Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலாமாண்டு மாணவிகள் கவனத்திற்கு.. ரூ.1000 உதவித்தொகை.. புதுமைப் பெண் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெறுவதற்கு முதலாமாண்டு படிக்கும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகப் பல கல்வி உதவி திட்டங்களையும் அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக மற்ற மாநிலங்கள் உடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கல்வி கற்கும் விகிதம் சிறப்பாக உள்ளது.

உயர்கல்வித் திட்டம்

உயர்கல்வித் திட்டம்

இந்நிலையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மாற்றப்படுவதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். முன்னதாக இத்திட்டத்தில் பெண்களுக்குத் திருமண உதவித்தொகையும், தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றப்பட்டது.

புதுமைப் பெண் திட்டம்

புதுமைப் பெண் திட்டம்

அதன்படி 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்கள் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை இந்தத் தொகை அவர்களுக்கு வழங்கப்படும். இவை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்று பெயரிடப்பட்டது.

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000

இந்த திட்டம் கடந்த செப்.5ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாணவிகளின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை கல்லூரிகளில் 2, 3, மற்றும் 4ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பெற்று பயன் அடைந்துள்ளனர்.

 முதலாமாண்டு மாணவிகள்

முதலாமாண்டு மாணவிகள்

இந்த நிலையில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகள் உதவித்தொகை பெற http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணபிக்கலாம்?

எப்படி விண்ணபிக்கலாம்?

மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தற்போது 2,3 மற்றும் 4ம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியிருந்தால் தற்போது விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் ஆதார் அட்டை, மாற்று சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்பு உதவிக்கு

தொடர்பு உதவிக்கு

மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809, 91500 56805, 91500 56801 மற்றும் 91500 56810 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+