்ளார்.
கணவர் நரேந்திரன் திமுகவில் உள்ளார் என்றாலும், இவரது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு. அதனால், தேர்தலில் போட்டியிட முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பு தந்து, கவுன்சிலராகியும் உள்ளார்..
பிடித்த வேலை: ஒரு கவுன்சிலராக மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார் என்றாலும், ஆசிரியை பணி, மிகவும் பிடித்த பணியாம்.. அதனால்தான், வார வாரம், பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லி தருவதாக சொல்கிறார்.
ஒருமுறை, அவரது வார்டிலுள்ள மாநகராட்சி பள்ளி நிகழ்ச்சிக்கு போனபோது, அங்கிருக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் தயக்கம் இருப்பதை கவனித்துள்ளார்..
அதனால்தான், நேரடியாக தானே களமிறங்கி, பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க முடிவு செய்துவிட்டாராம்.. பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அனுமதியை பெற்றுவிட்டாலும், கவுன்சிலர் வகுப்பு யார் வரப்போகிறார்கள் என்ற தயக்கமும் இருந்துள்ளது.. ஆனால், பெற்றோர்கள் முழு விருப்பத்துடனும், ஆர்வத்துடனும், பிள்ளைகளை ஆங்கிலம் கற்றுக்கொள்ள இவரிடம் அனுப்பி வைக்கிறார்களாம்.
இதற்கு முன்பு, பெரம்பூரில் ஒரு தனியார் பள்ளியில் சில வருடங்கள் ஆசிரியையாகவும் வேலை பார்த்திருக்கிறார்.. இவரது ஆர்வத்தை பார்த்து பிளே ஸ்கூல் ஒன்றை நடத்த கணவர் ஊக்கமும் தந்திருக்கிறார்.
சபாஷ் பணி: கடந்த வருடம் மட்டும் 45 குழந்தைகள் படித்துள்ளார்கள்.. தினமும் 15 நிமிடங்களாவது ஆங்கிலத்திலேயே பேச வைத்துவிடுவாராம்.. ஆனால், கவுன்சிலரை 'மிஸ்' என்று வார்டு குழந்தைகள் சொல்லும்போதெல்லாம் குதூகலமாகிவிடுகிறாராம் இந்த வங்காளத்து தமிழ் மருமகள்..!!












Click it and Unblock the Notifications