பிச்சை எடுப்பதை தடுத்தல் மசோதா சட்டசபையில் தாக்கல்.. இன்று 5 மசோதாக்களை அறிமுகம் செய்த அமைச்சர்கள்
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று 5 சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிச்சை எடுப்பதை தடுத்தல் சட்ட முன்வடிவை இன்று சட்டசபையில் அறிமுகம் செய்தார் அமைச்சர் கீதா ஜீவன். வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கியது. நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் ஒலிக்கப்படாததால் உரையை வாசிக்காமல் சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளியேறினார். பின்னர், ஆளுநரை உரையை அவர் படித்ததாக பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரையை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார்.

பின்னர் சட்டப் பேரவையிலிருந்து அதிமுக, பாஜக, பாமக கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. அதன்பிறகு அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் சட்டப் பேரவை கூட்டத்தொடரை ஜனவரி 24 ஆம் தேதியான இன்று வரை நடத்த அலுவல் ஆய்வு கூட்டம் முடிவு செய்தது.
இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடரின் 5-வது நாள் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். மேலும், 5 சட்ட முன்வடிவுகள் இன்று தமிழக சட்டசபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிச்சை எடுப்பதை தடுத்தல் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார் அமைச்சர் கீதா ஜீவன்.
2026 ஆம் ஆண்டு நீர்வளங்கள் சட்ட முன்வடிவு, தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தச் சட்ட முன்வடிவு, தமிழ்நாடு வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்தல் சட்ட முன்வடிவு, பள்ளிகள் கட்டண திருத்தச் சட்ட முன்வடிவு ஆகியவற்றை துறை சார்ந்த அமைச்சர்கள் இன்று அறிமுகம் செய்துள்ளனர்.
இன்று சட்டசபையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிலுரை ஆற்றினார். ஆனால், முதலமைச்சரின் உரையை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க புறக்கணித்தது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க உறுப்பினர்கள் யாரும் இன்று அவைக்கு வரவில்லை.












Click it and Unblock the Notifications