Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் முடிவு.. ஆனால் கடலுக்கு செல்ல முயன்ற கடலூர் மீனவர்களுக்கு ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன்பிடி தடைக்காலம் முடிந்து நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், விசைப்படகு மீனவர்கள் மீண்டும் தொழிலுக்கு செல்ல ஆயத்தமாகினர். இந்நிலையில், வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதன் எதிரொலியாக, கடலூர் துறைமுக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த காலமாக மீன்வளத் துறை ஆய்வு செய்து கண்டறிந்து அறிவித்துள்ளது. எனவே, இந்த காலகட்டத்தில், மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால், அதற்கு இடையூறு ஏற்படாத வகையில், கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகளுக்கு தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

Fishing Resumes in Bay of Bengal but Cuddalore Faces Fresh Ban Amid Cyclone Alert

அந்த வகையில், தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியான வங்கக்கடலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14 ஆந் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவது இல்லை.
ஆரம்பத்தில் 45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த சில ஆண்டுகளாக 61 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி கிராமம் வரை 1,076 மைல் தொலைவுள்ள கிழக்கு கடலோர பகுதியில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனால், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 12 மாவட்டங்களில் 6,700 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையில் ஓய்வெடுத்து வந்தன. அதே நேரத்தில், கரையில் இருந்து 3 மைல் தொலைவுக்கு ஃபைபர் படகுகள், கட்டுமரங்களில் சென்று மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிறிய படகுகளில் குறைவான தூரத்தில் சென்று மீன்பிடித்தபோது, சிறிய அளவிலான மீன்களே கிடைத்தன. அதனால், பெரிய சைஸ் மீன் பிரியர்களின் தேவைகளுக்கு மேற்கு கடல் பகுதியான அரபிக்கடலில் பிடிக்கப்படும் மீன்கள் ஐஸ் கட்டி துண்டுகளால் பதப்படுத்தி கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதனால், மீன்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மீன் பிரியர்களும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், விசைப்படகு மீனவர்கள் மீண்டும் தொழிலுக்கு செல்ல ஆயத்தமாகினர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோர மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் உற்சாகமாக மீன்பிடிக்கச் செய்தனர்.

தடைக்காலம் நிறைவுப்பெற்றதும் நள்ளிரவில் மீன்பிடிக்க கடலுக்கு உற்சாகமாக புறப்பட்டனர். இந்நிலையில், வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதன் எதிரொலியாக, கடலூர் துறைமுக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க செல்லக் கூடாது என கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அறிவித்ததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் நாள் கடலுக்குச் செல்ல முடியாமல் மீனவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதேபோல், புதுச்சேரி, காரைக்கால் மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது விசைப் படகுகளை துறைமுக முகத்துவாரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+