Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

75 சதவீதம் மானியத்தில் மீனவர்களுக்கு லைஃப் ஜாக்கெட்.. 3000 பேருக்கு விரைவில் வழங்கும் தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய மீனவர்களின் நலனில் தமிழக அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது.. அந்தவகையில் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மீண்டும் ஒரு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.. இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் சொல்வதென்ன? விரிவாக பார்ப்போம்.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அரசு பல விதமான அறிவிப்புகளை, மானியங்களை வழங்கி வருகிறது.

குறிப்பாக, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மற்றும் மீனவ பெண்களுக்கு குளிரூட்டப்பட்ட 4 சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், குளிர் சாதன பெட்டியுடன் கூடிய 2 சக்கர வாகனம், கூண்டுகளில் கடல் மீன் வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு, மகளிர்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோ, FRP படகு இஞ்சின் வலை, VHF படகுகளுக்கான வெளிபொருத்தும் இயந்திரம் போன்றவையும் மானியத்தில் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, மீன், கருவாடு வியாபாரம், விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு பழுதுபார்த்தல் ஆகியவற்றிற்கு கே.சி.சி கடன் பெற்று வழங்கிட ஏதுவாக விண்ணப்பங்களை வங்கிகளுக்கு பரிந்துரைத்து செய்து கடன் பெற்று தரப்படும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 2 நாட்களுக்கு முன்புகூட அறிவிப்பு வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.

உயிர் காக்கும் கவசங்கள்

இந்நிலையில், மீனவர்களுக்கு உயிர் காக்கும் கவசங்கள் வழங்குவது குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.கடலில் மீன்பிடிக்கும் போது இயற்கை சீற்றங்கள் அல்லது விபத்து உள்ளிட்ட காரணங்களால் படகு கவிழ்ந்து அல்லது படகில் செல்லும் போது தவறி விழுந்து மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று விடுகின்றன..

இந்த அசம்பாவிதங்களை தவிர்க்க படகில் செல்லும் அனைவரும் கட்டாயம் உயிர் காக்கும் கவச உடையான "லைஃப் ஜாக்கெட்"டை அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

லைப் ஜாக்கெட்டுகள்

தமிழக அரசு சார்பில் மீனவர்களுக்கு, 24,000 லைப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக கடந்த மார்ச் மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த லைப் ஜாக்கெட்டுகளை பெற, பதிவு செய்யப்பட்ட நாட்டுப் படகு வைத்திருப்போர் அந்தந்த மாவட்ட மீன்வள அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஒரு படகுக்கு 4 லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படும். ஒன்றின் விலை ரூ.2,472. இதில், 75 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில், தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் நாட்டுப் படகு உரிமையாளர்கள் பயன் பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

75 சதவீத மானியம்

இந்நிலையில், தமிழக நாட்டுப்படகு மீனவர்களுக்கு, 75 சதவீத மானியத்தில் வழங்க, 3000 லைப் ஜாக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டு உள்ளார்கள். ஒரு படகிற்கு 4 லைப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படும். ஒன்றின் விலை 2,472 ரூபாய். மானியத்தொகை 75 சதவீதம் போக, மீதி 618 ரூபாயை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, இதுவரை, 21,000 லைப் ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் 3,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே அந்த மீனவர்களுக்கும் லைப் ஜாக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன; விரைவில் அவைகளும் வழங்கப்பட்டு விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+