ஒற்றை தலைமை என்ற விவாதமே இல்லை.. 5 தீர்மானங்களுடன் அதிமுக கூட்டம் நிறைவு
அதிமுக கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Recommended Video
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை கழகத்தில் நடந்து முடிந்தது. இதில், மிக முக்கியமாக 5 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை என ஒன்றரை மணி நேரம் ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்தது.

இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தல் தோல்வி குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கூட்டத்தின் இறுதியில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற உறுதியேற்பது, உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை இவைகள்தான்:
தீர்மானம் 1: நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கும், கழக தலைமையில் அமைந்த கூட்டணியின் வேட்பாளர்களுக்கும், வாக்களித்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு இந்த கூட்டம் நன்றி தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம் 2: அதிமுக சார்பிலும், கூட்டணி கட்சி சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், மன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய நிர்வாகிகள், உடன்பிறப்புகள், கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள், தோழமை கட்சி தலைவர்கள், தொண்டர்கள், மற்றும் ஆதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் இந்த கூட்டம் நன்றி தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம் 3: நாடாளுமன்ற மக்களை பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை அமைத்திருக்கும் பாஜக, இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அதிமுகவுக்கு அளித்தமைக்கு இந்த கூட்டம் தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம் 4: தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றிய அதிமுக தலைமையில் வெற்றி பெற்றதை போன்ற மகத்தான வெற்றியை பெற்றிட இந்த கூட்டம் உறுதி ஏற்கிறது. உள்ளாட்சி மன்ற தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க இந்த கூட்டம் சூளுரைக்கிறது.
தீர்மானம் 5: தமிழ்நாட்டின் தன்னிகரில்லா இயக்கமான அதிமுக கழக நிறுவன தலைவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வகுத்து தந்த ஏழை, எளியோருக்கம், தாய்க்குலத்திற்கும் தொண்டாற்றும் தூய அரசியல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும், இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் வழியில் மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு தமிழக மக்கள் எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ்ந்திடும் வண்ணம் செயல்படவும் இந்த கூட்டம் உறுதி ஏற்கிறது"
இவ்வாறு அந்த தீர்மானங்கள் நிறைவேறி உள்ளன. எனவே ஒற்றை தலைமை குறித்து வேறு எதுவும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications