முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டேன்- சட்டசபையில் அன்று எச்சரித்த ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து மதுரை மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை மத்தியில் ஆளும் பாஜக அரசு ரத்து செய்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "நான் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கும் வரை நிச்சயமாக டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டேன்" என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து அரசினர் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்ததாவது: இங்கு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் நாடாளுமன்றத்தில் உங்கள் உறுப்பினர்கள் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பெருமை பேசுகிறீர்களே, என்ன செய்தீர்கள் என்ற ஒரு கேள்வியைக் கேட்டார்கள். எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலே கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.

நான்கூட, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார் என்று பொறுமையாக இருந்தேன். ஆனால், இப்போது நான் விவரத்தைக் கேட்டு ஆதாரத்தோடு சொல்கிறேன். நாடாளுமன்றத்திலே எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக இதை எதிர்த்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; அங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில், அந்த மாவட்டத்தில் அமைச்சராக இருக்கக்கூடிய மூர்த்தி அவர்கள் நேரடியாகச் சென்று, அந்தப் போராட்டத்தின் தன்மையைப் பற்றி அறிந்துகொண்டு, "போராட்டத்தை நிறுத்துங்கள்; எங்கள் அரசு உங்களுக்கு ஆதரவாக இருக்கும்" என்று சொன்னார்.
அதோடு, இது தொடர்பாக முதலமைச்சர் அவர்களும் இந்தியப் பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்று சொல்லி, சட்டமன்றத்தில் இதுகுறித்து தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் என்பதையும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடத்தில் சொல்லி, அதற்குப் பிறகுதான் இந்தத் தீர்மானம் இங்கு வந்திருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வளவு வேகமாகப் பேசிவிடுகின்ற காரணத்தால் ஏதோ சாதித்துவிட்டோம் என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம். நிச்சயமாகச் சொல்கிறேன்; உறுதியாகச் சொல்கிறேன். நாங்கள் அவ்வப்போது தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறோம்; எங்களுடைய கண்டனக் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல; போராட்டக்களத்தில் ஈடுபட்டிருப்பவர்களிடத்தில்கூட நம்முடைய அமைச்சர் அவர்கள் பேசுகின்றபோது, சட்டமன்றம் கூடுகின்றபோது இதுபோன்ற ஒரு தீர்மானத்தை அவையில் கொண்டு வருவோம் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதோடு, ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதுகின்றபோது, அதுதொடர்பான செய்தி வெளியீடுகளில் இந்தியப் பிரதமர் அவர்களுக்கு, முதலமைச்சர் அவர்கள் இதுசம்பந்தமாக கடிதம் எழுதியிருக்கிறார் என்கிற செய்தியெல்லாம் விவரமாக வந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இதுகுறித்து தெரியவில்லை, தெரியவில்லை என்று பேசினால், என்ன அர்த்தம்?
நாடாளுமன்றம் கூடி, கூடி கலைந்துகொண்டிருக்கிறதே தவிர, அங்கே தொடர்ந்து அவை நடவடிக்கைகள் நடந்ததாக நமக்கு இதுவரையில் செய்தி வரவில்லை. ஆனால், கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி, அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறோம். நாடாளுமன்றம் கூடுகிறது; ஆனால், அவையை ஒத்திவைக்கிற சூழ்நிலைதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறதே தவிர, தொடர்ந்து அவை நடக்கவில்லை. இதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பத்திரிகையில் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். நான் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கும் வரை நிச்சயமாக டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications