Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனவர்கள் நலனுக்காக திமுக அரசு செய்தது என்ன? நேரம் பார்த்து லிஸ்ட் போட்ட மீன்வளத்துறை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நடைபெறும் மீனவர்கள் சங்க மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கலந்துகொள்ளும் நிலையில், மீனவர்கள் நலனுக்காக திமுக அரசு செய்த பணிகளை பட்டியலிட்டுள்ளது மீன்வளத்துறை.

மீன் பிடித்தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தியது முதல் மீனவ சமுதாய மாணவர்களுக்கான திட்டங்கள் வரை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரம் வருமாறு;

Fisheries department has listed the works done by DMK government for the welfare of fishermen.

தமிழ்நாடு நீண்ட நெடிய கடற்பகுதியைக் கொண்டிருப்பதால் , மீன்பிடித் தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்களின் நலனைக் காக்கும் வகையில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண உதவித் தொகையை ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மீன்படி படகுகளுக்குத் தேவையான டீசல் வாங்குவதற்கு விற்பனை வரியின்றி ஆண்டொன்றுக்கு 22 ஆயிரம் லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டர் டீசலும், நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டர் டீசலும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இரண்டு நிதி ஆண்டுகளில் மொத்தம் 2.06 லட்சம் கிலோ லிட்டர் டீசல் வரியின்றி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு வரி விலக்கு அளித்த தொகை ரூ. 369.01 கோடியாகும்.

நாட்டுப் படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்துகிறது. இதன்படி லிட்டர் ரூ. 25 விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. 2021-22 மற்றும் 2022-23- ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளில் மொத்தம் 33,233 லிட்டர் மண்ணெண்ணெய் ரூ. 164.97 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

படகுகளுக்குத் தேவையான இயந்திரங்கள் வாங்குவதற்கு மானிய உதவியை அரசு அளிக்கிறது. இயந்திரங்களின் விலையில் 40 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. நாட்டுப்படகுகளுக்கு மாற்றாகக் கண்ணாடி இழைப் படகு வாங்கவும் மானியம் அளிக்கப்படுகிறது. படகு, இயந்திரம், வலைகள், பனிக்கட்டி பெட்டி ஆகியவை வாங்கவும் அரசு மானிய உதவி அளிக்கிறது.

மீன் வளத்தைப் பாதுகாக்க புதிய தூண்டில் மீன்பிடிப்பு மற்றும் செவுள் வலை சூரை மீன்பிடி படகு கட்டுவதற்கு 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி 105 படகுகள் கட்ட ரூ. 29.35 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளது.

கடற்பாசி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கடற்பாசிப் பூங்காவை அரசு ரூ. 127.71 கோடி மதிப்பீட்டில் உருவாக்கி வருகிறது. மேலும், மீனவ மகளிருக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கும் விதமாக ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மகளிர் 1,311 பேருக்குக் கடற்பாசி வளர்ப்பு மிதவைகள் மற்றும் கயிறுகள் வாங்க ரூ. 1.42 கோடி மானிய உதவி அளிக்கப்பட்டுள்ளது.

இறால் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் 100 ஹெக்டேர் பரப்பில் புதிய இறால் பண்ணைகளை அமைக்க நடப்பு நிதி ஆண்டில் ரூ. 14 கோடி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், நவீனத் தொழில்நுட்பத்தில் குறைந்த அளவு நீர் பயன்பாட்டில் இறால் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ. 4.50 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளது.

மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற ஏதுவாக 6 மாதச் சிறப்புப் பயிற்சியை இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி நிறுவனம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சமுதாய மாணவர்கள் கடல்சார் படிப்புகளை மேற்கொள்ள வசதியாக 88 மாணவர்களுக்கு ரூ. 27.75 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கடலோர உயிர் பாதுகாப்புப் பயிற்சி வழங்க ரூ. 47.20 லட்சம் செலவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மீனவ நல வாரியம் மூலம் 9,547 உறுப்பினர்களுக்கு ரூ. 12.43 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+